ஏனெனில் அவைகளில் கால்சியம் சத்து இருக்கிறது என்பதுதான் காலங்காலமாக நமக்குச் சொல்லப்பட்டு வந்து கொண்டிருக்கிறார் ஒரு அறிவியல் செய்தி .இதைத்தொடர்ந்து தான் நிறைய பெற்றோர்கள் பால் பொருட்களை குழந்தைகளுக்கு ஒரு வயதிற்கு மேற்பட்டோ அல்லது ஆறு மாதத்திலிருந்து தர ஆரம்பிக்கிறார்கள்
பால் கொடுத்தால் மட்டும்தான் குழந்தைக்கு கல்சியம் கிடைக்குமா? உடல் வளர்ச்சி அடையுமா? கீரைகளில் இருக்கும் கால்சியம் சத்து உடம்பில் சேராதா? தாய்ப்பால் மட்டுமே 2 வயது குழந்தைக்கு போதுமா ?இல்லையா ?தயிர் சாதம் தருவதால் மட்டும் குழந்தையின் குடல் நன்கு ஜீரணசக்தியை பெருமா ? என்பது போன்றி விஷயங்களையெல்லாம் இனி நாம் பார்ப்போம்
முதலில் இதை ஏன் இந்தத் தலைப்பினை எடுத்துக்கொண்டோம்?
- நிறைய குழந்தைகளுக்கு ஆறுமாதத்திற்கு பின் வீட்டு உணவு தராமல் வெறும் பால் பொருட்களை மட்டும் தந்து வேறு உணவுகளை பழகுவதில்லை அதன் காரணமாக இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்கள் குறைபாடு ஏற்பட்டு வளர்ச்சி பாதிக்கப்படுகிறது ,கற்றுக்கொள்ளுதல் மற்றும் அறிவுத் திறன் பாதிக்கப்படுகிறது
- காலம்கடந்து மீண்டும் போதுமான அளவு இரும்புச்சத்து களையோ தந்தபோதிலும் கூட பாதிக்கப்பட்ட அறிவு வளர்ச்சியில் மாற்றம் ஏற்படுவதில்லை என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை .எனவே பால் பால் பொருட்கள் கட்டாயம் தர வேண்டும் என்ற எண்ணத்தை விடுத்து என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்
- 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே போதும் ஆறு மாதத்திற்கு பின்பு தாய்ப்பாலுடன் வீட்டு உணவைத் தரவேண்டும் வீட்டு உணவு தருவது என்பது உணவினை உண்ணும் உணவினை காரம் ,இனிப்பு சேர்க்காமல் அப்படியே பல்லில்லாத குழந்தைக்கு விழுங்கும் வண்ணம் உள்ளதாக நன்கு கடைந்து தரலாம் .சிலர் கேட்பார்கள் மிக்ஸியில் அடித்து தரலாமா என்று ?மிக்ஸியில் அடித்து உங்கள் உணவை சாப்பிட்டு பாருங்கள் அப்போது புரியும் ஏன் மிக்ஸியில் அடித்து சாப்பிடுவது அவ்வளவு உகந்தது அல்ல என்று ருசி ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் அனைத்து உணவுகளும் ஒரே ருசியில் தினந்தினம் இருந்தால் குழந்தை சாப்பிடுவதற்கு விரும்பாது
- எனவே ஒவ்வொரு உணவையும் தனித்தனியாக நன்கு பிசைந்து கைகளால் தருவது மிக நல்லது பால் பொருட்களில் உள்ள கால்சியம் சத்து புல் ,பூடு மற்றும் தட்டை உண்டு மாட்டிற்கு கிடைக்கிறது. தேவையான கால்சியத்தை மாடு, எருமை தாவரங்களிலிருந்து எடுத்துக் கொள்ளும் போது ஏன் மனிதனால் எடுத்துக்கொள்ள முடியாது
- கீரைகள் மற்றும் காய்கறிகள் உள்ள ஆக்சிலேட் மற்றும் பைடேட் கால்சியத்தை உறிஞ்சி எடுத்துக் கொள்வதற்கு தடையாக உள்ளது..இருந்த போதிலும் கூட போதுமான அளவுக்கு தேவையான கால்சியம் எத்தனை ஆண்டுகளாக நம் முன்னோர்களுக்கு கிடைத்திருந்தமைக்கு பாரம்பரிய சமைத்தல் காரணமாக இருந்திருக்கலாம்.
- பால் புரத (அலர்ஜி) ஒவ்வாமை காரணமாக குடலில் இரத்தக் கசிவு ஏற்படும் இரத்த சோகை நோய் அதிகமாகிக் கொண்டே உள்ளது
- புட்டியில் பால் குடித்து பழகிய குழந்தை மென்று சாப்பிடப் பழக சிரமப்படுகிறது தூங்கும் போது புட்டிப்பால் தருவதுபற்களில் சொத்தை ஏற்படும் பல்லில் ஏற்படும் சொத்தை மிகப் பெரிய நோய்களுக்கு ஒரு ஊன்றுகோலாக இருக்கும் காரணகர்த்தாவாக இருக்கும் என்பது நிறைய ஆராய்ச்சிகள் மூலம் வெளிப்படையாக தெரிகிறது
- பாலில் சர்க்கரை சேர்ப்பதால் எடை ஏறுவது நம்மை அறியாமலே நடந்துகொண்டிருக்கிறது பாலில் சேர்க்கும் சத்துப்பானகப்பொடிகளில் ஏதாவது இருக்குமா ?என்ற உங்கள் வீட்டில் உள்ள ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா ,உள்ளிட்ட அட்டைப்பெட்டி எடுத்து படித்து பார்த்தால் நமக்கு விளங்கும் .நீங்கள் வழக்கமாக போட்டுத் தரும் ஒரு தேக்கரண்டிஅளவினால் எந்த பலனும் இருக்காது குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 40 லிருந்து 60 கிராம் அளவுக்கு அதாவது ஒரு பெட்டி நீங்கள் வாங்கினால் ஒரு குழந்தைக்கு நான்கு நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் நீங்கள் போடும் ஒரு ஸ்பூனில் எந்த சத்தம் இருக்காது
- எனர்ஜி டிரிங்க் என்று விற்கப்படும் பொடியிலுள்ள நிறமூட்டிகள் மணமூட்டிகள் ,சர்க்கரை ,வாசம் மட்டும் உங்கள் குழந்தை சாப்பிடும் பாலில் சேரும் . . எந்த சத்தும் கூடாது
- எனவே நல்ல வளர்ச்சிக்கு சரிவிகித உணவு ,தொடர்ந்து 2 வயது வரை தாய்ப்பால் தருதல், பருப்பு, பயறு வகைகள் இரண்டு வயதுக்கு மேலே மற்றும் பால் பொருட்களை சேர்த்தல் ,கீரை காய்கறிகளை முடிந்தவரை சேர்த்தல் ,பழங்கள்( உங்கள் பகுதிகளில் கிடைக்கக்கூடிய கொய்யா பப்பாளி வாழைப்பழத்தை )சேர்த்தல் இவையே உதவிசெய்யும்
