

காலையில் எழுந்திடவேண்டும் தம்பி
கடவுளைத் தொழுதிட வேண்டும் பாப்பா
நித்தம் குளித்திட வேண்டும் தம்பி நிமிர்ந்து நடந்திட வேண்டும் பாப்பா சீருடையணிந்திடவேண்டும் தம்பி சிரித்துப் பழகிட வேண்டும் பாப்பா பள்ளிக்குச் சென்றிட வேண்டும் தம்பி
பண்பை வளர்த்திட வேண்டும் பாப்பா
கூடி ஆடிடவேண்டும் தம்பி
குறும்புகள் தவிர்த்திட வேண்டும் பாப்பா
அச்சம் போக்கிட வேண்டும் தம்பி
அன்பை வளர்த்திட வேண்டும் பாப்பா
