childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

வீட்டு உணவு சத்தானதா ?இல்லையா?

1 min read

Photo by Andrea Piacquadio on Pexels.com

cheerful woman with tasty cookies in front of eyes
Photo by Andrea Piacquadio on Pexels.com

நம் குழந்தைகள் சாப்பிடும் உணவு சத்தானதா? இல்ல ,கடையில் வாங்கும்டப்பா உணவுகளில் மட்டும்தான்சத்து இருக்கா ?அப்படிங்கிறது எல்லாத்துக்கு இருக்கிற மிகப்பெரிய சந்தேகம் !!இந்த சந்தேகம் நமக்கு 10-20 வருடத்திற்கு முன்னாடி இருந்ததில்லை!! தொலைக்காட்சி விளம்பரங்களும் அறிவுரைகளும் யூடிப் காணொலிகளும் நம்மள குழப்பினதில்லை !!நாம ,நம் குழந்தைகள்,என்ன சாப்பிடணும் எது குடிக்கணும் என சந்தேகம் வந்ததில்லை.

நமக்கு கிடைக்கிற அறிவுரைகளின் பின்னே நிறைய வியாபாரம் சார்ந்த நேக்கம் இருக்கிறது. உங்க வீட்டிலேயே சின்னக் காய்கறித் தோட்டம் வைத்திருந்து அந்த காய்கறி தோட்டத்தில் விளைந்தமருந்து சேர்க்காத காய்கறிகளை வளர்க்கிறீங்க. அப்பப்போ புதுசா உணவு செய்து அதை மட்டும் சாப்பிட்டீங்களா நோய் வரக்கூடிய வாய்ப்பு மிகக் குறைவு.நீங்க கடையில் போய் வாங்க கூடிய கடை உணவுகள்தான் குறைவு உங்கள் குழந்தைகளும் பிற்காலத்தில் நல்ல உணவுப் பழக்கங்கள் இருக்கும் அவங்களால நுகர்வு கலாச்சாரத்திற்கு எந்த ஒரு பயனும் இல்லை கூடவே உடற்பயிற்சி, நல்ல உறக்கம், நிதான வாழ்க்கை அப்படின்னு இருந்தா சினப்பா வாழலாம்

NESTLE

அவங்களால நுகர்வு கலாச்சாரத்திற்கு எந்த ஒரு பயனும் இல்லை. மருத்துவர்களின் அறிவுரையான 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டும் (பின் 2 வயது வரை தொடரனும்) அதுக்கப்புறம் வீட்டு உணவுகளுக்கு பதிலா மாற்று உணவு தேடுற
மாதிரி எத்தனை விளம்பரங்கள் !!விதம்விதமான அறிவுரைகள்
எவ்வளவு வியாபாரம் !!யோசித்தும் பாருங்க ஒரு டப்பா குழந்தை உணவில குழந்தைகளை வயசுக்கு ஏற்ப தேவையான சத்து கிடைக்கும்படி கொடுக்கும் போது அதிக பட்சம் 2- 3 நாட்களுக்குத்தான் போதுமானதாக இருக்கும் ஒரு குழந்தை வாடிக்கையாளர்கிடைச்சுட்டா குறைந்தபட்சம் மாத த்திற்கு 10 டப்பா விற்பனையாகி விடும் இன்னொரு பிரச்சினை என்னன்னா அந்த உணவு இனிக்கும். நல்ல ருசியா இருக்கும் சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும் அதைச் சாப்பிட்ட குழந்தை வீட்டு உணவை சாப்பிடாது.எனவே நீங்கள் மறுபடியும் அதே உணவைத்தான் தொடர்ந்து தரணும் அப்படிங்கற சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள் வருமானப் பற்றாக்குறையை ஈடு செய்ய போதுமான அளவு வாங்க முடியாது!! என்ன செய்ய ஆரம்பிப்பாங்கன்னா? அளவு குறைத்து கொடுக்க ஆரம்பிப்பாங்க அப்போதுதான் ருசி பழகிய குழந்தை அதை மட்டும் சாப்பிடும். செலவைக்குறைக்க வேறு வழியில்லாமல் நீர்த்துப்போனபாலக் கொடுப்பீங்க அல்லது மலிவான நொறுக்குத் தீனிகளைத் ஆரம்பிப்பீங்க.
இந்த நொறுக்குத் தீனிகள் வாங்குவதற்குரிய இன்னும் ஒரு வாடிக்கையாளரா உங்க குழந்தை ஆகிறார். இப்ப புரிஞ்சிருக்கும் .வீட்டு உணவு சாப்பிடும் போது நீங்கள் உங்கள் குழந்தையின் உடல் நலம் செழிக்கிறது. கடை உணவுகளை உண்டால் குழந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும்

சரி கடையில விக்கிற அத்தனையும் கெடுதலா? எப்போதாவது கொடுக்கலாமா?
நீங்க வெளியூர் ஒரு நாள் இரண்டு நாள் பயணமாக போகிறீர்கள் அந்த ஊரின் உணவுப்பழக்கம் பழகியிருக்காது அந்த மாதிரி சூழ்நிலையைத் தவிர்ப்பதற்கு சில அவசர நம்ம ஊரு உணவுகளான உப்புமா பொங்கல் இட்லி ஆகியவைகள் எல்லாம் நாம கொடுத்து பழக்கி இருக்கணும் எங்க போனீங்கனாலும் உடனடித்தயாரிப்புகளை வைத்துக் கொண்டு உங்களால் செய்ய முடியும் அப்படி இல்லை என்றாலும் கூட அந்த ஊர்ல கிடைக்கிற அதே அரிசி மாவு/தானிய மாவில் செய்யக்கூடிய உணவுகளைக் குழந்தைக்குத் தரலாம் குழந்தை சாப்பிடும்.நாள்பட்ட பயணங்களில் அவசரத்துக்கு எமர்ஜென்சி விளக்கு மாதிரி சிலதைப்பயன்படுத்தலாம்

pexels-photo-3932960
Photo by Tatiana Syrikova on Pexels.com

அடுத்தது விட்டமின் டி மருந்து விட்டமின் டி இயற்கையிலேயே சுலபமாக இலவசமாக அனைவருக்கும் சூரிய வெளிச்சத்தில் கிடைக்கிறது ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 20 லிருந்து 40 நிமிடம் குழந்தை வெளியில் விளையாடினால் எப்போதும் விட்டமின் டி கிடைத்துவிடும் 40 நிமிடத்திற்கு மேல் விளையாடுவதன்மூலம் உடல் பருமன், அதிக அழுத்தம்.சர்க்கரை நோய்கள் வராது. உடல் தளர்வாக இருக்கும் குழந்தையும் சுறுசுறுப்பாக இருக்கும்
அடுத்தது DHA.இந்த DHA என்பது மூளை வளர்ச்சிக்கு தேவையானது முளைகட்டிய பயிர் விதைகளை வறுத்து அரைத்து( பூசணி விதை ஆளி விதை தர்ப்பூசணி விதை) இந்த தோசையில் கலந்து ஊற்றினால் சந்தோஷம் இட்டலி உள்ளிட்ட மற்ற உணவுகளில் கலந்து கொடுத்தால் DHA ஊட்டச்சத்து கிடைத்து விடும்
பிரச்சனையான இன்னொரு முக்கியமான சத்து இரும்பு சத்து அந்த கீரைகளில் இருக்கக்கூடிய கால்சியம் ஆக்சலேட் முதலில் இந்த சத்துக்களை உறிஞ்சுவதைத் தடுக்கிறது எனவே சமைத்தாலும் குழந்தைகளுக்கு கிடைக்கக்கைடிய இரும்புசத்து குறைவாக இருக்கிறது அதற்கு என்ன செய்யலாம்?

உணவுப்தயாரிப்பில் சில மாற்றங்கள் செய்யலாம் இரும்பு சட்டியில் வணக்கி கீரைகளை தரலாம் .நேரடியாகத் தராமல் இட்லி தோசை சப்பாத்தி பூரியுடன் சேர்த்து அரைத்து கலந்து தரலாம் நிறம் மாறி கலர் கலராக வீட்டில் இருக்கும் குழந்தைகள் சாப்பிடுவதற்கு சுலபமாக இருக்கும் இரும்புச் சட்டியில் பொரியல் செய்யும் போதும் அதிலிருந்து சத்து கீரையுடன் கூட்டு சேர்கின்றது இரும்பு சத்து அதிகம் உள்ள எள் முதலியவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம் அசைவர்கள் கறி சேர்த்துக்கொள்ளலாம் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது என்று நீங்கள் தனியாக வாங்குவதை விடுத்து வழக்கமான வீட்டு உணவை சரியாக சரிவிகித உணவாக தரும்போது வேறு எந்த குழந்தை உணவுகளும் தேவைப்படாது

fresh fish and vegetables on cutting boards in kitchen
Photo by Ksenia Chernaya on Pexels.com

இப்போது புரிந்து விட்டதா உங்களுக்கு? குழந்தை உணவின் மூலம் மருந்துக் கம்பெனிகள் தான் பலன் பெறுகின்றன குழந்தைகள் நல்ல உணவு பழக்கத்தை மறுக்கின்றன அதிக இனிப்பு அதிக உப்பு உள்ள உணவுகள் சாப்பிட்டு பழகி விடுகின்றனர் எதிர்காலத்தில் உணவுப் பழக்கம் மாறிவிடும் எனவே இத்தனை நாட்களாக் கொடுத்துக் கொண்டிருந்தாலும் இனி நம் குழந்தைக்கு வீட்டு உணவையே தருவோம்

கால்சியம் உள்ள உணவுகள் பற்றிய பதிவு

https://childhealthtoday.com/2020/02/04/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d/

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading