ஒவ்வொரு குழந்தைக்கும் பற்கள் வளர்வது இரண்டு வரிசை முறைகளில் நடக்கிறது முதலில் பால்பற்கள் முளைக்க ஆரம்பிக்கும் .பால் பற்கள் தெரிய ஆரம்பித்தவுடன் குழந்தைகளை பராமரிக்கும் உங்கள் வேலை ஆரம்பிக்கிறது குழந்தையின் முழு உடல்நலத்திற்கும் முக்கிய தேவை ஆரோக்கியமான பற்கள்.

பல் முளைக்கும் போது குழந்தைக்கு வலிக்கலாம் .அதனால்அழுது கொண்டே இருக்கலாம் அதை பார்த்து பெற்றோர் கவலைப்படலாம் இது இருவருக்கும் தினசரி சிரமமாக இருக்கும் குழந்தைகள் உமிழ்நீர் வழியலாம். தூக்கம் குறையலாம் இது எதுவும் இல்லாமல் நிறைய குழந்தைகளுக்கு பற்கள் தானே முளைத்து விடுகிறது இந்த சூழ்நிலையில் உங்கள் குழந்தைக்கு எவ்விதத்தில் உதவலாம்் என்பதை இந்தக்கட்டுரை விளக்கும்.

முதல் பல் ஏறக்குறைய ஆறு மாதத்தில் தோன்ற ஆரம்பிக்கும் .இது ஒவ்வொரு குழந்தைக்கும் சிலகாலம்வேறுபடும். சில குழந்தைகளுக்கு ஆறு மாதத்திற்கு முன்னரோ அல்லது சில குழந்தைகளுக்கு 12 மாதத்திற்கு பின்னரும் முதன் முதலில் பற்கள் மு ளைக்கலாம் .இது பற்றி கவலைப்பட வேண்டாம் கீழ் தாடையில் நடுவிி ல் வெட்டும் பற்கள் முதலில் தோன்றும் இவைகளைத் தொடர்ந்து இரண்டு ,மேல் முன் பற்கள் தோன்றும் .

பால் பற்கள் மொத்தம் 20 .ஐந்து வயதிற்கு பின்னர் 13 வயதுக்குள் பால் பற்கள் ஒன்றன்பின் ஒன்றாக விழ ஆரம்பிக்கும் . பி ன்னர் நிலையான பற்கள் முளைக்க ஆரம்பிக்கும்.
பல் வளர்வது தெரியவில்லை என்றாலும் பல் முளைக்கும் போது சில அடையாளங்கள் இருக்கும்.. ஈறுகள் வீங்கி சிவந்து இருக்கும் குழந்தை வாயில் பலவிதமான பொருட்களை வைத்து கடிக்கும்..ஒரு பக்கம் உமிழ்நீர் சுரப்பு அதிகமாகி எச்சில் வடியும் குழந்தை எரிச்சலாகவும் , அசவுகரியத்துடனும் அழுது கொண்டும் துருதுருவென்றும் இருக்கும்..
நமது ஊரில் பல் முளைப்பதால் பிரச்சனைகள் வரும் என்ற நிறைய நம்பிக்கைகள் உண்டு. காய்ச்சல், வயிற்றுப்போக்கு, காது வலி, வாந்தி ,வயிற்று வலி, எடை குறைவு, வலிப்பு என பல பிரச்னைகளுக்கும் ஊருக்கு இளைத்த பிள்ளையார் கோவில் ஆண் டியாகிவிட்டது பல் முளை த்தல்.

வலியைக் குறைக்க கை விரல் அல்லது துணியால் சுற்றிய விரல் மூ லம் அழுத்தி விடலாம். ஈறு நம நமநமப்பைக் கு க்க சுத்தமான பிளாஸ்டிக்கால் ஆன வளையம் தரலாம் கட்டாயம் தேன் சூப்பான் கூடாது. புட்டி தரவேண்டாம். சிறுதுண்டுகளாக வேக வைக்கப்பட்ட காய்கறிகளை த் தரும்போது ஈறு வலி குறை யு ம். மொறு மொறு வென்ற சிறிய பழத்துண்டுகள் கவனமாக தரவும்.
வடியும் எச் சில் ,உதட்டின் கீழ் லில் எரிச்சல் ஏ ற் படுத்தலாம். தோல் நிறம் மாறுதல் ஏற்படலாம் அடிக்கடி கைக்குட்டையை வைத்து துடைத்து விடவும் கடைகளில் விற்கும் ஜெல்களை மருத்துவர் ஆலோ சனை இன்றி தர வேண்டாம்.
பற்களையும் ஈறுகளையும் பாதுகாப்பது எப்படி?
தினம் ஒரு முறை ஈ று க ள் பற்களை சுத்தம் செய்ய வேண்டும் மிருதுவான தூ ரி கை கள் உள்ள பற்குச்சியை உபயோகப்படுத்தலாம் பழரசங்கள் மற்றும் இனிப்பு பா னகங்களை இரண்டு வயது வரை தர வேண்டாம். எக்காரணத்தைக் கொண்டும் புட்டியில் எதுவும் தரப்பட க்கூடாது. பால் புட்டி தந் து குழந்தையைை த் தூங்க ப் பழக் கி னா ல் பால்குடி பற்சிதைவு குழந்தைக்கு பிரச்சினையை உண்டு பண்ணும்.வெறும் பாலை மட்டும் குடிக்கும் குழந்தைக்கு போதுமான சத்துக்கள் கிடைக்காது எனவே சத்துக் குறைபாடுகள் (முக்கியமாக இரும்பு சத்து குறைபாடு )ஏற்படும் .உங்கள் குழந்தைக்கு மூன்று வயது ஆன பிறகு ஒரு நாளைக்கு இரண்டு நிமிடமாவது பல் விளக்க ச் சொல்லித் தரவும் .ஒரு பட்டாணி அளவு பற்பசையை எடுத்து உபயோகிக்கலாம் .பற்பசையினைக் குழந்தைகள் விரும்பும் .துப்புவதற்கு பொறுமையாக பழக்க வும்.. ஆறு வயதுக்கு பிறகு ப்ளோரைடு கலந்த பற்பசைகளை பயன் படுத்தலாம்
ஈ று வலி அதிகமாக இருப்பின் பாராசிடமால் தரவும். குழந்தையின் உடல் நிலையில் ஏதாவது அதிகமாக மாற்றம் ஏற்பட்டால் மருத்துவரை கலந்து ஆலோசிக்கவும்
மேலும் படிக் க
