childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

Photo by Pixabay on Pexels.com

நமது ஊரில் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் முதல்  ஆறு மாதங்களில் எந்த காரணத்திற்காக அழுதாலும் பால் போதவில்லை என்று தான்  நிறைய பேர் நினைக்கிறார்கள் எனவே வேறு பால் சேர்த்துத் தர  வேண்டும் என்பதுதான் 99 சதவீத பொது மக்களின் கருத்தாக இருக்கிறது இது உண்மையா ?இது சரியா? குழந்தை அழுவதற்கு வேறு காரணம் உள்ளதா? என்பதை இப்போது பார்ப்போம்

pexels-photo-1361766
Photo by Ba Phi on Pexels.com

பிறந்த குழந்தையின்  வளர்ச்சி, பல நிலைகளை படிப்படியாக அடைகிறது. ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே குழந்தைகளுக்கு போதுமானது என்பது தான் அனைத்து குழந்தை மருத்துவர்களின் இறுதியான் முடிவு .ஆனால் குழந்தையின் வளர்ச்சி போதுமான அளவில் இல்லையெனில் தாய்ப்பால் தரும் தாயின் உணவு, திர வ உணவு , ஓய்வு மற்றும் தாய்ப்பால் தரும் முறை ஆகியவையில் பிரச்சினை உள்ளதா என பார்க்க வேண்டும். சரியான மருத்துவ ஆலோசளை மற்றும்  குடும்பத்தினரின் ஆதரவு 2 வயதுக்கு பிறகும் கூட தாய்ப்பால் தர உதவும்.

ஆறு மாதத்திற்கு பிறகு பாலுனுடையஅளவு குறையும் போது வீட்டு உணவுகளை இணை உணவாகத்தருவதால் குழந்தையின் வளர்ச்சி சரியாக இருக்கும்.. முதல் ஆறு மாதங்களில் 100 சதவீத சத்துக்களையும் அடுத்த 6 மாதங்களில் 50 சதவீத சத்துக்களையும் பிறகு இரண்டு வயது அல்லது அதற்குப் பிறகு வரை மூன்றில் ஒரு பங்கு சத்துக்களையும் தருகிறது.

தடுப்பூசி களுக்காக செல்லும்போது மாதம் ஒருமுறை குழந்தையின் எடை நீளம் மற்றும் வளர்ச்சி அளந்து அதற்கெனஉள்ள வளர்ச்சிப் பாதை அட்டவணை குறிக்கவும்.இதன் மூலம் வயதிற்கு ஏற்ப குழந்தை வளர்ந்துள்ளதா? என்பதை சுலபமாக கண்டு கொள்ளலாம்.பிறந்த இடைஇரண்டு மடங்காக 5 மாதங்களிலும் மூன்று மடங்காக ஒரு வயதிலும் நான்கு மடங்காக இரண்டு வயதிலும் அதிகரிக்கும்

pexels-photo-208087
Photo by Pixabay on Pexels.com

உங்கள் மருத்துவர் அல்லது அரசு சுகாதார செவிலியர் வளர்ச்சிப் பாதை அட்டவணையில் குழந்தைகளுடைய எடை, உயரம் ,தலைச் சுற்றளனை குறிப்பர். போது மான அளவு இவைஅதிகரித்து வந்தால் குழந்தைக்குத் தேவையான பால் கிடைத்து வருகிறது என்பதை உறுதி செய்து கொள்ளலாம் ஒரு நாளைக்கு 6 முறைக்கு மேல் சிறுநீர் கழிப்பது பால் குடித்த பின் நன்கு தூங்குவது ,சுறுசுறுப்பாக இருப்பது ,வயதிற்கு ஏற்ப வளர்ச்சியினை கொண்டுள்ளது ஆகியவையும் இதனை உறுதிசெய்யும் எனவே உங்கள் குழந்தை போதுமான பாலை குடித்துக் கொண்டு வளர்ந்து வருகிறது என்பதில் நீங்களும் தைரியமாக இருக்கலாம் மற்றவர்களுக்கும் தைரியம் சொல்லலாம்.அழுவதற்கு தாய்ப்பால் போதவில்லை என்று நினைத்துக் கொண்டு பால் பவுடரையும் வேறுபால்களையும் தந்து ஒவ்வாமை உள்ட 18 வகையான நோய்கள் குழந்தைக்கு பிற்காலத்தில் ஏற்பட செய்து விடாதீர்கள்முதலில் சொல்லியது. போல ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டும் தரவும் ஆறு மாதத்திற்கு பிறகு இணை உணவுகளை தொடர்ந்து தாய்ப்பால் இரண்டு வயது வரை தரவும்.

குழந்தை அழுவதற்கான வேறு சில காரணங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.தூக்கம் வந்தால் ,தனிமையிலே இருந்தால், குளிர்,வெய்யல் அடித்தால் புழுக்கம்அதிகமாக இருப்பின் ,மூக்கு அடைத்தால் ,காது வயிறு வலித்தால் ஆசன வாயில் புண் இருந்தால், கொசு கடித்தால் என எத்தனையோ காரணங்களுக்காக குழந்தை அழலாம். மேலும் சிறுநீர் கழிப்பதற்கு முன் ,சிறுநீர் கழித்த பின், துணியை மாற்றாமல் இருந்தால் ,தூக்கம் வந்தால், சேப்டி பின் குத்தினால், சாதாரண சளி காய்ச்சல் இருந்தால் வயிறு வலி இருந்தால் குடல் புழு மலச்சிக்கல் சிறுநீர் தொற்று தோலில் புண் கொப்புளம் தொண்டை வலி என பல காரணங்கள் உண்டு .

pexels-photo-568027
Photo by Kat Jayne on Pexels.com

நீங்கள் வைத்துள்ள காய்ச்சல் மருந்தினை தரவும்.அடுத்த நாளும் வலி தொடர்ந்து இருந்தால் உங்கள் மருத்துவரை சந்தித்து என்ன காரணத்தினால் குழந்தை அழுதது? என்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் சில நேரங்களில் குடல் அடைப்பு ,காது சீழ், மூச்சுத்திணறல்  ஒட்டுக்குடல் நோய்த்தொற்று,மூளைக்காய்ச்சல், மூளை சவ்வு பகுதியில் நோய்த் தொற்று. மூட்டுகளில்சீழ் பிடித்தல் மற்றும் நுரையீரல் பிரச்சினைகள் இருதய நோய் பிரச்சினைகள் ஆகியவைகள் இருந்தால் கூட குழந்தை விடாமல் அழலாம்

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading