childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

பாண்டாவை விட பால் பவுடரில் அதிக சக்கரை!!!!

1 min read

fanta_PNG52

நிறைய பால் பவுடர்களில் இருக்கும் சர்க்கரை பாண்டா குளிர்பானங்களில் இருப்பதைவிட அதிகம் என்று!!! இந்த நிலை இந்தியாவில் மட்டுமில்லை உலகெங்கிலும் இருக்கிறது அதைவிட மோசமான விஷயம் பால் பவுடர்களின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த எந்த சட்டமும் உலகளாவிய அளவில் இல்லை என்பதும், உபயோகப்படுத்தும் தாய்மார்களுக்கு இந்த விஷயம் தெரியாது என்பது தான்.

இனிப்பு நம் அனைவருக்கும் பிடிக்கும் .அதிகளவு இனிப்பு உட்கொண்டால் சர்க்கரை நோய் ,உடல் பருமன் மற்றும் பல் நோய்கள் ஏற்படலாம் பரிணாம ரீதியாக உடனடி சக்தியைத் தரும் இனிப்பு உணவுகள் மனித இனத்தின் அழிவைத் தடுத்தது ஆனால் இனிப்புச் சுவையை மட்டும் தொடர்ந்து தந்து, பழக்கி விடுவது குழந்தைகளுக்கு பிற்காலத்தில் நோய்கள் வருவதற்கு வழி செய்யும்.
முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே எந்த ஒரு குழந்தைக்கும் தேவையான 100 சதவீத சத்துக்களைத் தரும் என்பது அறிவியல் பூர்வமான உண்மைஆறு மாதத்திற்கு பின்பு தரப்படும் தாய்ப்பாலில் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் இரண்டு வயதுக்கு மேலேயும் உள்ளது. ஓரளவு இனிப்பு சுவையோடு இருந்தாலும் தாய்ப்பாலில் உள்ள லாக்டோஸ் வளரும் குழந்தையின் தேவையை மட்டும் பூர்த்தி செய்யும் ஆனால் பால் பவுடர்களை சேர்க்கப்படும் கார்ன் சிரப்பின் இனிப்பு தூக்கலாக இருக்கும் குழந்தைக்கும் பிடிக்கும் இதை அதிகமாக எடுத்துக் கொள்ளும் குழந்தைகள் பற்சிதைவு சரியான சத்துள்ள உணவு உண்ணாமை மற்றும் உடல் பருமன் நோய்க்கு ஆளாகும்

337px-Formulated_powdered_milk,_Albert_Heijn_Winschoten_(2018)
மூன்று வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கு என விற்கப்படும் 212 உணவு பால் பவுடர் டப்பாக்களை பற்றிய ஒரு ஆராய்ச்சி திடுக்கிடும் செய்திகளை சொல்லுகிறது. கடைகளில் கிடைக்கும் பாண்டா ஆரஞ்சில் உள்ள சர்க்கரையின் அளவை விட இருமடங்கு பால் பவுடரிலும் உள்ளது என்பதுதான் அந்த செய்தி.குறைந்தபட்சம் 5 லிருந்து 7.5 கிராம் சர்க்கரை 100 கிராம் பால் பவுடரில் இருக்கிறது இது ஐரோப்பிய பாராளுமன்றம் அனுமதித்த அளவுகளுக்கு மேலே இருக்கிறது
இதை நீங்கள் சுலபமாக கண்டுபிடிக்கலாம் ஆனால் மிகச் சிறிய இடத்தில் கண்ணுக்குத் தெரியாமல் நுணுக்கி நுணுக்கி லேபிளில் இது அச்சாகி இருக்கும். சில பால்பவுடர்களில் 100 கிராமுக்கு எனவும் சிலவற்றில் 100 கலோரிக்கு எனவும் இது குறிப்பிடப்பட்டிருக்கும்ஆறு மாதத்திற்கு கீழே உள்ள பால் பவுடர்களில் அழகான குழந்தை படம் கூடாது தாய்ப்பால்தான் குழந்தைக்கு சிறந்தது என்ற கட்டாய வாசகம் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பது உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரை ஆனால் இந்த ஆராய்ச்சியில் நிறைய பால்பவுடர் டின்களில் அழகிய குழந்தைகள் அழகிய விலங்கு பொம்மைகள் ஆகியோரின் படங்கள் இடம் பெற்றிருந்தன இதன் மூலம் குழந்தைக்கும் பெற்றோர்களுக்கும் குறிப்பிட்ட பால் பவுடரை வாங்க வேண்டும் அதனுடைய இனிப்புக்கு குழந்தை வழங்கப்பட வேண்டும் என்ற தீய நோக்கம் தான் காரணம்
தாய்ப்பாலில் உள்ள இனிப்புக்கு மீறி அதிக இனிப்புடன் எந்த பால் போடுவதும் இருக்கக் கூடாது என்பது உலக அளவில் சட்டம் ஆக்கப்பட வேண்டும்
பவுடர் பால் தயாரிக்கும் கம்பெனிகள் சுலபமாக புரியும் வண்ணம் எளிதாக இருக்கும் படி லேபிள்களை ஒட்டவேண்டும் பெரிய எழுத்தில் இருக்க வேண்டும் எவ்வளவு சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது என்பது விவரமாக குறிப்பிடப்பட வேண்டும்
ஆறு மாதத்திற்கு பின்பு தரப்படும் தாய்ப்பாலில் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் இரண்டு வயதுக்கும் அதற்கு மேலேயும் உள்ளது என்பது அனைவருக்கும் விளங்கும் வண்ணம் எடுத்துச் சொல்லப்பட வேண்டும் அப்போதுதான் மாட்டுப்பால் எருமைப் பால் பாக்கெட் பால்

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading