நாக்கு வழிப்பது பற்றி பலவித நம்பிக்கைகள் நம்மிடையே உள்ளன.
ஏதாவது ஒரு படிப்பைத் தரக்குறைவாகப் பேச வேண்டுமொனில் அந்த படிப்பு நாக்கு வழிக்கக்கூட உதவாது எனச்சொல்லவது வழக்கமான நிகழ்வு. உண்மையிலேயே நாக்கு வழிப்பது (அழுக்கை நீக்குவது)அவ்வளவு மோசமானதா? அதனால் உபயோகம் இல்லையா? கருநாக்கு எதனால் ?என இனி பார்ப்போம்.
அண்ட சராசரங்களில் உள்ள நட்சத்திரங்கள், கோள்களை விட அதிக நுண்ணுயிர்கள் மனிதனின் வாயில் இருக்கின்றன என்ற உண்மை நமக்கு தெரியாது. மனிதகுல வளர்ச்சியின் முக்கிய அங்கமாக மனித இனப்பெருக்கம் தழைக்க சரியான உணவு அடிப்படைத்தேவையாக இருந்தது. உணவு சீரணம் ஆக.முதற்கட்டமாக உணவினை கடித்து அரைக்கும் முதல் ஆலையாக வாயும் பற்களும் நாக்கும் விளங்கின. நாம் உண்ணும் உணவு ,அருந்தும் பால் மற்ற பொருள்கள் அதனுடைய நிறம், தன்மை, அதில் உள்ள வேதிப்பொருட்கள் வாய் எச்சிலில் கலக்கின்றன. தாய்ப்பால் குடிக்கும் குழந்தையின் நாக்கிலும் கூட வெண்மையான படலம் படிகிறது உண்ணும் உணவின் நிறமிகளும் நாக்கில் அப்பிக் கொள்கின்றன

சிலநேரங்களில் பூஞ்சைக்காளான் நோய் பாதிக்கப்பட்ட நாக்கு முழுதும் தயிர் போன்ற படலம் இருக்கிறது .

சிலருக்கோ பூகோள வரைபடம் போல் நாக்கில் வெள்ளையும் சிகப்பும் மாறி மாறி இருக்கக்கூடும் .
நன்றி விக்கிபீடியா

சில நோய்களில் வெளுத்தும் , விளங்கும். மேல் பகுதி வழு வழுவென்று இருக்கும்

நன்றி டெய்லி மெயில் பி 12 உயிர்ச்சத்துக்குறை

.சிவந்த கோபக்கார தோற்ற நாக்கு

ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறையும் போது நாக்கு நீல நிறமாக மாறும். இருதயப் பிரச்சனைகள்,இரத்தத் தில் மெத்ஹீமோகுளோபின் இருப்பின்,சில வகை விஷஙுகளை உட்கொண்டால் நாக்கும் உதடும் நீல நிறத்தில் மாறும். . மருந்துகள் பூச்சிகள் அல்லது ஏதாவது அலர்ஜி ஏற்பட்டால் நாக்கு தடிக்கும் வீங்கியும் போகும் மூச்சுவிட சிரமமாகும். நாக்கிலுள்ள வெள்ளை படலப் பூஞ்சையினால் வாய் துர்நாற்றம் ஏற்படலாம்


நாக்கினைச்சுத்தம் செய்வது ஏதோ புதிதாக நாம் கண்டுபிடித்தது அல்ல.நாக்கினைச்சுத்தம் செய்வது ஏதோ புதிதாக நாம் கண்டுபிடித்தது அல்ல. பல்லாண்டு காலமாக மக்கள் நாக்கினை சுத்தம் செய்து வந்திருக்கிறார்கள் என்பது எகிப்து மற்றும் சீனத்தில் நடந்த அகழாய்வில் கிடைத்த நான்கு சுத்தப்படுத்தும் கருவிகள் மூலம் நமக்கு தெரிகிறது

இந்தியாவிலும் பலவிதமான கொடிகளையும் பொருட்களை உபயோகப்படுத்தி நாக்கினை சுத்தம் செய்யும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது

எந்த ஒரு செயலுக்கும் பயன் இருக்கிறதா என்பதனை அறிவியல் பூர்வமாக இதுவரை பதிப்பிக்கப்பட்ட அறிவியல் அறிக்கைகளைநாளை அலசுவோம்.
