1.கர்ப்பகாலத்தில் தாய் போதுமான அளவு உணவு உண்ண வேண்டும் வழக்கமான உணவிலிருந்து 500 கலோரி அதிகமாகும் குறைந்தபட்சம் 15 கிராம் புரதம் அதிகமாகவும் தாய் உண்ணும் உணவு இருக்க வேண்டும்
2.குழந்தை பிறந்தவுடன் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் தாய்ப்பால் தர ஆரம்பிக்கவும்
3.குறைந்தபட்சமாக இரண்டு வயது அல்லது அதற்கு மேலாக தாய்ப்பால் தரவேண்டும் முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது பின்னர் தாய்ப்பாலுடன் வீட்டு உணவுகளை தரவும்
4.வீட்டில் சமைக்கும் ருசியான உணவுகளை காரம் மசாலா மற்றும் இனிப்பு சேர்க்காமல் மற்ற ரிஷிகளுடன் சிறிது சிறிதாக தர ஆரம்பித்து ஒரு வயதிற்குள் தினமும் 6 முறை ஆவது தந்து பறக்கவேண்டும் அசைவ உணவுகளை ஆறிலிருந்து ஒன்பது மாதத்திற்குள் தர ஆரம்பிக்கலாம்
5. பிஸ்கட் ரொட்டி பால் எண்ணெயில் பொரித்த உணவுகள் தின்பண்டங்கள் இனிப்பு பழச்சாறுகள் சத்து பானங்கள் ஆகியவைகளை தவிர்ப்பது நல்லது இவை அதிக எடை மற்றும் உடல் பருமனை ஊக்குவிக்கும்
6.ஒவ்வொரு குழந்தையும் தினமும் மாலை வேளையில் ஒன்றிலிருந்து இரண்டு மணி நேரம் விளையாடுவது உடல் வளர்ச்சி மன நல வளர்ச்சி உள்ள வளர்ச்சிக்கு உதவியாகும் குழந்தையை பாதிக்கும் மன அழுத்தத்தினை இவை குறைக்க உதவும்
7. குழந்தையின் வயதுக்கேற்ப தினமும் 9 லிருந்து 12 மணி நேரம் தூக்கம் கட்டாயம் தேவை .தூக்கம் குறைந்த குழந்தைகளுக்கு உடல் மற்றும் மனதளவில் அதிக பாதிப்புகள் இருக்கும் படிக்கும் திறன் புரியும் திறன் வினையாற்றும் திறன் ஆகியவை குறையும்
8. மின்னணுபோதைகள் ஆன திறன்பேசி செயலிகள் மடிக்கணினி ஆகியவை நீல வெளிச்சத்தினை வெளித் தள்ளுவதால் இரவு தூக்கம் தள்ளிப் போடப்படும் எனவே படுக்கைக்கு செல்வதற்கு2 மணி நேரம் முன் இவைகளை நிறுத்தவேண்டும்
9. சிறு குழந்தைகளுக்கு திறன்பேசி தொலைக்காட்சி வழி பொம்மை படம் பாடல்கள் கூடாது இரண்டு வயதுவரை கட்டாயம் தவிர்க்க வேண்டும் இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அதிகபட்சமாக ஒரு மணி நேரம் மட்டும் அனுமதிக்கலாம் என்ன நிகழ்ச்சிகளை குழந்தைகள் பார்க்கின்றன என்பதை பொறுத்து கூடவே இருந்து நல்லது கெட்டது கண்டறிய பழக்குவது சிறந்தது ஒருபோதும் மின்னணு சாதனங்களை மின்னணு தாதியாக உபயோகப்பட வேண்டாம்
10.சத்துள்ள உணவுகளை ருசியாக வெவ்வேறு விதமாக தயாரித்து வழங்கினால் குழந்தைகள் சாப்பிடுவதில் பிரச்சனை இருக்காது 6 மாதத்திலிருந்து 9 மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உணவினை பழக்கும் போது அனைத்து உணவுகளையும் குழந்தை சாப்பிட்டு பழகி இருக்கும். பசி குறைவாக இருப்பின் சரியாக சாப்பிடவில்லை என்றால் சத்துக்குறைபாடு, இரும்புசத்து உள்ளிட்ட கனிமங்கள் குறைபாடு, பூச்சித்தொல்லை குடல் சம்பந்தமான பிரச்சினைகள் ஆகியவை இருக்கலாம் உங்கள் மருத்துவரை அணுகி என்ன காரணம் என்பதனை தெரிந்து அதை சரி செய்தால் குழந்தைக்கு நல்ல வளர்ச்சி இருக்கும்
