childhealthtoday

childhealthwiki

மூச்சு சிறு குழாய் அழற்சி

1 min read

bronchioplitis

குழந்தைகளின் சிறு மூச்சுக்குழாயின்  நோய்த்தொற்று ஏற்படும் போதுதான் சிறு
 மூச்சுக்குழாய் அழற்சி பிராங்கியோலைடிஸ் ஏற்படும்
வைரஸ் கிருமிகளில் முக்கியமாக ஆர்எஸ்வி வைரசினால் இது ஏற்படுகிறது
 அடினோ வைரஸ், பேரா இன்ஃப்ளூயன்சா வைரஸ் உள்ளிட்ட மற்ற வகை வைரஸ் கிருமிகளும்
 இதனை ஏற்படுத்தலாம். வீட்டில் உள்ள ஒருவருக்கு சளி அல்லது இருமல் நோய்த்தொற்று 
இருப்பின் அவர்களிடமிருந்து கிருமிகள் சிறு குழந்தைக்கு பரவும். 
முதலில் மூக்கில் நீர் மாதிரியான சளி வடியும் .பிறகு இருமல், 
தொடர்ந்து மூச்சு விடத்திணறல் ,இருமி வாந்தி எடுத்தல் ,வேகமாக 
மூச்சுவிடுதல், தாய்ப்பால் அல்லது உணவு எடுத்துக்கொள்ள 
சிரமப்படுதல் எனத் தொடங்கும் .நோய் பாதிப்பு குறைவாக 
இருக்கும்போது சாதாரணமான சிகிச்சைகளை போதுமானது.
 நோயின் தீவிரம் அதிகமாக இருக்கும்போது மருத்துவமனையில் 
சேர்த்து மருந்து தர வேண்டும். மூக்கில் நீர் மாதிரி வழியும் சளி 
ஓரிரு நாட்களில் குறைந்து வேகமாக மூச்சு விடுதல், இருமல், 
தூக்கம், உணவு உண்ணுதல் ஆகியவை தடைப்படுதல், மிக சிறிய 
குழந்தைகள் மூச்சுவிட மறத்தல் ,உடலுக்கு தேவையான ஆக்சிசன் 
செல்லாமல் குறைந்து போதல், அதனால் மூச்சுவிடல் பாதிக்கப்பட்டு 
உயிருக்கே ஆபத்தான சூழ்நிலையும் ஏற்படலாம் .இந்த நோய் தான் 
என கண்டுபிடிப்பதற்கு பொதுவான பரிசோதனைகள் எதுவும் இல்லை
 நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என அறிய வேண்டுமென்றால் 

ஊடுகதிர் எடுத்துப் பார்க்கலாம். இந்த ஊடுகதிர் படங்களில் இருபக்க 
நுரையீரலும் நன்கு விரிந்து இருக்கும் .வேறு நுரையீரல் அழற்ச்சிக்கான
 அறிகுறிகள் இராது.

ரத்த பரிசோதனை களிலும் மிகப்பெரிய மாற்றங்கள் இராது.
வெள்ளை அணுக்களில் லிம்போசைட் வகை அணுக்கள் அதிகமாக
 இருக்கலாம். நோய்த்தொற்றின் காரணமாக ரத்தத்தில் கிருமி 
சேர்ந்து கிருமி வளர்வது இருக்காது .வைரஸ் வகை கிருமிகளை 
கண்டறியும் சிறப்பு பரிசோதனைகள் என்ன வகையான வைரஸ் 
என்பதனை கண்டுபிடிக்க உதவும் ஆனால் இவை சாதாரணமாக
 செய்யப்படுவதில்ல

நோய்க்கு என்ன மருந்து என்று இனி பார்ப்போம் நோய் பாதித்த 
குழந்தை மூச்சுவிட சிரமப்படும் போதுமான ஆக்சிஜன்  தரலாம் .
வாய்வழியே நீர்ச்சத்து, அடிக்கடி கஞ்சி, கூழ் ,எனத் தரவும் 
.தாய்ப்பால் மட்டும் குடிக்கும் குழந்தைக்கு பால் குடிப்பதற்கு 
சிரமம் இருப்பின் பீச்சி எடுத்த பாலை மூக்குவழியே இரைப்பைக்குள் 
செலுத்தப்பட்ட சிறு குழாய் மூலம் தரலாம் தேவைப்படின்
 ரத்தக் குழாய்கள் வழியே குளுக்கோஸ் அல்லது மருந்துகளை
 ஏற்றலாம் ஸ்டீராய்ட் மருந்துகள், மூச்சு குழாய் விரிய வைக்கும் 
சால்பூட்டமால் வகை மருந்துகள் 
வேலை செய்யாது .அட்ரீனலின் மருந்துகள் ஆவியாக பிடிக்கும்போது 
சில சமயங்களில் உதவி புரியலாம்.
 சலைன் 3% /6% ஆகியவை ஆவியாக பிடிக்கப்பட்டு நெபுலைசர் 
மூலம் மருந்தாக தொடர்ந்து  ஐந்து நாட்களுக்கு தரப்படும். 
மிகப்பெரிய நோயாக சிறுகுழந்தைகளுக்கு இருந்தபோதிலும் 
இதற்கென்று தனி மருந்துகள் எதுவும் இல்லை என்பதை கவனிக்க
 வேண்டும் வாய்வழியாக தரப்படும் மருந்துகள் மூச்சுக் குழாயின் 
கடைசி சிறு குழாய்க்கு சென்று வேலை செய்வது அவ்வளவு எளிதாக
 இல்லை .எனவே நோயின் தீவிரம் குறைய குறைந்தபட்சம் 
ஒரு வாரமும் ,இருமல் கிருமி வாந்தி எடுத்தல் ஆகியவை இரண்டு 
அல்லது மூன்று வாரங்களும் ஆகலாம். பெரும்பாலான சமயங்களில் 
மிகப்பெரிய ஆபத்து இருக்காது .சிலநேரங்களில் நோய்த்தொற்றின்
 தீவிரத்தைப் பொருத்து தீவிர சிகிச்சையில் வைப்பது, செயற்கை 
வாசம் தேவைப்படுவது 
ஆகியவை நடக்கலாம் சாதாரண சளி என்று இருந்துவிடாமல் 
குழந்தையுடைய மூச்சு விடுதல், பால் குடித்தல், தூக்கம் 
ஆகியவை அதிகம் பாதிக்கப்பட்டால் உடனடியாக உங்கள் மருத்துவரை 
அணுகவும் இந்த நோய் வராமல் தடுப்பு மருந்து உண்டு. நோய்க்கு 
என்று முன்னமே தரப்படும் மோனோகுளோனல் மருந்துகள் அவ்வளவு
 சிறப்பாக உதவி புரிவதில்லை.விலையும் அதிகம். குறைமாதத்தில்
 பிறந்த குழந்தைகள், இருதயம், நுரையீரல் சம்பந்த பாதிப்பு
ஏற்பட்டுள்ள குழந்தைகள் ஆகியவர்களுக்கு மோனோகுளோனல் 
ஆன்டிபாடி ஊசி மருந்தாக செலுத்தப்படும் போது எதிர்ப்பு சக்தியினை
தரலாம் ஆனால் செலவும் அதிகம் சுலபமாக இம்மருந்து கிடைப்பதில்லை
எனவே நோய் வந்தவுடன் சிரமப்படுவதை தவிர்க்க வீட்டில் 
யாருக்காவது சளிக்காய்ச்சல் இருந்தால்  தன் சுத்தம் சுகாதாரம் 
பேண வேண்டும் கைகளை அடிக்கடி கழுவிக் கொள்ள வேண்டும் 
முகத்திற்கு முகத்திரை அணிவது நல்லது தும்மும் போதும் இருமும்
 போதும் கைக்குட்டை உபயோகப்படுத்தலாம் சளி பிடித்திருப்பின் 
சிறுகுழந்தைகள் அருகே செல்வது அவர்களை எடுப்பது 
விளையாடுவது கூடாது வரும்முன் காப்பது சிறந்தது

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading