childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

fits

காய்ச்சல் ஜன்னி என்கிற காய்ச்சலின்போது வருகிற கால்-கை வலிப்பு. இதற்கு முக்கியக் காரணம் பாரம்பரியமாக தாய் தந்தை குடும்பத்தில் யாருக்காவது இருப்பதுதான். இதைத் தவிர அதிக உடல் வெப்பம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக் குறைவு ,வைட்டமின் டி சத்து குறைவு, இரும்பு சத்து குறைவு,மூளை நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வைரஸ் தொற்று என பல காரணங்கள் இருக்கலாம் .

நூற்றில் ஐந்து குழந்தைகளுக்கு ஐந்து வயதுக்குள் இவ்வாறு வரலாம்.ஆறு மாதத்திலிருந்து ஐந்து வயது வரை சாதாரணமாக ஏற்படும்‌ காய்ச்சல் ஏற்பட்ட முதல் 24 மணி நேரத்திற்குள் இது ஏற்பட்டால் இது சாதாரண காய்ச்சல் ஜன்னி எனப்படும் . முதல் ஜன்னி ஏற்பட்ட அடுத்த 48 மணி நேரத்தில் 50 சதவீதம் பேருக்கு மறு ஜன்னி வரலாம். முதல் மூன்று நாட்களுக்கு வரும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்‌ அனேகமாக நிறைய பேருக்கு ஒரு தடவையுடன் நின்றுவிடும்.அடிக்கடி ஏற்படுவது, கால்-கை வலிப்புதொடர்ந்து இருப்பது, 24 மணி நேரத்திற்கு பிறகு ஏற்படுவது, காய்ச்சல் சரியான பின்பு ஏற்படுவது ஆகியவை வேறு பிரச்சனைகளை குறிப்பதாக இருக்கலாம்

. திடீரென்று ஒரு சத்தம் கொடுத்து விட்டுகுழந்தையின் கண் மேல் நட்டு விடலாம் சிறிதுநேரம் உணர்வற்று இருக்கும் அசைவு இருக்காது அல்லது கைகள் இரண்டும் வெட்டி வெட்டி இருக்கும்

வலிப்பு வந்தவுடன் ஒருக்களித்து குழந்தையைப் படுக்க வைக்க வேண்டும். அடி படாதவாறு அருகில் உள்ள பொருட்களை அகற்ற வேண்டும். வழக்கமாக 1 அல்லது 2 நிமிடத்திற்குள் இது நின்று விடும் அதற்கு பிறகு சிறிது நேரம் குழந்தை உறங்கும் . எழுந்தவுடன் வழக்கம்போலவே விளையாடும். மனநிலையில் மாற்றமோ வேறு பிரச்சனைகளோ இருக்காது .கைகால்களைப்பழையபடி உபயோகப்படுத்தும் சுயநினைவு வந்து விடும். மருத்துவமனைக்கு போய் சேருவதற்குள் வலிப்பு நின்றுவிடும். தூங்கிய குழந்தை கூட விழித்து அழ ஆரம்பிக்கும் .மருத்துவரைப் பார்க்கும் போது வலிப்பு வந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இருக்காது சில குழந்தைகளுக்கு சில மணி நேரம் அசதியும் உறக்கமும் தலைவலியும் இருக்கும்.

அபூர்வமாக நரம்பியல் கோளாறுகள், கால் கை வலிப்பு நோய், மூளைக் காய்ச்சலின ஆரம்ப அறிகுறி எனவாக இது இருக்கலாம். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு இரும்பு பொருட்களையோ இரும்பு சாவியை தரக்கூடாது. சூடு வைப்பது, மந்திரிப்பது கயிறு கட்டுவது கூடாது. குழந்தை எதிர்பார்த்தும் பயப்பட்டு இவ்வாறு செய்யவில்லை இவற்றை புரிந்து கொள்ள வேண்டும்

குழந்தைகளுக்கு தொடர்ச்சியான ஜன்னி மருந்துகள் ஒரு காலத்தில் தந்தார்கள் தற்போது அவை தேவையில்லை என்பது உறுதியாகிவிட்டது உங்கள் மருத்துவர் தூரத்தில் இருந்தாலும் நீங்கள் இருப்பது கிராமமாக இருந்தாலும் அல்லது குடும்பத்தில் யாருக்காவது காய்ச்சல் வலிப்பு இருந்தால் முதல் 48 மணி நேரத்திற்கு ஜன்னி வராமல் தடுக்கும் மாத்திரையை காய்ச்சல் மருந்துடன் வரவேண்டும் .காய்ச்சல் அதிகமாக இருக்கிறது என்று அடிக்கடி மருந்தினை கொடுத்தால் உடலில் மற்ற பக்க விளைவுகள் ஏற்படலாம் சாதாரண நீர் கொண்டு உடலை துடைத்து விடலாம் காய்ச்சல் மருந்தை தினமும் 4–6 முறை மட்டும் சரியான அளவில் தரலாம்

அடிக்கடி காய்ச்சல் வலிப்பு வந்தால் உங்கள் மருத்துவர் உங்கள் குழந்தைக்கு மூக்கின் வழியாக அடிக்கக்கூடிய மிடசோலாம் ஸ்ப்ரே பக்க மருந்தினை தருவார்கள்வலிப்பு வந்தவுடன் உடனடியாக அதை உபயோகப்படுத்த வேண்டும் பிறகு மருத்துவரை சென்று பார்க்கலாம்

வலிப்புஅடிக்கடி வந்தாலோ, காய்ச்சல் தொடர்ந்துஇருந்தாலோ, அதிக தலைவலி,வாந்தி,சுயநினைவு வராமல் இருந்தாலோ உடனடியாக மருத்துவமனைக்கு செல்லவும் இது சாதாரண காய்ச்சல் வலிப்பு இல்லை வேறுவிதமான நோயாக இருக்கலாம் அவசர சிகிச்சையும் தீவிர சிகிச்சையும் தேவைப்படலாம்

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading