childhealthtoday

childhealthwiki

வீட்டிலிருக்கும் குழந்தையை எப்படி சமாளிப்பது?

1 min read

கடந்த 8 மாதங்களாக வீட்டிலிருக்கும் குழந்தையைச் சமாளிக்கும் மிகப்பெரிய பணியினை செய்து வருகிறீர்கள். உங்களுக்கு சில ஆலோசனைகள்

1. பாடுங்கள் நீங்கள் மிகப் பெரிய பாடகராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பாடலும் சுத்த கர்நாடக சங்கீதத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை.

அட, பாட்டு தெரியாதா? கவலை வேண்டாம்.! என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை பாடலாகச் சொன்னால் போதும் .சிறு குழந்தைகளுக்கு ஒன்னு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு ஏழு என்று இராகத்தில் சொல்வதும் பச்சை சிவப்பு மஞ்சள் நிறம் என இழுத்துப்படிப்பதும் பாடலாக இருக்கும்.

2. நடனம் ;பாடலுக்கு ஏற்ப நடனம் ஆடத் தெரிந்தால் ஆடலாம் .இல்லையென்றால் கைகால்களை வலிப்பு வந்ததுபோல் வெட்டி இழுத்து ஆடுவது கூட ஒரு வகை நடனம் தான். குழந்தை மகிழ்ச்சியடையும்

3..விடுமுறையில் எங்காவது சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும் .செல்வதற்கு நேரமும் வசதியும் ஈ பாசும் இல்லை .உங்கள் வீட்டில் செய்த உணவை எடுத்துக் கொள்ளவும். வீட்டில் ஒரு பக்கத்தில் துணியை விரித்து தரையில் அமர்ந்து , சுற்றுலாவில் சாப்பிடுவது போல சாப்பிடலாம் .கூடவேபிடித்த பொம்மை ,பிடித்த பொருட்களை   வைத்து சுற்றுலா விருந்து, விளையாட்டு செய்யலாம்

4. புதையல் வேட்டை- பெரிய குழந்தைகள் இருந்தால் மிகச் சிறப்பாக இருக்கும். சில பொருட்களை வீட்டில் மறைவான இடங்களில் முதலில் ஒளித்து வைத்துவிட வேண்டும் .பிறகு அந்த இடங்களை கண்டுபிடிக்க,குறிப்புகளைப்பாடலாக், கணக்காக ,குறிப்பாகவும் தரலாம். அனைத்து பொருட்களையும் முதலில் கண்டுபிடிக்கும் குழந்தை அன்றைய நாள் ஆட்டத்தின் வெற்றி வீரர். மற்றவர்கள் அவரின்வெற்றியைச் சேர்த்து கொண்டாடுவார்கள்

5.தடை தாண்டும் நடை வீட்டுத்தரையில் , குழம்பு நிலையில் எரிமலை லாவா வருவதாகக் கற்பனை செய்து கொள்ள வேண்டும். அந்தப் பகுதிகளை கயிறு அல்லது பிளாஸ்டிக் மூலம் தனிமைப்படுத்தி அதைத்தாண்டி செல்வதற்கு குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும்

6.வெளியூரில் இருக்கும் தாத்தா பாட்டி மாமா அத்தை ஆகியவர்களோடு குழந்தைகள் பேசலாம்.புதிய கதைகள் சொல்லலாம் .விடுகதைகள் போடலாம்.

7. கற்பனைத் திறனை வளர்க்கும் வேலைகளைச் செய்யும்போது குழந்தைகளுக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கும். புதிய விஷயங்களையும் கற்றுக் கொள்ளவும் செய்யும். பாசி கோர்த்து மாலை செய்யலாம் .காகிதத்தில் கப்பல் ,இராக்கெட், விசிறி, டைமெண்ட்செய்யலாம்.படங்கள் வரையலாம். நிறம் ஏற்றலாம்.வண்ணம் பூசலாம் .எத்தனையோ வேலைகளை தாள் மற்றும் பென்சில்,கத்தரி வைத்து செய்யலாம். சிறிய மற்றும் பெரிய குழந்தைகள் என அனைவருக்கும் ஆர்வமாக இருக்கும்

8. சேர்ந்து நடைப்பயிற்சி செய்யலாம்.அப்போது அருகில் உள்ள வீடுகளில், மாடியில் ,ஜன்னலில் என்ன தெரிகிறது? என்பதை பார்க்கலாம். சுற்றியிருக்கும் மற்றவர்களுக்கு தூரத்திலிருந்து வணக்கம் கூறலாம் .கை காட்டலாம். முகத்திரை கட்டாயம் அணிந்து இருக்க வேண்டும்

9. வீட்டில் இடம் இருப்பின் தோட்டம் போடலாம் .தோட்டத்தில் உள்ள இலை, தழை, செடி கொடி, பூச்சி, புழு ,பறவை முதலியவைகளை குழந்தைக்கு அறிமுகப்படுத்தலாம் .மண்ணில் விளையாடி மகிழலாம். குப்பைகளை மக்க வைத்து செடிக்கு போடலாம்.தோட்டவேலைகள் பலவற்றில் குழந்தையை பழக்கலாம் அதைப்பற்றி இரவில் புத்தகத்தில் படிப்பது மற்றும் கதை சொல்வதன் மூலம் சொல்லித் தரலாம்

9. சாக்பீஸ் கட்டியிருந்தால் படங்கள் வரையலாம். வெளியே தரையில் பெரிய எழுத்தில் எழுதலாம்

10.மாஞ்சா ஏற்றாத நூலில்பட்டம் விடுவதற்கு சொல்லித் தரலாம் .நேரம் போவதே தெரியாது இதைப்போலவே தென்னை இலைப் பிப்பீ , காகிதத்தில் கத்திக கப்பல் செய்து , பாத்திரத்தின் மிதக்க விடுதல், காற்றாடி செய்வது என பல விஷயங்களை குழந்தைக்குச்சொல்லித்தரலாம்

11 . விளையாட்டு:

சிறிய சைக்கிளை ஓட்ட விடலாம். ஒரு பந்து இருந்தால் போதும் ;வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து விளையாடலாம். வளையம் (ரிங்) மிக நல்லது. தூக்கிப் போட்டு பிடிப்பது மிக நல்ல பயிற்சி .இதுதவிர வீசிப் பிடிக்க கிரிஸ்பி தட்டு இன்னும் சிறப்பு. நீங்கள் வழக்கமாக இறகுப்பந்து விளையாடுவராக இருந்தால் பெரிய குழந்தைகளுடன் விளையாடலாம். இல்லையென்றால் ஓடிப் பிடிக்கலாம். கண்ணாமூச்சி, தொட்டு விளையாடலாம். நொண்டி அடிக்கலாம். பச்சைக்குதிரை, பாண்டி, மரமேறுதல் என எத்தனையோ.வயதான தாத்தா ,பாட்டிகள் இருந்தால் தாயம் விளையாடுவது பல்லாங்குழி , மற்றும் என பல விளையாட்டுக்கள்.கயிறு குதித்தல் மிக நல்ல விளையாட்டு. படி ஏறி இறங்குதல் அதிக பலம் தரும் .தோப்புக்கரணம் போடுவது மிக நல்லது .பெரிய குழந்தைகளுக்கு மூச்சுப்பயிற்சி பிரணாயாமம் சொல்லித் தரலாம், யோகாசனமும் நல்லது

13.வீட்டில் உள்ள சாமான்களை வைத்து கொண்டு செல்வதற்கு உதவியாக தடை நடைஏற்படுத்தலாம்.தவளையை போல எத்திச்செல்வது ,வாத்தை போல நடப்பது, நண்டு போல ஊர்வது என விலங்கு போல செய்யச்சொல்லலாம்.

இவை நான் அறிந்த படித்த சில. இணையத்தைபயன்படுத்தி குழந்தைகளுக்கான மற்ற செயல்களை கண்டறிந்து பின்னூட்டமிடுங்களேன்!!

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.