பிறந்த குழந்தைக்கு பார்த்தவுடன் முகத்தை விகாரமாக கூடிய குறைபாடுகளில் முக்கியமானது பிளவுபட்ட உதடும்,மேல் மேலண்ணமுமாகும்.

குழந்தைகளுக்கு அதிகபட்சமாக பாதிக்கும்பிறவிக் குறைபாடு வகைகளில் இதுவும் ஒன்று .பாதிக்கப்பட்ட குழந்தைகளை கர்ப்ப காலத்தில் இருந்து, பிறந்த பின்னும் வளர்ந்த பின்னும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தேவையான நேரத்தில் சரியான அறுவை சிகிச்சை முறைகளை செய்வது முக்கியம் அனுபவமுள்ள பல தரப்பட்ட மருத்துவர்கள் உள்ளடங்கிய குழு அல்லது மண்டை மற்றும் முகம் அறுவை சிகிச்சை குழுவின் முடிவுகள் சிறப்பாக இருக்கும். பிறந்தவுடன் குழந்தையை பரிசோதிக்கும்போது உங்கள் குழந்தைகள் நல மருத்துவர் இதனைக் கண்டறி வா ர், அதற்கு பின்பு தேவையான அறுவை சிகிச்சை ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்

இந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதில் சிரமங்கள் இருக்கலாம் அதை தவிர்க்க நெ ட்டு வா க்கில் பால் தருதல் ,கறந்த பாலினை எடுத்து சங்கு மூலம் தருவது உதவலாம். மூக்கு அடைப்பு அடிக்கடி சளி பிடித்தல் புரை ஏறுதல் என பல தொல்லைகள் இக்குழந்தைகளுக்கு ஏற்படலாம் பிளவுபட்ட உதடு அல்ட்ரா சவுண்டு மூலம் கர்ப்ப காலத்திலேயே கண்டுபிடிக்கப்படலாம் குழந்தைக்கு பிரச்சனை இருக்கிறது என்று தெரிந்தவுடன் பெற்றோர்கள் கவலைப்படுவர் பயப்படுவர் நம்ப மறுப்பார்கள் அந்த நேரங்களில் உங்கள் குழந்தை நல மருத்துவரை சந்தித்து அவருடைய ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது .கருவில் இருக்கும் குழந்தை பிரச்சனைகளை சரி செய்ய உதவும் ஆலோசகரின் உதவியும் தேவைப்படலாம் இதற்கு மாறாக அன்னப்பிளவை குழந்தை பிறந்தவுடன் தான் கண்டுபிடிக்கப்பட இயலும். கர்ப்பகாலத்தில் செய்யும் அல்ட்ரா சவுண்டு மூலம் கண்டுபிடிக்கப்படாமல் போகலாம் பிறந்தவுடன் வாயைத் திறந்து உள்நோக்க விட்டால் சிறிய அன்னப்பிளவு கண்டுபிடிக்கப்படாமல் போகக்கூடும்
அன்னப்பிளவு உள்ள குழந்தைகளுக்கு காது குழாயில் பாதிப்புகள் ஏற்படும் அதனால் அடிக்கடி நடுக் காதில் நீர் கோர்க்கும். பேச்சில் உச்சரிப்புகளில் வித்தியாசம் இருக்கலா.ம் குடித்த பால் மூக்கு வழியாக வராமல் இருக்க பல் மருத்துவருடைய உதவியும் தேவைப்படலாம் அல்லது மருத்துவ சிகிச்சையும் தேவைப்படலாம் இந்த மாதிரி குழந்தைகளுக்கு பிறவி குறைபாடுகள் சேர்ந்த ஒரு தொகுப்பு இருப்பதற்கு வாய்ப்பு அதிகம்

வாய் மற்றும் முக பிரச்சினைகளுக்கு தொடர்ந்து பராமரிப்பும் கண்காணிப்பு தேவை. பிளவுபட்ட உதடு சாதாரணமாக மூன்றிலிருந்து ஆறு மாதத்திற்குள் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்படும் அன்னப்பிளவு ஒன்பதிலிருந்து 14 மாதத்திற்குள் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம் ஈறுக்கோட்டில் பிளவு இருந்தால் 8-10 வயதில் அறுவை சிகிச்சை தேவைப்படலாம் பேச்சு சிறப்பாக வருவதற்கு, மூக்குக்கு பிளாஸ்டிக் அறுவை மற்றும் தாடைக்கு க்கு அறுவை சிகிச்சை தேவையாய் இருக்கலாம் இவர்களுடைய வாய் சுகாதாரம், பேச்சு, காது கேட்டல் ,வளர்ச்சி பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.
