பிஸ்கெட், சாக்லெட் ,சிப்ஸ், மென்பானங்கள் சாப்பிடாத குழந்தையும் இல்லை. தராத பெற்றோரும் இல்லை பிஸ்கட்டு தானே !அவசரத்துக்கு இருக்கட்டும்!!! என வீட்டில் வைக்காத பெற்றோரும் இல்லை !!எந்த ஒரு விழாவிலும் சாக்லெட் ஒரு முக்கிய இடம் வகிக்கும் .எந்த ஒரு உணவுக்கும் கடித்துக்கொள்ள சிப்ஸ். தாகத்திற்கும் பயணத்தின்போதும் விழாக்காலங்களிலும் மென்பானங்கள்.இப்படியாகத்தான் உலகமே இயங்கி வருகிறது.
வீட்டில் தயாரிக்கும் உணவுகளை விட டப்பாக்களில் விற்கும் மாவுச் சத்து உணவுப் பொருட்கள் சிறந்தவை என்ற நம்பிக்கை காலம் காலமாக பரப்பப்பட்டும் நம்பப்பட்டும் வருகிறது. இவை உண்மைதானா?? இந்த நுண் பதப்படுத்தப்பட்ட பொருட்களைத் தொடர்ந்து உட்கொள்ளும் குழந்தைகளுக்கு என்ன பிரச்சினைகள் ஏற்படலாம் ??இதற்கு மாற்று என்ன??? இவ்வுணவுகளின் தீய விளைவுகளைத் தடுக்க அரசு என்ன செய்ய வேண்டும்? என்பதனை இக் கட்டிரையில் பார்ப்போம்
உணவுப் பதனிகள், இனிப்பூட்டிகள், நிறமேற்றிகள், சுவையூட்டிகள் எனப்பல சேர்க்கப்படுகின்றன. மதிப்பிற்குரியவர்கள் பங்கேற்கும்விளம்பரங்கள் இலவச மாதிரிகள் அனைவரையும் மயக்குகின்றன. எனவே குழந்தைகளுக்கு அதிகச் சத்துக்களைத் தரும் என்ற நம்பிக்கையில் வாங்கப்படுகின்றன .இவை குழந்தைகளின் உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிப்பன என்பது பெற்றோர்களுக்குப் புரிவதும் இல்லை.இவைகளின் தீமைகளைப் புரியும்படி சொல்லும் காணொளிகளோ கட்டுரைகளோ கண்ணில் படுவதும் இல்லை .
வணிகம் சார்ந்த ஊடகங்கள், அன்றாட உணவுத் தயாரிப்பின் சிரமங்கள், தாயும் தந்தையும் சேர்ந்து வேலைக்கு போக வேண்டிய பொருளாதாரக்கட்டாயம். கண்ணைக் கவரும் விளம்பரங்கள் என பலவற்றினைக் கடந்தால்தான் நுண் பதப்படுத்தப்பட்ட உணவுகளைப்பற்றிய உண்மைகள் தெரிகின்றன.
.நிறைய இல்லங்களில் காலை மற்றும் மாலை வேலைகளில் சிற்றுண்டியாக காப்பி டீயுடன் குழந்தைகளுக்கு உண்ண உணவாக ஐந்து ரூபாய்\ மூன்று ரூபாய் பிஸ்கட் புறை, வறுக்கி நெய் பிஸ்கட் மிக்ஸர் ஆகியவை வழங்கப்படுகின்றன இவைகளின்அதிகத் தயாரிப்பு மற்றும் குறைந்த விற்பனை விலை தான் முதல் தூண்டில் .பணவீக்கம் அதிகமாக உள்ள இக்காலத்தில் ரூ.5க்கும் பத்துக்கும் கிடைக்கும் பிஸ்கட்டுகளின் தயாரிப்பில் இருக்கும் சத்து என்ன ?வேதிப்பொருட்களின் அளவு எவ்வளவு என்பது சிலருக்கு மட்டும் தான் தெரியும்
அதிக இனிப்பூட்டிகள் மற்றும் உப்பு விலை குறைந்த பாமாயில் மற்றும் நிறை கொழுப்புள்ள சக்தி நீக்கிய மைதா இதனுடன் ஐந்துக்கு மேற்பட்ட வேதிப்பொருட்கள் கலந்து தான் காற்று புகா பொட்டலங்களில் இவை கிடைக்கின்றன உயிர் சத்துக்களை இழந்த மைதா தான் மூலப் பொருள் இந்தப் பெருந்தீனிகள் எடை அதிகரிப்பு ,சர்க்கரையின் உயர்அளவு ,உடலின் அலற்சி மற்றும் செரிமானமின்மையை ஏற்படுத்தும்
2013ல்எடுக்கப்பட்ட ஆய்வின்படி பிஸ்கட் உள்ளிட்ட நுண்பதப்படுத்தப்பட்ட பொருட்கள் மூளையின் சுறுசுறுப்பு மற்றும் மன மலர்ச்சிக்கு உரிய பகுதிகளை தூண்டுகின்றன என்பது தெரிந்தது. மார்பின் போதைப்பொருட்களை பயன்படுத்தும் போது ஏற்படும் தூண்டுதலை இது ஒத்திருக்கிறது எனவே இவைகளை தினமும் உண்டு நன்கு பழக்கப்பட்டு போன மூளைக்கு இவ்வகை உணவுகளை உண்பதை குறைப்பதோ நிறுத்துவதோ இயலாமல் போகிறது
இவ் வுணவுகளில் உள்ள அதிக உப்பு ,மிகு ரத்த அழுத்தம் பக்கவாதம் இதய செயல் திறன் இழப்பினை ஏற்படுத்தலாம். உடல் நீரினை உள்ளே சேர்த்து வைத்துக் கொள்ளலாம். சோடியம் மோனோ பென்சொவைட் உண்பவரின் டிஎன்ஏ விற்கு சேதத்தினை உண்டாக்கும் இவ்வகையான அடுமனைத் தயாரிப்புகள் குறைவான நார்ச்சத்தும் வயிறை நிரப்பும் ருசியும் கொண்டவை. எனவே மலச்சிக்கல் ஏற்படும் .பசியும் குறையும் .கிரீம் ,சீஸ் ,அதிகம் உண்டால் டிரை கிளிசரைட் கொழுப்பு அதிகரிக்கும் .இவைகளின் எடை அதிகரிக்கும் திறனுக்கு காரணம் சேர்க்கப்படும் அதிக சர்க்கரை நல்ல சத்துக்கள் எதுவுமில்லை .சீரண பிஸ்கட் என விற்கப்படும் பிரபல பிஸ்கட்டில் 100 கிராமுக்கு கார்போஹைட்ரேட் 66 கிராம் சர்க்கரை 21 கிராமுடன் நிறை கொழுப்பு 19 சதவீதமாக உள்ளது நாலு பிஸ்கட் 30 கிராம் சர்க்கரைக்கு சமம் 100 கிராமிற்கு 470 கிலோ கேலரி சர்க்கரை போட்டு சேர்த்து விட்டால் அதுவும் சேர இது ஒரு கொழுப்பு பிஸ்கட் கூடவே சோடியம் பை கார்பனேட்சமையல் சோடா டார்டாரிக்அமிலம்
நமது ஊரில் கிடைக்கும் அனைத்து பிஸ்கட்டுகளுமே அதிக இனிப்பு நிறை கொழுப்பு மற்றும் பாமாயில் தயாரிப்புகள் தான் சாக்லேட் பைட்ஸ் என பல வகை தயாரிப்புகள் இவைகளின் விற்பனையைக் கூட்ட குட்டி பொம்மைகள் குழந்தைகளுக்கு பிடித்த கார்ட்டூன் கதாநாயகர்கள் அழகான குடும்பம் சுட்டியான குழந்தை என குடும்பம் இவர்களுக்கு தேவையான அதிக பாலின தருகிறது எங்கள் பிஸ்கட் ,கரகர முறுமுறு என்ற சுவை, புதினா உள்ளிட்ட வாசனை கலந்தவை. 50 க்கு 50 எனத் தம்பட்டம் .விலை குறிப்பின் ரகசியமான வெறும் கலோரி சத்து இல்லாத உணவு என்ற உண்மை தெரிவிக்கும் மாதிரி முகப்பு வில்லை இல்லை
கவனக்குறைவாக இருந்தால் பொம்மைகள் குழந்தைகளின் மூச்சு குழாயினை அடைக்கும் ஆபத்தும் ஏற்படலாம்.மூன்றாண்டுகளுக்கு முன் வெளியான ஆராய்ச்சிகள் இவ்வகை உணவுகளை ஐந்து வயதுக்கு கீழே உள்ள குழந்தைகள் 50% உண்பதை எடுத்துக் காட்டுகின்றன.அதிகம் உண்ணும் உணவுகளில் பதப்படுத்தப்பட்ட நொறுக்குகள் வறுவல்கள் இனிப்பு மற்றும் குளிர் மென்பானங்கள் அடுமனைப் பொருட்கள் நமது குழந்தைகளின் உணவு பட்டியலில் இடம் பெற்று விட்டன
விளம்பரங்கள் பிரபலங்களின் தாக்கத்தினால் உணவு பற்றாக் குறையினால் வளராத குழந்தைகளுக்கு உதவ மால்ட் சேர்த்த பாலில் கலக்கும் பொடிகள் வாங்கப்படுகின்றன உணவுப் பதனிகள் இனிப்பூட்டிகள் நிறமேற்றிகள் சுவையூட்டிகள் திரவமாக்கிகளுடன் அதிக சர்க்கரை உப்பு நிறை கொழுப்பு என சேர்க்கப்படுகின்றன சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் என்ன என்று மக்கள் படித்துப் பார்த்து வாங்குவதும் இல்லை வில்லைகளும் ஆங்கிலம் தவிர்த்து மற்ற மாநில மொழிகளில் எளிதில் புரியும் வண்ணம் பளிச்சென முன்பக்கத்தில் ஒட்டப்படுவதில்லை இது நுண் பதப்படுத்தப்பட்ட உணவு இதில் அதிக சர்க்கரை உப்பு நிறை கொழுப்பு உள்ளது என்ற வில்லைகள் முன் பக்கத்தில் இருந்தால் நம் குழந்தைக்கு இது ஆபத்தானது என்ற செய்தி தாய்க்கும் தந்தைக்கும் தெரியும்
முன்பக்கம் ஒட்டப்படும் விலைலைகளில் போக்குவரத்து விளக்குகளைப் போல பச்சை மஞ்சள் சிகப்பு பயன்படுத்துவது நல்லது. பச்சை நல்லது மஞ்சள் ஓரளவு நல்லது சிகப்பு தீங்கானது என்பது பாமரனுக்கும் புரியும் வண்ணம் இருக்க வேண்டும். தங்களுடைய வருவாய் குறையலாம் என்பதனால் நிறுவனங்கள் இதற்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமம் செய்கின்றனர் .இவர்களே தங்களுக்கென ஒரு மதிப்பீட்டு முறை வைத்துள்ளனர் இயற்கை உணவுகளுடன் செயற்கையான தங்கள் தயாரிப்புகளான ஒப்பிட்டு இரண்டும் சமம் என்று விளம்பரம் செய்யும் டகாலடி வேலைகள் ஆரம்பமாகிவிட்டன சர்க்கரை மற்றும் உப்பினைக் குறைத்துவிட்டோம் இயற்கையை முறையில் தயாரிக்கப்பட்ட நிறமூட்டிகள் மனம் சுவை மெருகூட்டிகளை தான் பயன்படுத்துகிறோம் என சப்பைக் கட்டு கட்டுகிறார்கள் தங்கள் தயாரிப்புகளில் இந்த சத்துக்கள் உள்ளன அதனால் கிடைக்கும் உடல்நலம் மற்றும் நன்மைகள் இவை என்று சொல்லி சந்தைப்படுத்தும் முறையை முன்னெடுத்து வருகின்றனர் இதன் மூலம் தங்களுடைய தயாரிப்புகள் உடல் நலத்தினை மேம்படுத்தும் குறிப்பிட்ட நோயினை குணப்படுத்தும் என்பதை நிரூபிக்க வேண்டியது இல்லை அதிக புரோட்டின் அதிக கால்சியம் அதிக நார்ச்சத்து ஒமேகா மூன்று டிஎச்ஏ ஆண்ட்டி ஆக்சிடென்ட் என உணவி்ன் ஒரு மூலக்கூற்றினை மற்றும் முன்னுறுத்தி கூவி விற்கிறார்கள் .எல்லோரையும் நம்ப வைக்கஉணவுகளைச் சுற்றி ஒளிவட்டம் உருவாக்குகிறார்கள்
நுண்பதப்படுத்தப்பட்ட உணவுகள் நம் குடலின் நுண்ணுயிர் மண்டலத்தில் சீர்கேட்டினை விளைவிக்கின்றன இதன் காரணமாக குடல் மண்டல நோய்கள் தொடங்கி தன்எதிர்ப்பு நோய்கள் மன நோய்கள் என பலவும் வருவதாக ஆரம்ப கட்ட ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன மிகச்சிறிய அளவில் தேவைப்படும் சத்து சேர்த்த உணவினை பற்றாக்குறைக்கு தீர்வாக வைக்கிறார்கள் பேரிச்சம்பழத்தின் குறைவாகவே இரும்புச்சத்து இருந்தாலும் ரத்த சோகைக்கு தீர்வாக எண்ணி ஏமாறுகிறார்கள் .புரதச்சத்து பிஸ்கட், மாவு டப்பாக்களில் அதிகம் இருப்பது சர்க்கரை .வீட்டு சத்து உணவினைப்போல குறைந்த அளவில்தான் புரதம் உள்ளது என்பது சிலருக்கு மட்டுமே தெரிந்த உண்மை.
இந்தியாவில் தற்போது மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் உயரம் குறைந்தும் ஆறில் ஒரு பங்கு உயரம் எடை இரண்டும் குறைந்ததாக இருக்கிறார்கள் 5 வயதுக்கு குறைந்த குழந்தைகள் ஐம்பது விழுக்காட்டினருக்கு மேல் நமது இந்தியாவில் இருப்பதனால் சத்துணவு வளர்ச்சி குறைபாட்டின் தாயகம் என்று இந்தியாஅழைக்கப்படுகிறது மூன்றில் இரண்டு குழந்தைகள் மற்றும் விடலைப் பருவத்தின ரத்த சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளனர் .
வெறும் அரிசி கோதுமையை விடுத்து சிறுதானிய உணவுகளை மக்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் அத்துடன் கீரை காய்கறி மற்றும் பருவ கால பழங்கள் பருப்பு பயறு எண்ணெய் வித்துக்கள் முட்டை மற்றும் கறி உணவுகள்உண்பதை மக்களிடையே முன்னெடுக்கவேண்டும்
குழந்தைகள் உட்பட அனைத்து குடும்ப உறுப்பினர்களும் ஏற்ற உணவினை பிரபலப்படுத்த வேண்டும் இதற்கான காணொளிகள் பரவவேண்டும்
