childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

education, elementary school, learning and people concept - group of school kids with pens and papers writing in classroom

பெக்கி L . ஸ்பைவே. M .Ed . தமிழில் திரு.நரேந்திரன்

குழந்தை பிறந்தவுடனே, அதன் மொழி வளர்சிக்கான அடித்தளம் இடப்படுகிறது. குழந்தையின் மொழி வளர்ச்சியானது பல கட்டங்களில் நிகழ்கிறது. இதன் உச்ச நிலையான ‘படிப்பு’ என்பது சுமார் 7 வயதில் ஆரம்பமாகின்றது. வாசிப்புத்திறன் என்பது, அவரவர்களின் மொழி மற்றும் அறிவுத்திறனை பொறுத்து அமைகிறது. வயதிற்கு ஏற்ற  மொழித்திறன் செயல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

பிறப்பிலிருந்து 3  வயது வரை

  • மழலை சப்தங்களை பயன்படுத்துகிறது.
  • பெற்றோர்களின் கை ஜாடை மற்றும் முக பாவங்களுக்குத் தகுந்த பதில் தரும்படியான செயலை செய்கிறது.
  • பெரியவர்கள் பயன்படுத்தும் குரல் சப்தங்கள், ராகங்கள் ஆகியவற்றை திரும்பச் சொல்கிறது.
  • புத்தகம் மற்றும் எழுத்து கட்டைகளை (Blocks), பயன்படுத்தி விளையாடுகிறது.
  • அட்டைப் படத்தை பார்த்தே சில புத்தகங்களை அடையாளம் காண்கிறது.
  • புத்தகங்களை படிப்பது போன்று பாசாங்கு செய்கிறது.
  • தினசரி செயலில் பெற்றோர்களிடம் புத்தகங்களை பகிர்ந்துகொள்கிறது.
  • புத்தகத்தில் சில பொருள்களின் / நபர்களின் பெயர்களைச் சொல்கிறது.
  • கதை சொல்லும்போது கவனத்துடன் கேட்கிறது.
  • குறிப்பிட்ட எழுத்துக்கு தன் கவனத்தை செலுத்துகின்றது.
  • எழுதும் / வரையும் நோக்கத்தோடு கோடு போட்டு  கிறுக்குகிறது.
  • பெரியவர்களை படிக்க அல்லது எழுதச் சொல்கிறது.

முதல்வயது வரை.

  • புத்தகத்தில் உள்ள கதைகளைக் கேட்கவும் சொல்லவும் விரும்புகிறது.
  • எழுதப்பட்ட வார்த்தைகள், சங்கதிகளை தெரியப்படுத்துகின்றன என்பதை புரிந்துகொள்கிறது.
  • படிப்பதற்கும் எழுதுவதற்கும் முயற்சி செய்கிறது.
  • பிரபல அடையாளப் படங்களையும் (logo, labels), வார்த்தைகளையும் கண்டுகொள்கிறது.
  • ராக தாள சப்தங்களை உள்ளடக்கிய விளையாட்டில் பங்கேற்கிறது.
  • சில எழுத்துக்களை அடையாளப்படுத்தி, தகுந்த சப்தங்களுடன் சேர்த்துச் சொல்கிறது.

வயதுக் குழந்தை

  • தனக்காக மற்றவர்கள் படிப்பதை ரசிக்கிறது.
  • கேட்கும் சுலபமான கதைகளை திரும்பச் சொல்கிறது.
  • தன் செயலை விவரிக்கவும், கேள்விகளை கேட்கவும், வார்த்தைகளைப் பயன்படுத்துகிறது.
  • எழுத்துக்களை அடையாளப்படுத்தி அதற்குண்டான சப்தங்களுடன் சேர்த்துச் சொல்கிறது.
  • எதுகை மோனையுடன் கூடிய வார்த்தையின் ஆரம்ப சப்தங்களை அடையாளம் காண்கிறது.
  • வார்த்தைகளில், சொல்லையும் எழுத்துக்களையும் இணைத்துப்பார்க்கிறது.
  • எழுத்துக்களையும், அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகளையும் எழுதுகிறது.
  • படிக்கும்படியாக கதைகளை எழுதுகிறது.

வயதுக்குழந்தை

  • சிறு கதைகளைப் படிப்பதுடன், திரும்பத்திரும்ப சொல்லவும் செய்கிறது.
  • தன்னிச்சையாக முடிவெடுத்து படிக்கவும், எழுதவும் செய்கிறது.
  • சில வாசகங்களை, வாய் விட்டு சப்தமாக படிக்கிறது.
  • புத்தகத்தில் மேலோட்டமாக பார்ப்பதிலேயே புது வார்த்தைகளை இனம் கண்டு புரிந்துகொள்கிறது.
  • வார்த்தைகளில் உள்ள எழுத்திற்கேற்ற சப்தங்களை சொல்லிப் பழகுகிறது.
  • தங்களுக்கு விருப்பமான தலைப்புகளில் எழுதுகிறது.
  • எழுதும்போது, நிறுத்தற்குறிகளான ‘தலைப்பு எழுத்துகள் என்ற பெரிய எழுத்து, முற்றுப்புள்ளி, அரைப்புள்ளி, கமா போன்றவற்றை உபயோகிக்கக் கற்றுக்கொள்கிறது.

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading