
Photo by Tarikul Raana on Pexels.com
சூழல் சார்ந்த மரபியல்-எபி ஜெனிடிக்ஸ்
என்ன கேட்டாலே கொஞ்சம் குழப்பமா இருக்குதா? மரபியல் பற்றி தெரிந்து இருக்கும். இது என்ன சூழல் சார்ந்த மரபியல் அப்படின்னு யோசிக்கிறீர்களா இன்னைக்கு தெரிஞ்சுக்கோம்.
குழந்தையினுடைய அனுபவங்கள். சுற்றுப்புறம் குழந்தைக்கு தினந்தோறும் ஏற்படும் பல்வேறு வகையான உணர்ச்சிகள் எவ்வாறு மரபணுக்களின் தன்மைகளை வெளிப்படுத்த உதவுகிறது அப்படிங்கறது தான்
ஒருவருடைய மரபணுக்கள் பிறக்கும்போதே முடிவாகிறது அதை பொறுத்துதான் அவர்களுடைய அறிவுத்திறன் மற்றைய குணாதிசயங்கள் அப்படின்னு ரொம்ப நாளா நினைத்தது தவறு என்று இது சொல்லுது
பாரம்பரிய மரபணுக்களா? அல்லது வளரும் சூழ்நிலையா? அப்படினு என்னைக்குமே ஒரு வாக்குவாதம் இருந்துட்டே இருக்கும் இரண்டுக்குமே சரி பாதி பங்கு இருக்கிறது அப்படிங்கறது எபி ஜெனிடிக்ஸ்

குழந்தை வளரும் காலத்தில் அவளுடைய குணாதிசயங்கள் எவ்வாறு வெளிப்படுத்தப்படுகின்றன என்பதை இப்போது பார்ப்போம்
மரபணுக்கள் தங்களுடைய தன்மைகளை வெளிப்படுத்த வேதிப்பொருள் குறியீடுகள்-எபிஜினோம் உதவுகிறது.
இதைப் பொறுத்துதான் தன்னை குறைவாக அல்லது நிறைவாக மரபணு வெளிப்படுத்துகிற தா? இல்லையா? என்பது தீர்மானமாகிறது.
இதனை உருவாக்குவதில் குழந்தைகளுடைய வித்தியாசமான தினசரி அனுபவங்கள் பங்கு வகிக்கின்றன.
இரட்டைக் குழந்தைகள் கூட இருந்தாலும் இருவருக்கும் இடையே நடத்தை அவர்களுடைய திறன்கள் அடையும் வெற்றி உடல் நலம் ஆகியன வேறுபடுகின்றன

சிறுவயது அனுபவங்கள் எவ்வாறு நம் பிற்கால வாழ்க்கையை மாற்றும் விதமாக அமையலாம் என்பதனை சூழல் சார்ந்த மரபியல் நமக்கு தெரிவிக்கிறது.
இதிலிருந்து குழந்தைகளுக்கு வரும் மரபணுக்கள் பொறுத்துத்தான் நிறைய குணாதிசயங்கள் அமைகின்றன உதாரணத்திற்கு எவ்வளவு உயரமாக இருப்பது ?என்ன மனநிலையை குழந்தைகள் கொண்டிருப்பது? எனச் சொல்லலாம்
குழந்தைகளுடைய அனுபவங்கள் வேதிப்பொருட்கள் குறியீடுகளை மாற்றி அமைக்கலாம்.அப்போது மரபணு தன்னுடைய இயல்புகளை முழுவதுமாக அல்லது மிகக் குறைவாக வெளிப்படுத்துகிறது .
நேர்மறையான அனுபவங்களால் உதாரணமாக நல்ல ஆதரவான துணையானஉறவினர், கற்றுக்கொள்ள வாய்ப்புகள் அல்லது எதிர்மறை அனுபவங்களால்உருவாகும் அழுத்தம், சூழ்நிலை நச்சுகள் இவைகளால் மரபணு தொகுதி பாதிக்கப்படலாம்

இந்த மரபணு தொகுதி தலையெழுத்து மாற்றங்கள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ இருக்கலாம் .மரபணுக்களை வேலை செய்ய வைப்பது தடுப்பது ஆகியவை இந்த தலையெழுத்து மாற்றங்களினால் ஏற்படலாம். தீய ஆராய்ச்சி முடிவுகள் எதிர்மறையான மாற்றங்களை திருப்பி சரி செய்து நலமான வேலை செய்தல் முடியும் என நிரூபித்துள்ளன . நல்ல வழி ஒன்று உள்ளது அது அன்பான உதவிகரமான உறவின் மூலம் சூழ்நிலை அழுத்தங்களை குறைப்பது .இதன் மூலம் முதலிலிருந்தே மூளை சிறப்பாக வளர உதவி செய்யலாம்
வளரும் குழந்தையின் மூளை மரபணு தொகுதி மாற்றங்களினால் பாதிக்கப்படும்.வளரும் சிறு குழந்தையின் மூளையின் மரபணு தொகுதிகள் பல்வேறு அனுபவங்களால் பாதிக்கப்படலாம்

நேர்மறை,எதிர்மறை அனுபவங்கள் பொருத்து மரபனுக்குளுடைய இயல்புத்தன்மை வெளிப்படும் அதை பொறுத்துதான் குழந்தைகளுடைய உடல்நலம், வளர்ச்சி, திறன் சேர்க்கை மற்றும் மீட்டெழுச்சி இருக்கும்.
எனவேதான் குழந்தையின் இளம் வயதில் பாதுகாப்பான உதவிகரமான அன்பான உறவும் அனுபவங்களும் முக்கியம்.பெற்றோர்கள், பிரசவித்த தாய், பச்சிளம் குழந்தைகள் மற்றும் இளம் சிறார்களுக்கு கிடைக்கக்கூடிய தரம் வாய்ந்த மருத்துவ உதவி குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக இருக்கும் . ஆதரவானஉறவுகள், அன்பு சரிந்த அனுபவங்கள் குழந்தை தன்னுடைய மரபணு இயல்புகளை முழுவதுமாக வெளிப்படுத்த உதவியாக இருக்கும்
