
இரைப்பை நாம் உண்ணும் உணவின் முதல் நிலை ஜீரணம் நடக்கும் இடம் .எதுக்களிப்பு நோய் என்பது இரைப்பையில் உள்ள உணவுப் பொருளானது( பால். உணவு ஏதாயினும் )தன்னிச்சையாக ஈசோபேகஸ் உணவுக் குழாய்க்குள் திருப்பி மேலே செல்வதாகும் .மூச்சுவிடுவதில் சிரமம், இருமல் ,நெஞ்சு எரிச்சல் ,திரும்பத் திரும்ப வாந்தி எடுத்தல் ,தொண்டைக் கரகரப்பு ,தொண்டையில் அடிக்கடி புண் என இது பல வகையாக வெளிப்படலாம் .சுலபமாக அறிந்து கொள்ள முடியாத நோயானதால்சந்தேகப்பட்டு தேவையான பரிசோதனைகள் செய்து கொள்வதன் மூலம்தான் கண்டுகொள்ள முடியும்

இரைப்பையில் சுரக்கும் அமிலம் இரைப்பைக்கு வரும் உணவுகளை ஜீரணிக்க உதவும் .அந்த அமிலம் இரைப்பையிலிருந்து மேலுள்ள ஈசோபேகஸ் உணவுக் குழாய்க்குள் செல்லும்போது, அதன் சுவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். புண்ணாகலாம். அலற்சி ஏற்படலாம். அதன் பிறகு உணவு குழாய் சுருங்கலாம்
ஒரு வயதுக்குக் கீழே மற்றும் ஒரு வயதுக்குமேல் உள்ள குழந்தைகளுக்கு இந்நோயின் அறிகுறிகள் வேறுபடும்.
ஒரு வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு ஏற்படும் அறிகுறிகள்
குழந்தைக்கு அடிக்கடி வாந்தி இருக்கலாம் .அடிக்கடி உமிழ்நீரை வெளியே தள்ளலாம் .உணவு உண்ட போதும் அதற்குப் பின்னும் அழுது கொண்டிருக்கலாம். உணவு தரும்போது சாப்பிட மறுக்கலாம் அல்லது விழுங்குவதற்கு சிரமப் படலாம் .உணவு உண்டபின் முதுகை வில் போல வளைத்து திரும்பத் திரும்ப இருமல், சுவாசிக்க சிரமம் அல்லது மூச்சிறைப்பு ஏற்படலாம் . உணவுப் பொருட்கள் மூச்சுக் குழாய்க்குள் செல்வதால் மூச்சுத்திணறலால் இவையெல்லாம் ஏற்படும் சிரமங்கள் .எனவே குழந்தையின் எடை போதுமான அளவு கூடியிருக்காது.அடிக்கடி நோய் வாய்ப்படும்.சிறிது சிறிதாக அதிக முறை உணவினை தரவேண்டும் .உணவு தந்த பிறகு 30 நிமிடங்களுக்கு குழந்தையை தோளின் மேல் சாய்த்து பிடித்திருக்கலாம் ,பால் , திரவ உணவுகளை தவிர்த்து கெட்டியான உணவுகளை தருவது நல்லது. குழந்தை இருக்கும் இடத்தில் புகை பிடித்தல்,தூசு தவிர்க்கவும்குழந்தை தூங்கும் போது தலையை சிறிது உயர்த்தி வைத்திருக்கலாம் தொட்டிலில் போட்டு உறங்க வைப்பதை தவிர்க்கவும். இறுக்கமான உடை போடுவதை தவிர்க்கவும்.
1வயதுக்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு அறிகுறிகளாவன
அடிக்கடி குழந்தை வாந்தி எடுக்கும். மார்பு அல்லது வயிற்றின் மேல் பகுதியில் வலி இருக்கலாம் .அடிக்கடி தொண்டைப் புண், இருமல் ,கரகரப்பு, காது நீர் கோர்த்தல் ,தொண்டையிலும் மார்பிலும் எரிச்சல் உணர்வு, மூச்சுக் குழாய் பிரச்சனைகளான ஆஸ்துமா, மூச்சிறைப்பு ,நிமோனியா போன்றவை ஏற்படலாம்தலையை 30 டிகிரி அளவிற்கு உயர்த்தி வைத்து தூங்க வை க்கவும்.குப்பை உணவுகளான கடை மற்றும் பாக்கெட் உணவுகளை தவிர்க்கவும்.அடிக்கடி உணவு சாப்பிட சொல்லித் தரவும் .எடை அதிகரிப்பின் எடையைக் குறைக்க தேவையான உடற்பயிற்சி மருத்துவ ஆலோசனை பெறவும். வயிற்றை இறுக்கிப் பிடித்தபடி பெல்ட் அணிவது, இறுக்கமான உடைகளை அணிவது தவிர்க்கவேண்டும்

இதற்குப் பிறகும் உங்களுக்கு எதுக்கு தொல்லை சரியாகவில்லை என்றால் மருத்துவரை அணுகுவது நல்லது



