childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

படுக்கையை ஈரமாக்காமல் இருக்க

1 min read

இக்கட்டுரையில் சிறுநீர்ப்பையின் கட்டுப்பாட்டினை முன்னேற்ற பதினோரு வழிமுறைகளை கடைபிடிப்பது பற்றி பார்ப்போம்

அ)பகல் நேரத்தில்

1. அருந்தும் திரவ உணவினை அதிகரிக்கவும் .தினமும் குறைந்தபட்சம் 6 இலிருந்து 7 குவளை அளவு 

2. இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை சிறுநீர் போக ஓய்வறையைப் பயன்படுத்தவும்

3. உங்கள் குழந்தையின் சிறுநீர்ப்பையின் கொள்ளவினை கணக்கிடவும். தொடர்ந்து கண்காணிக்கவும்.

அதற்கான சூத்திரம் ;வயதுx30+30 மில்லி.

உதாரணமாக குழந்தையின் வயது 4 எனில் 4×30=120+30=150 மில்லி.

4. சிறிதளவு திரவ உணவு குடிக்கவும்

இ). தூங்குவதற்கு சற்றுமுன்

5. சிறுநீர்ப் பையினை காலிசெய்ய, முக்கி மூச்சா போகவும்

6. தூங்குவதற்கு முன்பே படுக்கை அறையில் தொலைக்காட்சி கைப்பேசியினை அணைத்து வைக்கவும். படுக்கையறையில் வெளிச்சம் குறைந்த விளக்கினை மட்டும் உபயோகிக்கவும்

7. படுக்கையறை அதிக குளிர்ச்சி இன்றி அதிக சூடு இன்றி உள்ளதா? என்பதனை உறுதிப்படுத்துங்கள்

8. இன்று படுக்கையில் சிறுநீர் கழிக்க மாட்டேன் அல்லது தேவைப்பட்டால் சிறுநீர் கழிக்க எழுந்து போவேன் என்று தனக்குள்ளே நினைக்க சொல்லவும்

ஈ.) இரவு நேரத்தில்

9. ஓய்வறைக்கு குழந்தையை தூக்கி செல்வதோ ,போகஎழுப்புவது கூடாத

10. இருட்டில் குழந்தை வெளியே செல்ல கைவிளக்கு ஒன்று வைத்துக் கொள்ளவும் நன்கு விழித்து எழுந்து போய் ஓய்வறையைப் பயன்படுத்த வும்

சிறுநீர் போகாத இரவுகளுக்கு பின்

தானே எழுந்து ஓய்வறைக்கு குழந்தை போனதா (விழித்து எழும் தன்மை) அல்லது தூங்கிப்போய்விட்டதா?(வாசோபிரஸ்ஸின்)


சிறுநீர்ப்பை பயிற்சிகள்

1. திரவ உணவு

தினமும் 6-7 குவளை அருந்துவது என குறிக்கோள் கொள்ளவும்

2. சிறுநீர் கழித்தல்

தினமும் ஆறு அல்லது ஏழு முறை அல்லது 1 1/2 மணிக்கொருமுறை ஓய்வறைக்கு செல்லவும்

3. சிறுநீர் பைக்கு பயிற்சி

சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டால் அடக்கி வைக்க வேண்டாம் .உடனடியாக ஓய்வறையைப் பயன்படுத்தவும்(ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்க வேண்டாம்

ஒரு தடவை நன்கு முக்கி கவனம் செலுத்தி முழுவதும் சிறுநீர் கழிக்க முயற்சிக்கவும் .30 வரை எண்ணவும் மறுபடியும் முக்கி சிறுநீர் போகவும்.

[ ] நான் என் சிறுநீர் பையின் மேலாளர்

[ ] சிறுநீர்ப்பையின் கொள்ளளவை கணக்கிடுதல்

காலையில் முதலில் போகும் சிறுநீரை கணக்கிட வேண்டாம் .சிறுநீர் வருவது போல் உணர்வு ஏற்பட்டவுடன் அளவுக் குடுவையில் பெய்யவும் எவ்வளவு மில்லி என்பதனை குறித்து வைக்கவும்

4. இரவு நேரம்

தூங்குவதற்கு ஒன்றரை மணி நேரம் முன்னர் சிறிதளவு தண்ணீர் அருந்தலாம் . ஒரு முறை சிறுநீர் கழிக்கலாம்

நனைக்காமல் இருப்பதை நினைத்து பார்க்கச் சொல்லவும்

படுக்கை ஈரமாக்கமாட்டேன்

ஈரமாக்காமல் இருக்க விரும்புகிறேன்

. என்னால் படுக்கையில் சிறுநீர் கழிக்காமல் இருக்க முடியும்


உங்கள் முயற்சியில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதனை அறிய கீழ்கண்டவற்றை அடைந்திருக்க வேண்டும்

கட்டுப்பாடின்றி வருதல் அல்லது அடித்துப்பிடித்து ஓடுதல் குறைவு

சிறுநீர்ப்பையின் அதிகரித்த கொள்ளளவு

படுக்கை ஈரமாகாத அதிக இரவுகள்

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading