childhealthtoday

childhealthwiki

நெகிழிப்பைகள்பிளாஸ்டிக் பொருட்கள்

1 min read

 வீடுகள் பாடசாலைகள் கோயில்கள் குளங்கள் அழகிய பூங்காக்கள் ஆறுகள் பள்ளிகள் கல்லூரிகள் என எங்கும் நீக்கமற நிறைந்தவை இந்த பாலிதீன் பைகளும் பிளாஸ்டிக் பொருட்களும். பார்ப்பதற்கு கவர்ச்சியானவை .எடுத்துச்செல்ல எளிமையானவை .எனவே தான்.கற்றவர்களும் இந்த நெகிழிப் பைகளை கடைகளில் தவறாது கேட்டு வாங்கி எடுத்துச் சென்று வெளியே எறிந்து சுற்றுச்சூழலுக்கு பெரும் தீமை விளைவிக்கின்றனர்

முந்தைய காலங்களில்,கடைவீதிக்கு சென்றவர்கள் துணிப்பைகள், ஒயர் கூடைகள் ஆகியவைகளை கைகளில் எடுத்துச் செல்லும் பழக்கம் இருந்தது .அவை ஆபத்தற்றவை.மறுசுழற்சிக்கு உகந்தவை. ஆனால் இன்று கைகளிரண்டையும் வீசிக்கொண்டு கடைவீதி  வருகிறார்கள். காசு கொடுத்து நெகிழிகளை வாங்க வேண்டும் என்ற சூழ்நிலை வரும்போதுதான் யோசிக்கின்றனர். புறப்படும்போது மறுசுழற்சிக்கு உதவும் பைகளை எடுத்துச்செல்ல தேவை அவர்தம் மனநிலை மாற்றமே

நெகிழிப் பைகள் வரும் ஆபத்துப்பை என்று நினைத்துப் பார்ப்போம். அவைகளை என்றும் தவிர்ப்போம்

நெகிழிப் பைகளால் சுற்றுப்புறத்தில் அழகு கெடுகிறது. இவை கடைகளையும் கழிப்பிடங்களை அடைத்துக் கொள்கின்றன. விவசாய நிலங்களில் நிறைந்து விடுவதால்மண் சுவாசிப்பது தடைப்படுகிறது. பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.மிக அடர்த்தி குறைந்த நெகிழிப் பைகளை மறுசுழற்சி முறையில் பயன்படுத்த இயலாது மண்ணில் புதைத்தாலும் இவைகளினால் காலம் ஏறத்தாழ 300 ஆண்டுகள் .

எரித்து விடலாம் என்றால் அப்போது வெளிப்படும் வாயு மூச்சுத்திணறலை ஏற்படுத்தும் குணமுடையது.  கிழிந்து விடுவதால்நிரந்தரமாக  வைத்துக் கொள்ளவும் இயலாது. கால்நடைகள், வன விலங்குகள், கடல் உயிரினங்கள் இவைகளை உண்டால் மரணம் அடைகின்றன. இவை மட்டுமல்ல பயன்படுத்திவிட்டு பின் எரியக்கூடிய பிளாஸ்டிக் தமிழர்கள் தட்டுகள் டப்பாக்கள் பாக்கெட்டுகளில் பேனாக்கள் குடங்கள் பவுடர் டப்பா மளிகை சாமான் பாக்கெட்டுகள் என ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் தினமும் எறியப்படுகின்றன . எரிக்கப்படும்போது ஏற்படும்   புகைஆஸ்துமா மற்றும்  மூச்சுத்திணறலை ஏற்படுத்துகின்றது இனிமேலாவது அனைத்து பொருட்களையும் மறுசுழற்சிக்கு உபயோகப்படும் வண்ணம் வாங்குவோம்.

துணிப்பைகளை பயன்படுத்துவோம் மளிகைப் பொருட்களை காகித உறைகளில் பெறுவோம் .பிளாஸ்டிக் தட்டுகள். நாற்காலி, முக்காலி இவைகளைத் தவிர்ப்போம் .உபயோகப்படுத்திய நெகிழிப் பைகளை பிரித்து மாநகராட்சி, ஊராட்சி, கிராமப்புற சுகாதாரப் பணியாளர்களிடம் தருவோம். மறுசுழற்சிக்கு அவைகளை பயன்படுத்துவோம்

வருங்கால தலைமுறைகளான நம் குழந்தைகளுக்கு நெகிழியின் நோய்த் தன்மையை எடுத்துரைப்போம். தவிர்க்க உதவுவோம் .மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்த பழக்குவோம் .மறுசுழற்சிக் காண வழிமுறைகளை எடுத்துக் காட்டுவோம். உதாரணமாக இருப்போம் .உண்மையோடு உழைப்போம்

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.