childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

மலேரியா நோய்

1 min read

மலேரியா நோய் பற்றி பண்டைய சமுதாயங்களில் தெரிந்திருக்கிறது. 2700 ஆண்டுகளுக்கு முற்பட்ட சைனா குறிப்புகளிலும் மெசபடோமியா நாகரீக காலத்தின் களிமண் எழுத்துக்களிலும்,எகிப்தின் பாப்பெயரி புத்தகங்களிலும் ஆறாம் நூற்றாண்டின் இந்திய நூல்களிலும் இதனைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன .கிரேக்கர்களுக்கு மலேரியா காய்ச்சல் அதனால்  மண்ணீரல் பாதிப்பு பற்றி தெரிந்து இருக்கிறது .மலேரியா நோய் என்ன காரணத்தினால் வருகிறது? என்பது மிக நீண்டகாலத்திற்கு கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது. சதுப்பு மற்றும்  நீர் தேங்கிய இடங்களில் கொசு மூலம் வரும் காய்ச்சலுக்கு மக்கள் தொடர்ந்து பலியானார்கள்.என்ன காரணம் என்று தெரியாமல் அந்தப் பகுதியில் நிலவி வந்த அசுத்தமான துர்நாற்றம் கலந்த காற்று காரணமென்று நம்பினார்கள் அதனால் மலேரியா (அசுத்தமான துர்நாற்றம் கலந்த காற்று) என்று அர்த்தம் தரும் இடவாகு பெயரினை (சரிதானே?) இட்டார்கள்

1880 இல் கொசுவின் மூலம் பரவுகிறது என்ற சந்தேகத்தை லேவரேன்வெளியிட்டார் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை ஆக்கிரமித்து ஆட்சி செய்து கொண்டிருந்த போது 1897  இல் சென்னையில் டாக்டர் Ronald Ross மருத்துவராக ஆக பணிபுரிந்து வந்தார்.தற்போதைய அரசினர் சென்னை மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனை வளாகத்தில் தான் மலேரியா நோயை பரப்பும் பிளாஸ்மோடியம் கிருமியை அடையாளம் கண்டார்

 

மலேரியா நோய் வளரும் நாடுகளில் உள்ள குழந்தைகள் கர்ப்பிணிகள் மற்றும் சமுதாயத்தில் கீழ்மட்ட நிலையில் இருப்பவர்களை பாதிக்கிறது மலேரியா நோய் மிதமான வெப்பம் உள்ள வெப்பம் நாடுகளில் காணப்படுகிறது
மலேரியா நோய் பாதித்தவர்கள் அதிக காய்ச்சல் உடல் நடுக்கம் தலைவலி கை கால் வலி உடல் சோர்வு வாந்தி வயிற்றுப் போக்கு என பல உடல் அறிகுறிகளுடன் எடுக்கலாம் காய்ச்சல் வரும்போது நடுக்கம் ஏற்பட்டு 23 போர்வைகளை மேலே போர்த்தினாலும் தொடர்ந்து இருக்கும். மலேரியா நோய்க் கிருமிகளை பரப்ப 6 பெரிய நோய்க்கிருமி தூதுவர்களும் மூன்று சிறிய நோய்க்கிருமி தூதுவர்களும் இதில் பிளாஸ்மோடியம் வைவாக்ஸ் 60 65 சதவீதம் பாதிப்பும் பால்சி பாரம் 30 லிருந்து 35 சதவீதம் பாதிப்பு ஏற்படுத்துகிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கீட்டின்படி 2018 இல் 278 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர் இதில் 4 லட்சத்து 5000 பேர் நோயின் தீவிரத்தினால் உயிரிழந்தனர்
உலகில் மலரிய மதிப்பில் 70 சதவீதம் இந்தியாவில் உள்ளது மலேஷியாவில் மரணம் அடைந்தவர்களில் 70% பேர் தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்

anopheles

 

மலேரியா நோய்க் கிருமி அனோபிலஸ் கொசுக்களின் மூலம் பரவுகிறது மழைநீர் மற்றும் அசுத்தமான நீர் தேங்கிஉள்ள இடங்களில் உள்ள குளம் குட்டைகளில் அனாப்ளிஸ் முட்டையிடுகிறது
மலேரியா நோயை கண்டுபிடிக்க ரத்தப்பரிசோதனை முக்கிய கருவியாக பயன்படுகிறது தாய்ப்பாலில் போதுமான அளவு மலேரியா மருந்து செல்வதில்லை எனவே தாய் மலேரியா மருந்து எடுத்துக் கொள்வதன் மூலம் குழந்தைக்கு நோய் வருவதை தவிர்க்க முடியாது
மலேரியா நோயினால் பாதிப்பு மற்றும் இறப்பினை தவிர்க்கலாம்
1. மலேரியா அதிகமுள்ள பகுதியில் வாழும் போது மலேரியா தடுப்பு மருந்துகளை அறிவுரையின்படி எடுக்க வேண்டும்
2.இரவு நேரத்தில் கொசு கடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
3. கொசு கடிப்பதை தவிர்ப்பதற்கு மருந்து தண்ணீரில் முக்கி எடுக்கப்பட்ட கொசுவலை கொசு விரட்டி முழுக்கை சட்டை முழுக்கால் சட்டை அணிவதன் மூலம் தவிர்க்கலாம்

மலேரியா நோய் மருத்துவத்தில் எந்த மாற்றமும் இல்லை புராணகாலத்தில் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தவில்லை
அதிக பாதிப்பினை தரக்கூடிய மலேரியாவிற்கு தீவிர சிகிச்சை நல்ல முறையில் பலனளிக்கும்

 

 

quinine-harvesting-cinchona-bark_1_72626922ef7b2085967d1e036f547d5c

சரியான நேரத்தில் தரப்படும் artemesin.quinine ஊசி மருந்துகள் மருந்துகள் உயிரினை காப்பாற்றி உயிரிழப்புகளை தடுக்க உதவியாக இருக்கும்

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading