childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

கார்ட்டூன் பார்ப்பது குழந்தைகளுக்கு கெடுதலா?

1 min read

CARTOON 3

கார்ட்டூன் அலைவரிசையைத் தொலைக்காட்சியில் இக்காலக் குழந்தைகள் மிகவும் விரும்பிய பார்க்கின்றனர். இக்கார்ட்டூன் சித்திரங்களில் வன்முறையும், தீயழவன்மச் சொற்களும் நிறைந்து காணப்படுகின்றன.  இது பார்க்கும் குழந்தைகளின் மனதில் எதிர்மறை விளைவுகளை உண்டாக்குகிறது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்  குழந்தைகளின் மனதில் தீய,வன்முறை எண்ணங்களை உருவாக்கவும்,  தூண்ட உதவும் கருவியாக உள்ளது.

குழந்தைகளின் நடைமுறை வாழ்க்கை ,அவர்களின் நடவடிக்கைகள், இது போன்ற கார்ட்டூன்களை பிரதிபலிக்கின்றன. என்பதை ஆய்வுகளும் உறுதிப்படுத்துகின்றன. குழந்தைகள் கார்ட்டூன்கள் பொய் என்பதை மறந்து அதை உண்மையாக நினைத்து அதன்படியே நடக்கிறார்கள். அதுமட்டுமல்ல தொலைக்காட்சியில் கண்ட வன்முறை காட்சிகளையும். தீய சொற்களையும் பிற குழந்தைகள் மீது பயன்படுத்துகின்றனர்.

CARTOON 1

. ஆங்கிலத்தில் வந்த கார்ட்டூன்கனை இந்திய மொழிகளில் மொழி பெயர்த்து  தமிழில் வருவதால் குழந்தைகள் மிகவும் கணக்கிலடங்கா தவறான விசயங்களை கற்றுக் கொண்டுள்ளனர்

எனவே, பெற்றோர்கள் குழந்தைகள் தொலைக்காட்சி பார்க்கும்  நேரத்தில் அவர்களை கண்காணிக்க வேண்டும். அதற்கு  பதிலாக பாடம் சம்பந்தபட்ட அறிவை வளர்க்கும் படங்களை பார்க்க அனுமதிக்கவும். முக்கியமாக பெற்றோர்களும் பார்க்கும்  படங்களும், நிகழ்ச்சிகளும் சரியானதா ?என சுயபரிசோதிதனை செய்து கொள்ளவும்.

CARTOON 4

 

தொலைக்காட்சிப் பெட்டி குழந்தைகளிடம் வன்முறையை கற்பிக்காமல் அவர்களுக்கு நல்லதை கற்பிக்கும் நிகழ்ச்சிகளை படைக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிடின் நம் அனைவரும் தொலைக்காட்சியை எதிர்த்து போராட வேண்டும்

 

நன்றி. டாக்டர்.ஹேமந்த் ஜோசி, மும்பை

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading