childhealthtoday

childhealthwiki

1-2 வயது குழந்தையின் வளர்ச்சியில் கவனிக்க வேண்டிய அறிகுறிகள்

1 min read

1 வயது
தவழ்ந்து செல்லாதது./பிடித்து நிற்காதது.
நீங்கள் ஒளித்து வைக்கும் பொருட்களைத் தேடாதது.
மா மா, தா தா போன்ற ஒத்தை வார்த்தைகளைப் பேசாதது.
தலையை ஆட்டுவது, டாடா காட்டுவது செய்யாதது.
பொருட்களைச் சுட்டிக் காட்டாதது.
1 1/2 வயது
பொருட்களை மற்றவர்களுக்கு சுட்டிக்காட்டாதது, தானே நடக்காதது.
அறிமுகமான பொருட்களின் உபயோகம் தெரியாதது.
மற்றவர்கள் செய்வதைப் பார்த்துச் செய்யாதது.
புதுவார்த்தைகளைத் தெரிந்து வைத்திருக்காதது.
6 வார்த்தைகள் கூட தெரிந்து வைத்திருக்காதது.
தன்னைப் பராமரிப்பவர்கள் வெளியே செல்வதையும் மீண்டும் திரும்பி வருவதையும் கவனிக்காதது.

 

 


2 வயது
2 வார்த்தைகளைச் சேர்த்து வாக்கியமாகப் பேசாதது (பால்குடி).
அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களான சீப்பு, பிரஷ் இவற்றை
எப்படி பயன்படுத்துவது எனத் தெரியாதது.
செயல்களையும் வார்த்தைகளையும் பார்த்துத் தானே செய்யாதது.
எளிய கட்டளைகளைப் பின்பற்றாதது.
தடுமாறாமல் நேராக நடக்காதது.
3 வயது
அடிக்கடி விழுவது, படியேறுவதில் சிரமம் இருப்பது.
எச்சில் ஒழுக்குவது, பேச்சு தெளிவில்லாமல் இருப்பது.
சாதாரண பொம்மைகளுடன் (பொருத்தும் பலகை, புதிர்கள்,
கைப்பிடியை திருப்புவது) கூட விளையாடாதது.
வார்த்தைகளை உபயோகித்துப் பேசாதது.
எளிய கட்டளைகளைப் புரிந்துகொள்ளாதது.
பாசாங்கு அல்லது கனவு விளையாட்டுகளை விளையாடாதது.
மற்ற குழந்தைகள் / பொம்மைகளுடன் விளையாடாதது.
கண்ணோடு கண் பார்க்காதது.
மேற்கண்ட அறிகுறிகள் இருப்பின் குழந்தை நல மருத்துவரின்
ஆலோசனை பெறவும்.

எந்த வயதிலும், முன்னே கற்ற திறன்களை இப்போது இழந்திருப்பது.

 

 

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading