காய்ச்சல் பற்றிய வழக்கமான 10 கேள்விகளையும் அதற்குரிய பதில்களையும் பார்ப்போம்
மூலம்;https://iapindia.org/pdf/IAP-Guidelines-for-Fever.pdf
-
காய்ச்சல் என்பது என்ன? காய்ச்சல் நண்பனா ?எதிரியா?
-
எப்போது தொட்டாலும் என் குழந்தையின் நெற்றி சூடாகவே இருக்கிறது இது காய்ச்சலா?
-
என் குழந்தைக்கு ஏன் காய்ச்சல் வருகிறது?
-
என் குழந்தைக்கு காய்ச்சல் இருக்கும் போது என்ன செய்ய வேண்டும்? லேசான காய்ச்சல் இருக்கும் போது பள்ளிக்கூடத்திற்கு அவனை அனுப்பலாமா?
-
காய்ச்சலுக்காக நுண்ணுயிர்க் கொல்லி மருந்தை நான் தரணுமா?
-
காய்ச்சல் உள்ள போது எதையும் என் குழந்தை சாப்பிடுவதில்லை. நான் என்ன செய்ய வேண்டும்?
-
குழந்தைக்கு இருக்கும் காய்ச்சலைப் பற்றி எப்போது கவலைப்பட வேண்டும்?
8.அதிகக் காய்ச்சல் ஜன்னியை வரவழைக்கும் ;மூளை பாதிப்பினை ஏற்படுத்தும் என்பது உண்மையா?
-
என் மூத்த பிள்ளைக்கு மருத்துவர் பாரசிட்டமால் மருந்தினைப் பரிந்துரைத்தார்.அதே மருந்தை இளைய குழந்தைக்கும் தரலாமா?
-
பாரசிட்டமால் தந்த பின்னும் என் குழந்தையின் காய்ச்சல் குறையவில்லை வேறு மருந்துகளை உபயோகிக்கலாமா?
கேள்வி எண் 1 காய்ச்சல் பற்றிய பொதுவான அறிவுரைகள் |
நமது உடலின் வெப்பம் வழக்கமாக 98.6+_0.6 ஆக இருக்கும் நமது உடலில் ஏதாவது நோய்த் தொற்று அல்லது அழற்சி இருப்பின் உடல் அதனை கண்டறியும்.உடனே நமது மூளை உடல் கோளாறினைக் கட்டுப்படுத்த உடலின் வெப்பநிலையையை அதிகரிக்கும். எனவே காய்ச்சல் என்பது பல்வேறு நலக்கேட்டுக்காரணிகளை எதிர்க்கும் பாதுகாப்பு அரணின் ஒரு அறிகுறிதான். வெப்பமானியை ஆசன வாயினுள் வைத்து அளவெடுக்கும் போது 38 டிகிரி சென்டிகிரேட் அல்லது 100 டிகிரி பாரன்ஹீட் க்கு மேலே இருப்பின் காய்ச்சல் என எடுத்துக் கொள்ளப்படுகிறது
உடலின் காய்ச்சல் இரண்டு விதமாக நமக்கு நன்மை அளிக்கிறது
.முதலாவதாக அதிக உடல் வெப்பம் நோயின் தீவிரத்தன்மையை கட்டுப்படுத்துகிறது. இரண்டாவதாக நமது உடலில் ஏதோ ஒரு பிரச்சனை உள்ளது என்பதனையும் தெரிவிக்கின்றது. அது என்ன காரணத்தினால் என்பதனைக் கண்டறிய நம்மை முடுக்குகிறது நலக் கேடாக உணரப்படுகிறது. காய்ச்சல் உடலின் வளர்சிதை மாற்றத்தேவைகளை அதிகமாகிறது .காய்ச்சல் உடலின் நண்பன் /பகைவன் அல்ல. அவ்வப்போது நலக்கேட்டு காரணிகளை எதிர்கொள்ளுகிற தூதுவன் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்
கேள்வி எண் 2. குழந்தையின் தலை கையால் தொடும்பாது சூடாக இருந்தால் காய்ச்சலா?
தொட்டுப் பார்ப்பதன் மூலம் உடல்வெப்பத்தினை அளவிடுவது ஒரு ஐயம் தரும் முறையாகும்.. பாதரச வெப்பமானியினை உபயோகிக்க கூடாது ஏனென்றால் நச்சுத்தன்மை கொண்ட. கண்ணாடி உடையக் கூடியது. ஆசன வாயிலிலுள் வைத்து உடல் வெப்பத்தினை அளவிடுவது தான் சரியாகக் கணக்கிடும் முறையாகும். சிறு குழந்தைக்கு இது வசதியாக இருக்கும்
அக்குளில் உடல் வெப்பத்தை அளவிடுவது சாதாரணமாக உபயோகிக்கப்படும் முறையாகும் வாயினுள் உள்ளதை விட அக்குள் வெப்பம் வாயினுள் 0.5-1*பாரன்ஹூட் குறைவாகவும் ,ஆசன வாயினுள் 0.5-1 * பாரன்ஹூட் அதிகமாகவும் இருக்கும்.
.உடல் வெப்பத்தினை அளவிடும் முன் கீழ்க்கண்ட குறிப்புகளை கவனத்தில் கொள்ளவும்
பலவகை வெப்பமானிகள் உள்ளன.
1.டிஜிட்டல் வெப்பமானி
உபயோகப்படுத்தும் முன்பு தயாரிப்பாளர்களின் அறிவுறுத்தல்களைக் கவனமாக படிக்கவும் இது வாய்,அக்குள், ஆசனப் பகுதியில் வெப்பத்தினை அளவிட பயன்படுத்தப்படுகிறது
-
மின்னணு (செவிப்பறை) வெப்பமானி.
இது செவிப்பறையிலிருந்து வெளியாகும் வெப்ப அலைகளை அளவிடும் .ஆறு மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம் அழுதல் .,உட்காதுசீழ்த்தொற்று, காது அழுக்கு ஆகியவை செவிப்பறையின் வெப்ப அளவினை மாற்றாது.
-
டெம்பரல் தமனி வெப்பமானி
இது நெற்றியின் பக்கவாட்டில் வெளியாகும் அலைகளை அளவிட்டு கண்டுபிடிக்கும் மூன்று மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பயன்படும். மருத்துவமனைகளில் ஆரம்பகட்ட.பரிசோதனைக்கு உதவும் ஆனால் வீடு மற்றும் மருத்துவமனைகளில் துல்லியமாக உடல் வெப்பத்தினை அளக்க இயலாது.
-
அகச்சிவப்பு வெப்பமானி
மேலேபடாமலும் தொடாமலும் அகச்சிவப்பு வெப்பமானி மூலம் விரைவில் கண்டறிய உபயோகிக்கலாம் ஆனால் அது துல்லியமானதன்று. எனவே வீடு அல்லது மருத்துவமனைகளில் இவை பரிந்துரைக்கப்படுவதில்லை அதிக அளவிலான மக்களை (கடைகள், விமான நிலையம் ,கூட்டங்கள் ) முதல் கட்ட பரிசோதனை செய்ய உபயோகமாக இருக்கும.
கேள்வி எண் 3.என் குழந்தைக்கு காய்ச்சல் ஏன் வருகிறது?
நாம் முன்பு அளவளாவியபடி காய்ச்சல் உடலின் தற்காப்புக் கவசம். நிறைய உடல்நலக் கோளாறுகளில் காய்ச்சல் வரலாம்.உதாரணத்திற்கு
#நோய்த்தொற்றுகள் வைரஸ் பாக்டீரியா புரோட்டோசோவா மற்றும் பூஞ்சை
#நீரிழப்பு
#தன்னெதிர்ப்பு நோய்கள்
# சிலவகை மருந்துகள் உபயோகத்திற்கு
# தடுப்பு ஊசி போட்ட பிறகு
# புற்றுநோய்
வழக்கமாக குழந்தைக்கு காய்ச்சலை உண்டாகும் காரணிகள் ஆபத்தானவை அல்ல தானே சரியாகும். வைரஸ் தொற்று அனேக நேரங்களில் காரணகர்த்தாவாக இருக்கும் உங்கள் குழந்தையின் மருத்துவர் நோயின் .எதனால் எனக் கண்டறிய சில பரிசோதனைகளை செய்யலாம்
தடுப்பூசி போட்டபின் காய்ச்சல் வரலாம் தடுப்பூசிகள் உடலைப் பாதிக்கும் நோய்கள் வராமல் தடுக்கின்றன. வீரியம் குறைந்த வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை கொண்ட தடுப்பூசிகள்.., ஊசி போட்டு கொண்டவரின் உடலில் நோயினை உண்டாக்காது. மாறாக நோய்எதிர்ப்புச்சக்தியினைத் தரும். தடுப்பூசி மருந்தில் உள்ள வைரஸ் உடலுக்குள் சென்று எதிர்ப்பு சக்தியை தரும் திசுக்களை தூண்டும் உடனே .நமது உடல் ,அழற்சிப் பொருட்களை உற்பத்தி செய்யும்.
இவை ஊசி போட்ட இடத்தில் வலி மற்றும் வீக்கத்தை உருவாக்கும் காய்ச்சலும் வரும்..பெரும்பாலான நேரங்களில் தடுப்பூசிக்கு பின்வரும் காய்ச்சல் தானே சரியாகிவிடும் அல்லது உங்கள் குழந்தையின் மருத்துவர் காய்ச்சல் மற்றும் நலக்கேடினைக் குறைக்க மருந்தினை பரிந்துரைப்பார்
கேள்வி எண் 4
என் குழந்தைக்கு காய்ச்சல் இருக்கும் போது என்ன செய்ய வேண்டும்? லேசான காய்ச்சல் இருக்கும் போது பள்ளிக்கூடத்திற்கு அவனை அனுப்பலாமா ?
குழந்தைக்கு எப்போதெல்லாம் காய்ச்சல் வருகிறதோ அப்போது எதனால் வருகிறது என்ற காரணத்தினைக் கண்டுபிடிப்பதில் நாம் குறியாக இருக்க வேண்டும் காய்ச்சல் என்பது ஒரு அறிகுறி தான் அதன் காரணம் கண்டறியப்பட வேண்டும் காய்ச்சல் கட்டுப்பட மருந்து தருவதன் நோக்கம் குழந்தையின் நலக்கேட்டு உணர்வினைக் குறைப்பதுதான்
குழந்தை சௌகரியமாகஇருக்க கீழ்கண்டவைகளைச் செய்யவும்
அதிக..த் துணிகளை போட வேண்டாம்.
பருவநிலைக்கேற்ப உடைகளைத் தளர்வாக இருக்கும்படி அணிவிக்கவும். போதுமான அளவு நீர் சத்துகளை குழந்தைக்கு தரவும் ஏனெனில் காய்ச்சல் இருக்கும் போது அதிக நீரிழப்பு ஏற்படும் மருத்துவரின் அறிவுரைப்படி பாராசிட்டமால்.. அல்லது புருபென் மருந்துகளை குறிப்பிட்ட அளவில் தரவும். மருந்தினை தந்தபின் காய்ச்சலைக் குறைக்க சாதாரண தண்ணீர் தொட்டு துடைக்கவும் .(ஐஸ் போன்ற குளிர்ந்த நீரை உபயோகிக்கக்கூடாது)..தொடர்ந்து தலையிலிருந்து கால் வரை 15 நிமிடங்கள் செய்யவும் இதன் மூலம் உடலின் மேல் நீர்ப் படலம் பரவி வெப்பத்தை வெளிக்கடத்தும். 30 நிமிடங்களுக்கு மேல் தண்ணீரில் துடைத்தாலும் அது மட்டும் காய்ச்சலைக் . உடல் வெப்பத்தை குறைக்க காய்ச்சல் மருந்துடன் சேர்ந்துத தண்ணீரில் துடைப்பது நல்ல பலனைத் தரும். சாதாரண சூடு இல்லாத நீரில் குழந்தையை குளிக்க வைப்பதன் மூலம் காய்ச்சலைக் குறைக்கலாம் மூன்று மாதத்திற்கு கீழே உள்ள குழந்தைகளை நீண்டநேரம் துணி இல்லாமல் தண்ணீரில் குளிக்க வைப்பது உடல் வெப்பத்தை மிகக்குறைத்து விடும் எனவே தண்ணீரில் துடைப்பது குழந்தைகளுக்கு நல்லது
லேசான காய்ச்சல் மட்டும் இருந்து வேறு பிரச்சினைகள் இல்லை என்றால் குழந்தை வீட்டிலேயே இருக்க வேண்டிய அவசியம் இல்லை ஆனால் நிறைய பள்ளிக்கூடங்கள் மற்றும் சிறு குழந்தை மையங்கள் காய்ச்சல் நின்று 24 மணி நேரம் கழித்த பின்னர் தான் வரச்சொல்கின்றனர்.. ஆகவே காய்ச்சல் இருக்கும் போது பள்ளிக்கு அனுப்பாமல் இருப்பது மேலானது ஏனெனில் குழந்தைகள் தளர்வாகவும் நலக்கேடாகவும் நீர்ச்சத்து குறைந்தும் இருப்பார்கள் அவர்களால் உட்கார்ந்து பாடத்தை கவனிக்கவும் இயலாது. குழந்தைக்கு வைரஸ் நோய்த் தொற்று இருப்பின் சுலபமாக மற்ற குழந்தைகளுக்கும் பரவும்.
கேள்வி எண் 5:காய்ச்சலுக்காக நுண்ணுயிர்க் கொல்லி(ஆண்டிபயாடிக்) மருந்தினை நான் தரவேண்டுமா?
சாதாரணமாக குழந்தைகளுக்கு வரும் காய்ச்சலுக்கு வைரஸ் தொற்று காரணமாக இருக்கும் நுண்ணுயிர்க்கொல்லி(ஆண்டிபயாடிக்) மருந்துகள் பாக்டீரியா நோய்த்தொற்றுக்கு மட்டுமே உபயோகப்படுத்தப்படும் வைரஸ் தொற்றுக்கு அவை பலனளிக்காது ஒவ்வொரு காய்ச்சலுக்கும் அதை உபயோகப்படுத்துவது தேவையற்றது. ஆண்டிபயாடிக்மருந்து தேவையா? இல்லையா? என்பதனை பாக்டீரியாத் தொற்று உள்ளதா என்பதனை பொறுத்து மருத்துவர் முடிவு செய்வார்
கேள்வி எண் 6 :காய்ச்சல் உள்ள போது எதையும் என் குழந்தை சாப்பிடுவதில்லை. நான் என்ன செய்ய வேண்டும்?
காய்ச்சல் உள்ள குழந்தைக்கு, . நலக்கேட்டு உணர்வு , தசை வலி இருக்கும் குழந்தை சோர்வாகவும் எரிச்சலுடனும் இருக்கும். காய்ச்சல் உள்ள போது உடலின் நீர்ச்சத்துக் குறையாமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியம் எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்பது., அடிக்கடி நீர் ,திரவ உணவுகளை அருந்துவது ஆகியவைகளை ஊக்குவிக்கவும் எதையும் உட்கொள்ள மறுத்தால் (அதாவது உணவு மற்றும் தாய்ப்பால் ) உங்கள் மருத்துவரை உடனே பார்க்கவும்.
கேள்வி எண் 7: குழந்தைக்கு இருக்கும் காய்ச்சலை பற்றி எப்போது கவலைப்பட வேண்டும்?
பெரும்பாலான காய்ச்சல்கள் பிரச்சினைக்குரியவை அல்ல. உங்கள் குழந்தையின் வயது 3 மாத்திற்கு குறைவாகவோ அல்லது கீழ்க்கண்ட பிரச்சினைகள் இருந்தாலோ உடனடியாக குழந்தை நல மருத்துவரை பார்க்கவும்
*மிக அதிக உடல் சோர்வு, அதிக அழுகை மற்றும் சிணுங்குதல்
* சாப்பிடும் அனைத்தையும் வாந்தி, வாய் வழியாக எதையும் உண்ணாதது
*தாங்க முடியாத தலைவலி., மூச்சு விடுவதில் சிரமம்
* வழக்கத்துக்கு மாறான உடல் அசைவுகள்
*104 டிகிரிக்கும் மேல் காய்ச்சல்
* ஐந்து நாட்களுக்கு மேல் தொடரும் காய்ச்சல்
ஆனால் கீழ்க்கண்ட அறிகுறிகள் காய்ச்சல் உள்ள குழந்தைக்கு இருந்தால் கவலையின்றி இருக்கலாம்
.* காய்ச்சல் இல்லாத போது குழந்தை சுறுசுறுப்பாக,விளையாடுவது
* வழக்கம் போலவே நாள் முழுவதும் மாற்றம் இல்லாமல் இருப்பது *சாதாரணமாக அளவு சிறுநீர் கழிப்பது
கேள்வி எண் 8.அதிகக் காய்ச்சல் ஜன்னியை வரவழைக்கும் ;மூளை பாதிப்பினை ஏற்படுத்தும் என்பது உண்மையா?குழந்தைக்கு காய்ச்சல் இருக்கும்போது ஜன்னி வந்தால் அது காய்ச்சல் ஜன்னி என்று அழைக்கப்படும் .ஆறு மாதத்திலிருந்து அஞ்சு வயது வரை உள்ள குழந்தைகளில் 100 இல் 5 பேருக்கு சாதாரணமாக இது வரும் வீட்டில் யாருக்காவது சிறுவயது காய்ச்சல் ஜன்னி இருந்திருந்தாலோ அல்லது முன்னமே அக்குழந்தைக்கு வந்திருந்தாலோ 5 வயது ஆகும் போது தானே சரியாகிவிடும் அதிக காய்ச்சல் வரும்.ஜன்னியை ஏற்படுத்தும் என்பதற்கு எந்த ஒரு சான்றும் இல்லை மூளை பாதிப்பை ஏற்படுத்தும் என்பதும் தவறு இந்த காய்ச்சல்ஜன்னி கால் கை வலிப்பு நோய் வருவதை அதிகமாக்காது.
கேள்வி எண் 9: என் மூத்த குழந்தையின் காய்ச்சலுக்கு மருத்துவர் தந்த பாரசிடமால் காய்ச்சல் மருந்தினை இளைய குழந்தைக்கும் தரலாமா?
குழந்தைகளின் எடையை பொறுத்துதான் அவர்களுக்கு தர வேண்டிய பாரசிடமால் மருந்தின் அளவு முடிவு செய்யப்படுகிறது தவறான அளவு மருந்து பக்க விளைவுகளையும் ஆபத்தையும் உருவாக்கும் உங்கள் குழந்தைக்கு எந்த மருந்தினையும் தருவதற்கு முன்னர் உங்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசிக்க வும் . பல்வேறு நிறுவனங்களின் வெவ்வேறு காய்ச்சல் மருந்துகள் பலவித அளவீடுகளில் வருகின்றன. மருந்தினை வாங்கும் முன் மருத்துவரிடம் ஆலோசித்து வாங்கவும.
கேள்வி எண் 10: பாரசிட்டமால் தந்த பின்னும் என் குழந்தையின் காய்ச்சல் குறையவில்லை வேறு மருந்துகளை உபயோகிக்கலாமா?
குழந்தைகளின் காய்ச்சலைக் குறைக்க பாரசிட்டமால் ஒரு பாதுகாப்பான மருந்து பாரசிட்டமால் 15 மில்லிகிராம் ஒவ்வொரு கிலோ எடைக்கும் என்ற சரியான அளவில் தரப்பட்டால் காய்ச்சல் அறிகுறி களை கட்டுப்படுத்தும் .மருந்து தருவதின் குறிக்கோள் குழந்தையின் உடல்நலக்கேட்டு உணர்வினைக் குறைப்பதும் , உடல் வலியை குறைப்பதும் ஆகும் பாரசிடமால் மருந்து உடல் வெப்பநிலையை 104 டிகிரி ஃபாரன்ஹீட் இலிருந்து 101 டிகிரி ஆக குறைக்குமே ஒழிய வழக்கமான அளவிற்கு கொண்டு வராது. வாய்வழியாக மருந்து சாப்பிடாத குழந்தைகளுக்கு ஆசனவாய்க்குள் சப்போசிட்டரி மருந்தினை வைக்கலாம். காய்ச்சல் குறையவில்லை என்பதற்காக அதிக அளவு மருந்து கொடுப்பதை தவிர்க்கவும் தேவைப்பட்டால் அடுத்தவேளை மருந்தினை நான்கிலிருந்து ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை தரலாம் காய்ச்சலை.க் குறைக்க உதவும் மற்ற மருந்துகளை மருத்துவர் ஆலோசனையின்பேரில் தான் தரவேண்டும் ஐபுபுரூபன் ஒரு கிலோ எடைக்கு 10 மில்லி கிராம் என்ற அளவில் தரப்படும் போது பாரசிடமால் போன்றே காய்ச்சலைக் குறைக்கும் ஆனால் அம்மருந்துகளுக்கு பக்கவிளைவுகள் அதிகம் சில நேரங்களில் பாராசிட்டமால் உடன் ஐபுபுரோபன் சேர்ந்த மருந்துக்கலவை தரப்படும் இதன் மூலம் காய்ச்சல் குணமாகும் தன்மை எந்தவிதத்திலும் மேம்பாடு அடையாது தனித்தனியாக மருந்துகளை தருவதைவிட .கலவை மருந்துகளை தருவது அதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். மெபனிக்ஆசிட் மருந்து குழந்தைகளுக்கு தருவது பரிந்துரைக்கப்படுவதில்லை காய்ச்சல் குறைப்பதற்காக ஆஸ்பிரின், நிமுசுலைடு வேண்டாம்.
காய்ச்சல் இருக்கும் போது என்ன செய்யக்கூடாது? |
