childhealthtoday

childhealthwiki

படிப்பு வெற்றியின்அடிப்படைக் கருத்துக்கள்

1 min read

சூசி லோரைன் M .A . , CCC  – SLP  தமிழில் திரு.நரேந்திரன்

அடிப்படைக் கருத்துக்களை  புரிந்து கொள்வதைப்பொருத்தே குழந்தைகளின்  படிப்பின் வெற்றி  அமைவதால், கருத்துப்புரிதல் மிக முக்கிய செயலாகிறது.  கருத்து வார்த்தைகளை, புரிந்தால் மட்டுமே குழந்தைகளால் வழிகாட்டும் வகுப்பறை நிகழ்ச்சியில் பங்கேற்கவும் , பேச்சில் கலந்து கொள்ளவும் முடியும். இதுவே படித்தல், எழுதுதல், கணக்கு போடுதல் போன்றவற்றில் வெற்றி  அடைய  அவசியமாகிறது.

அடிப்படையான  கருத்துக்கள்

  • நிறங்கள். (சிவப்பு, நீலம், பச்சை.)
  • திசைகள். (கிழக்கு / மேற்கு… நேராக / சுற்றியுள்ள )
  • அளவுகள். (கொஞ்சம் / நிறைய, பெரியது /சிறியது போனறவை)
  • வரிசை இலக்க வார்த்தைகள். (முதலில், கடைசியில், அடுத்தடுத்து , ஒன்றுவிட்டுஒன்று)
  • வடிவங்கள். (வட்டம், சதுரம்)
  • சமூக மனநிலையைக்குறிக்கும் வார்த்தைகள். (மகிழ்ச்சி / சோகம் /கோபம் / துக்கம்)
  • தரத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள். (புதியது / பழையது / நவீனம்)
  • தொடு உணர்வு அமைப்பு பற்றிய வார்த்தைகள். (வழுவழுப்பான, சொரசொரப்பான).
  • காலம் குறித்த வார்த்தைகள். (சீக்கிரம், தாமதம் )
  • தன்- நிலைப்பாடு  சார்ந்த  வார்த்தைகள். (முன்னால் /பின்னால்/ பக்கவாட்டில் /மேலே / கீழே)

பொதுவாக கருத்து வார்த்தைகள் இணைந்ததாகவோ அல்லது எதிர்மறையானதாகவோ இருக்கும். (உ.ம்.- வெப்பத்தை குறிக்க சூடு அல்லது குளிர்ச்சி என இருக்கும் ). இதன் அடிப்படையில் Dr . எலிசபெத் விக் என்பவர்  அமெரிக்காவில் பள்ளி ஆசிரியர்களிடம் ஒரு  ஆய்வை மேற்கொண்டார். கீழ்க்குறிப்பிட்ட இரட்டை வார்த்தைகளே பள்ளி படிப்பில் குழந்தைகள் வெற்றி  பெற  உபயோகப்படுத்தும் முக்கியமான கருத்து வார்தைகளாகும் என கண்டறிந்தார்.

  • உள்ளே /  வெளியே
  • பெரியது / சிறியது
  • மேலே / கீழே
  • மகிழ்ச்சி / சோகம்
  • தொடங்கு /நிறுத்து
  • முதலில் / கடைசியில்
  • மூடு / திற.
  • உரக்க / மெதுவாக
  • சூடு / குளிர்ச்சி
  • வேகம் / நிதானம்
  • முன்னால் / பின்னால்.
  • கெட்டியாக / மிருதுவாக
  • புதிய / பழைய
  • நிறைவு / வெறுமை
  • விழிப்பு/ தூக்கம்.

 

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading