childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

கண்ணில் ஏற்படும் காயங்களுக்கு என்ன செய்வது ?

1 min read

விளையாட்டுத்தனமாக இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு உடலில் பல இடங்களில் அடிபடுவதும் காயம் ஏற்படுவதும் வழக்கமாக நாம் பார்க்கும் ஒன்று. அதிலும் கண்ணில் காயம் ஏற்படும்போது பெற்றோர் மற்றும் அனைவரும் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்று பயப்படுவது இயல்பு. கண்ணின் பகுதிகளில் எதனால் காயம் ஏற்படும்? என்ன விளைவுகள் ஏற்படும் ?அதற்கு என்ன செய்யலாம் ?என்பதை இப்போது பார்ப்போம்

நன்றி. கூகுள்


விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளஇன் கண்ணில் சிறிய பொருட்கள் ,தூசு மற்றும் சில திரவங்கள் படலாம். உள்ளே சென்ற பொருட்கள் கண்ணில் எதிர்விளைவை ஏற்படுத்தும். எனவே காயம்பட்ட கண்ணின் விழிவெண்படலம் சிவந்தும் வலியோடும் உறுத்தலோடும் இருக்கும். கண்ணை திறப்பதில் சிரமப் படலாம்.வலியின் காரணமாக மூடிக்கொண்டே இருக்கும் சிலவேளைகளில் கண்ணீர் சொரிந்து கொண்டே இருக்கும் . வெளிச்சத்தில் பார்க்க முடியாமல் கண் கூசும்
கண் காயங்களை ஏற்படுத்தும் பொருட்கள்
கைவிரல் நகம் ,கூர்மையான பொருள், உலோகம், கல், மரம், கண்ணாடி ,உடைந்த பொருட்களின் துகள்கள் ,மண் ,குப்பை, அழுக்கு, தெறித்து விழுந்த திரவப் பொருட்கள், கண்ணில் அடித்தபந்து,எறிந்த பொருள்கள் , பட்டதனால் உடைந்து கண்ணுக்குள் செல்ல வும் கூடும்

நன்றி. விக்கி பீடியா


அடிப்பட்ட கண் எப்படி இருக்கும்?
அடிபட்ட அனுபவத்தின் காரணமாக குழந்தை பயந்திருக்கலாம் கண்ணுக்குள் வலிக்கலாம் .கவலைப்பட வேண்டாம் என்று குழந்தைக்கு ஆறுதல் சொல்லவும் .கண்ணைத் தேய்ப்பதோ, கண்ணில் இருக்கும் பொருளை எடுக்க முயற்சிப்பதோ கூடாது. கண் இமைகளை அடிக்கடி அசைக்காமல் இருக்கச் சொல்லவும் கண்ணை மூடி இருக்கும்படி வைத்துக்கொள்ளலாம் வலி. இல்லை என்றால் கண்ணை திறந்து நேராகப் பார்க்க சொல்லலாம் இதனால் கண்ணுக்குள் இருக்கும் வலி குறையும்
கை வைத்தியங்கள் ஆன தாய்ப்பால் கண்ணில் வி டுதல், வீீ ட்டில் உள்ள பழைய கண் மருந்துகளை போடுதல், கண்ணில் இருக்கும் தூசியை ஊசிமூலம் எடுத்தல், பேண்ட் எய்டு மூலம் எடுக்க முயற்சி செய்தல் உள்ளிட்ட செயல்களைச் செய்ய வேண்டாம். போதுமான அனுபவம் இன்றி நாமே முயற்சிகளில் இறங்குவது கண்ணுக்குள் இருக்கும் துகளை ஆழத்தில் செலுத்தவும் காயத்தை அதிகப்படுத்தவும் செய்துவிடலாம். எனவே இதை தவிர்க்கவும்

நன்றி .கண் மருத்துவ இதழ்


சரி வீட்டில் என்ன செய்யலாம் என்பதை இப்போது பார்ப்போம்.
சிறிய மணல் துணுக்கு ஆகியவைகளை மெதுவாக கண்ணைைத் தண்ணீர் ஊற்றி கழுவும்போது தானே வெளியேறிவிடும் .பெரியவர்களின் கைகளில் தண்ணீரை சேமித்து வைத்துக்கொண்டு கண்ணை தண்ணீருக்குள் வைத்து திறந்து மூடுவது தூசுகளை வெளியேற்றிவிடும் . பெரிய குழந்தைக்கு குளிர்ந்த நீரால் மென்மையாக கழுவலாம்
தொடர்ந்து கண்ணுக்குள் உறுத்தல், கண் வலி ,கண்ணைத் திறக்க முடியவில்லை , கண்ணில் கூச்சம் இருந்தால் மருத்துவரை சந்திக்கவும் .மருத்துவர் கண்ணில் கீறல், காயம் உள்ளதா ?என்பதனைப் பரிசோதிப்பார் காயம் இருப்பின் அதன் ஆழத்தையும் தன்மையும் அறிந்து கொள்ள வண்ண திரவத்தை உபயோகப்படுத்தி பரிசோதனை செய்வார் கண்ணில் நோய் தொற்றாமல் இருப்பதற்காக மருத்துவர் தரும் மருந்தினை குறிப்பிட்ட காலத்திற்கு கண் சொட்டு மருந் தாக தர வேண்டும்


கண்ணிற்குள் ஏதாவது பொருட்கள் உட் பு குந்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.கண்ணைத் தேய்த்தாலும் அழுத்தினாலும் கண்ணுக்குள் அது சென்றுவிடும்.அதை தவிர்ப்பதற்காக காயம்பட்ட கண்ணை சல்லடைத் துணிவைத்து மூடிவிடவும் .உங்கள் கண் மருத்துவரை உடனே அணுகவும்.

கண்ணில் ஏதாவது ரசாயன வேதி பொருட்கள் தெரித்திருந்தால்?


உங்கள் குழந்தையின் கண்களில் ஏதாவது ரசாயன பொருள் அல் லது ஏதாவது செடியின் பால் தெறித்திருந்திருந்தால் உடனடியாக பாதிக்கப்பட்ட கண்ணினை 10 நிமிடங்களுக்கு ஓடும் தண்ணீரில் கழுவுங்கள். கண்ணைை க் கழுவும்போது முகத்தின் மேல் தண்ணீரை கொட்டுவதை தவிர்க்கவும். சல்லடைத்துணி உபயோகப்படுத்தி கண்ணை மூடி மருத்துவருடைய ஆலோசனையைை ப் பெறவும் கண்ணின் பட்ட வேதிப்பொருள் மாதிரியையோ அல்லது அதனுடைய து ண் டு க் குறிப்பைையோ கொண்டு போகவும்
கண்ணில் காயம் படுவதை தடுக்க சில யோசனைகள்
1. கிட்டிப்புள் ,பம்பரம் முதலி ய விளையாட்டுக்களை சிறு குழந்தைகள் விளையாடாமல் தவிர்க்கவும். பெரிய குழந்தைகளுக்குக் கூட கண் காயம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் வேறு விளையாட்டுக்களை விளையாடுவதற்கு ஊக்குவிக்கவும்
2. கிரிக்கெட், கால்பந்து, மென்பந்து, ஹாக்கி முதலிய விளையாட்டுக்களின் போது கவனமாக இருக்கவும் முகக் கவசம் அணி யவும் குழந்தைகளுக்கு வலியுறுத்துங்கள்
3. வேதிப்பொருட்களை கைகளில் பட நேர்ந்தால் , கழு வாமல் கண்களைத் தொடக்கூடாது என்பதனைச் சொல்லித்தாருங்கள்
4. கண்ணுக்குள் காயம் ஏற்பட்டாலும் ஏதாவது பொருள் உள்ளே நுழைந்துவிட்டாலும் சல்லடைத் துணியால் கண் ணை மூடி மருத்துவர் ஆலோசனை பெறவும்

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading