childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

குழந்தைக்கு காப்பி டீ குடிக்கத்தரலாமா?

1 min read

அனேகமாக அனைத்து வீடுகளிலும் காலை எழுந்தவுடன் காப்பி மாலை வேலையில் டீ என்பது தினசரி நடைமுறையாக உள்ளது. சிலவீடுகளில் காலை வேளையில் சிற்றுண்டி யாக, அவசர கால உணவாக பிஸ்கட்டும் காப்பியும் அல்லது பொறையும் டீயும்.

நம்முடைய காலை புத்துணர்ச்சி பானத்தினைக் குடிக்கும் போது பாவமாக பார்த்துக் கொண்டு எனக்கும் கொஞ்சம் வேண்டும் என கேட்கும் குழந்தைக்கு தருவதா? வேண்டாமா? என தடுமாறும் உறவா நீங்கள்? தொடர்ந்து படியுங்கள். என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்குப் புரியும்.

காலம் காலமாக நம்மிடையே இருந்து வந்த சுக்குக் காப்பி இஞ்சி டீ, கொத்தமல்லிக் காப்பிஆகியவைகளை டீ காபி முதலிய பானங்கள் எப்படித் தோற்கடித்து முதலிடம் பெற்றன என்பதனை அறிய 20 ம் நூற்றாண்டுக் காலகட்டத்திற்குச் செல்ல வேண்டும்.

எளிமையான மக்கள் தம்மிடையே வீட்டில் இருந்த பல சரக்கு வாசனைப் பொருட்களைப் பயன்படுத்தி நறுமணம் கொண்ட தூண்டும் பானகங்களை அருந்தி வந்தனர் .குழந்தைகளுக்குக் காலையில் எழுந்தவுடன் முளைக்கட்டிய இராகியை ஆட்டி காய்ச்சி அல்லது உலர்த்தி பின் கல்லில் நெறித்து அத்துடன் சர்க்கரை உப்பு என ருசிக்கேற்ப பானகமாக தந்தனர். திருவிழா மற்றும் முக்கிய நேரங்களில் பழங்கள், பருப்பு, தானியம், சர்க்கரை, கருப்பட்டி ,வெல்லம்  எனச் சேர்த்து இனிப்புப் பாயாசமாக தந்தனர். இந்தப்பழக்கம் காப்பி டீ க்கு மாறியது என்பதை அறிய கீழே படிக்கவும்.

உங்கள் வீட்டில் ஏதாவது விசேஷம் நடப்பதாக இருந்தால் அருகில் உள்ள காபி டீ நிறுவனத்தின் பிரதிநிதிக்கு சொல்லி அனுப்பினால் போதும்.வரும் நபர்களின் எண்ணிக்கைக்குற்ப  தயாரித்த காப்பி டீ ஆகியவைகளை உங்கள் வீட்டிற்கே வந்து இலவசமாகத் தந்து ருசிக்கச் செய்து சென்று விடுவார். பழகிப்போன உங்களுக்கு நாட்கள் செல்லச் செல்ல பொடியினை விலை கொடுத்து வாங்கி தயாரித்து குடிப்பது என்பது பிரச்சனையாக இருக்காது இப்படித்தான் காலை எழுந்தவுடன் காப்பி ,மாலை முழுவதும் டீ என்ற பழக்கம் தோன்றியது.

தோன்றிய பழக்கம் தொடர்வதற்குக்  காரணம் காப்பி டீ இவைகளில் உள்ள கஃபின் என்ற வேதிப்பொருள்தான் .இது மூளையின் நரம்பு மண்டலத்தின்  அடி நோசின் உறங்கும் இடத்தைப்பிடுங்கி அமர்ந்து கொண்டு நம்மைத்தூண்டுகிறது.

கஃபின் சத்து இரைப்பை குடல் வழியாக உறிஞ்சப்பட்டு இரத்தத்தில் கலந்த பிறகு ஆரம்பிக்கிறது ஆட்டம். தலைவலியை குறைக்கும் போது உங்களுக்கு புரிந்திருக்கும் எப்படி நமது உடல் காப்பிக்கு அடிமையாகி விட்டது என்று. உணர்வு நரம்புகளைத் தூண்டும். மனதைச் சுறுசுறுப்பாக்கும். உறக்கத்தினைக் கலைக்கும். இரைப்பையின் அமிலச்சுரப்பினை அதிகரிக்கும் கவனத் திறனை மேம்படுத்தும் .இதயத்துடிப்பை அதிகரிக்கும்.இரத்த அழுத்தமும் ஏறும் .

உலகத்தில் உள்ள அனைத்து குழந்தைகள் நல மருத்துவர்களும் 12வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு காப்பி ,டீ தரக்கூடாது என்று சொல்கிறார்கள்.அதற்குப் பிறகு  எவ்வளவு குறைவாக தர முடியுமோ அவ்வளவு குறைவாக தரவும். காபி டீ ஆகியவைகளில் மட்டுமல்லாமல் இந்தக்  கஃபின் ,விளையாட உதவும் உற்சாக பானங்களிலும்  சக்தி பானங்களிலும் அதிகமாக இருக்கிறது இது தவிர சாக்லேட் பால், சாக்லேட் ஐஸ்கிரீம், குளிர்  காபி ஆகியவைகளிலும் இது இருக்கிறது

ஒரு கோப்பையில் அதிகபட்சமாக நூறு மில்லி கிராம் அளவிலிருந்து குறைந்தபட்சம் 20 மில்லி கிராம் வரை இதனுடைய அளவு வேறுபடுகிறது அதிகமாகக் கஃபின் உள்ள பானங்களை அருந்தும் குழந்தைகளுக்கு முன்னே சொன்ன பாதிப்புகள் ஏற்படலாம் இது குழந்தைகளுக்கு இருதய பிரச்சனைகள் இருந்தால் இருதய துடிப்பு அதிகமாகும் அல்லது நிற்பதோ ஏற்படலாம். வெளிநாடுகளில் இதய பாதிப்பு உள்ள குழந்தைகள் சக்தி பானங்களை உட்கொண்டதால் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்ட சம்பவங்கள் நடந்திருக்கின்றனமேலும்  விளையாட்டு வீரர்களின்  உடல் வலியை குறைக்கும்.

 

காப்பி டீ பழக்கத்தை ஏற்படுத்தும் பானம். அடிமைப்படுத்தும் பானம் அல்லஉற்சாகத்தைத் தூண்டும் உடற்சோர்வைத் தவிர்க்கும். படிக்க , மாணவர்களுக்குச் சுறுசுறுப்பைத் தரும் .சிலருக்கோ தூக்கத்தைக் குறைக்கும். சிலரின்  உடல்  காஃபினை மிக எளிதில் வெளியேற்றும். சிலர் உடலில் அதிகநேரம் இருக்கும் அதை பொறுத்து தான் நீங்கள் அருந்தும் காப்பி உங்களின் தூக்கத்தை கெடுக்குமா ?இல்லை கெடுக்காதா என்பது .

காப்பியைத் தொடர்ந்து குடிப்பவர்கள் அதனை திடீரென்று நிறுத்தும் போது பல விளைவுகளுக்கு ஆளாகலாம் .தலைவலி வரலாம். சோர்வாக இருக்கலாம். உடல் தளர்ச்சி. சுறுசுறுப்பு இன்மை ஆகியவை ஏற்படலாம். காப்பி அதிகமாகக் குடித்துக் கொண்டிருக்கும் நீங்கள் குறைக்க விரும்பினால் படிப்படியாக குறைக்கவும்.உடலின் பல நோய்களை தவிர்ப்பதாக காப்பியினுடைய பராக்கிரமம் மிக அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது. இரண்டாம் வகை சர்க்கரைநோய், ஈரலில் உள்ள கொழுப்புமூளை மறதி நோய் புற்றுநோய் உள்பட பலவற்றைத் தடுக்கும் சக்தி இருப்பதாக சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன இருந்த போதிலும் குழந்தைகளுக்கு இவைகளை தொடர்ந்து தந்தால் இப்பலன்கள் கிடைக்குமா ?என்பதற்கு எந்த ஒரு தரவுகளும் இதுவரை இல்லை

அதிக நீர்ச்சத்தை எடுத்துக் கொள்ளவும் நீர் பெருக்கியாக கஃபின் வேலை செய்வதால் உடலின் சில தாது பொருட்கள் நீரில் வெளியேறுகிறது. ஆனால் செல்களில் உள்ள கால்சியத்தை வெளியேற்றுவதால் ரத்தத்தில் அளவு அதிகரிக்கிறது. உடல் வலி குறைகிறது சில நேரங்களில் உடலில் ரத்த சோகை மருந்து வேலை செய்யாமல் போவதற்கு அருந்தும் அதிகளவு கஃபீனும் காரணமாக இருக்கலாம் எனவே இரத்த சோகை உள்ளவர்கள் இரும்பு சத்து மருந்தினை காப்பி டீ யோடு சேர்த்துக் குடிக்க கூடாது .உணவுகளில் உள்ள சத்துக்கள் உறிஞ்சப்படுதலை தவிர்க்கும்

கடைசியாக குழந்தைக்கு சத்து கிடைக்க வேண்டும் என்றால் சரியான உணவுப் பழக்கத்தைக் கொண்டு வர வேண்டும் 12 வயதுக்கு முன் காப்பி டீ போன்ற பாடங்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும். கீரை காய்கறிகள் பழங்கள்பருப்பு முட்டை  ஆகியவைகளை உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம் சிறு குழந்தைகளுக்குப் பாரம்பரிய பானங்களைத் தரவும் குடிக்கும். காப்பியின் அளவு ஒன்றிலிருந்து மூன்று கோப்பைகளுக்கு கீழே இருக்கும் படி வைத்துக் கொள்ளவும் கோப்பையில் குடிக்கும் அளவினை குறைத்துக் கொள்வது அதிகக் கஃபின் உடலில் சேர்வதை குறைக்கும்

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading