childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

பொய்நோய்கள்

1 min read

நோய்கள் வரும் போது நமது உடலில் பலவித மாற்றங்கள் ஏற்படும் .அறிகுறிகள் வெளியே தெரியும் அறிகுறிகளை வைத்து நாம் மருத்துவரிடம் செல்லும்போது இதன் அடிப்படையில் அவர் பரிசோதனைகளைச் செய்து நமக்கு என்ன  நோய்?அதற்கு சிகிச்சை  இருக்கிறதா ?இல்லையா? என அப்போது சொல்லிவிடுவார்

நோய் உண்மையாகவே இல்லாமல் நோயின் அறிகுறிகளை மட்டும் வெளிக்கொணர்ந்து நோயாளி போல் நடிப்பது பொய் நோய் எனப்படும். உதாரணமாக திடீரென்று கைகால்கள் வெட்டி வெட்டி இழுக்கும். கண் மேலே போய் விழி நின்று விடும் .முகம் கோணி விடும். இறுக்கமாக மடக்க முடியாதபடி கைகளை நீட்டி வைத்திருப்பார். பார்த்தால்ஜன்னி வந்தது போல நமக்கு தோன்றும்

1.பார்க்கும்போது இந்த விடலைக்கு கால் கை வலிப்பு வந்தது போல் இருக்கும். பதறி அடித்துக்கொண்டு மருத்துவமனை போனால் சில பரிசோதனைகளுக்குப்பிறகு இதனைப்பொய் நோய் என்பார் உங்கள் குழந்தை நல மருத்துவர்

2.

சில குழந்தைகள் பள்ளிக்கூடத்திலிருந்து மருத்துவமனையின் அவசர சிகிச்சை அழைத்து வரப்படுவார் வகுப்பில் ஏதோ சம்பவம் நடந்திருக்கும் .திடீரென்று குழந்தை வேகமாக மூச்சை இழுத்து விட ஆரம்பிக்கும். பார்ப்பவர்களுக்கு பயமாக இருக்கும் கண்கள்கிறங்கி போய் இருக்கும். கைவிரல்கள் குறக்களி பிடித்ததுபோல் இறுக்கி பிடித்திருப்பார்கள். ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டு மூச்சு விடுதலில் சிரமம் உள்ளது போலவே தோன்றும்.மருத்துவர் பரிசோதித்து விட்டு ஆஸ்த்மா இல்லை. ஏதோ பிரச்சினை. அதனால் இப்படி என்பார். ஒரு காகிதப்பைக்குள் திரும்பத்திரும்ப மூச்சு விடச்சொல்லுவார். சரியாகிவிடும்

3.

இன்னும் சிலர் திடீரென்று வயிற்று வலி வந்தது போல் இருப்பார்கள் .வாந்தி வருவது போல செய்வா.ர் அடிக்கடி எச்சில் துப்புவர். தொண்டை கமறுவது போல் தொடர்ந்து செய்வர்

இந்த குழந்தைகளுக்கு உண்மையிலேயே என்ன பிரச்சனை நோய் இருக்கிறதா இல்லையா எதற்காக நோய் உள்ளது போல் பாவனை செய்கிறார்கள்?

ஏதோ ஒரு ஆதாயத்திற்காக தமக்குத் தெரிந்த தான் கண்ட அறிகுறிகளை நாடகமாக அரங்கேற்றம் .அதன்மூலம் மற்றவர்களுடைய இரக்கத்தைப் பெற இவற்றைச்செய்கிறார்கள் இந்த அனுதாபத்தின் மூலம் தமக்கு தேவையானதை சாதிக்க விரும்புகின்றனர்இவர்கள். இன்னொருபுறம் மோசமான சூழ்நிலையில் உடல்ரீதியான வன்முறைக்கு ஆளாகும் குழந்தைகள் பிரச்சனை அதிகமாகும்போது இத்தகைய பொய் நோய் அறிகுறிகளைக் காட்டுவதன் மூலம் தப்பித்துக்கொள்ள முடியும் .எனவே அவர்களையும் அறியாமல் அச்சூழ்நிலையில் அறிகுறிகள் வெளிவருகின்றன.தகந்த உளவியல் சிகிச்சை மற்றும் ஆலோசனை மூலமும் காரணத்தைச்சரி செய்வதன் மூலமும் பொய்நோய்களிலிருந்து இவர்களுக்கு குணம் தரலாம்

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading