Blog Stats

  • 128,333 hits
மே 16, 2024

childhealthtoday-குழந்தைநலம்

குழந்தை நலம்;குடும்ப பலம்

டெலிவிஷன் .திறன் பேசிபார்ப்பது குழந்தைகளைப் பாதிக்குமா?

1 min read

டெலிவிஷன் பார்ப்பது குழந்தைகளின் மனம் மற்றும் உடல்நலனைப் பாதிக்குமா?

    20-ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பான டெலிவிஷன் கடந்த 5 வருடங்களில் ஓரளவு வசதிபடைத்த அனைவரது வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்து கொண்டு வீட்டின் தலைவராகிவிட்டது. எந்த ஒரு செய்தி ஒலி, ஒளிபரப்பு ஊடகத்திற்கும் சாதக மற்றும் பாதகங்கள் உண்டு. மெழுகுவர்த்தியினைக் கொண்டு இருட்டினையும் விரட்டலாம். அதே நேரத்தில் வீட்டையும் கொளுத்தலாம். அதைப் போலவே டெலிவிஷனில் ஒளிபரப்பாகி வரும் தற்போதைய நிகழ்ச்சிகளின் தரம் தொகுப்பு சிந்தனை மற்றும் விளம்பரங்கள் வளரும் சமுதாயத்தினரை பாதிக்கும் விதமாக இருப்பது தான் கவலைக்குரியதாக உள்ளது.

 டெலிவிஷன் நிகழ்ச்சிகளால் பாதிப்பு உண்டா?

       நிகழ்ச்சிகளில் உலாவும் ஹீரோக்களின் நல்ல பழக்கவழக்கங்களை நடை, உடை, பாவனைகளை இளைய சமுதாயம் ஒத்தி எடுத்துக்கொள்ளும்ஆராய்ச்சி ஒன்றின்படி நடத்தை மாற்றங்கள், ஒரேமாதிரி செயலைச் செய்வது ஆகியவைகளில் சிறார்கள் ஹீரோக்களை பின்பற்றி வருகிறார்கள். அதேபோல் தீயதினையும் நகலெடுத்து பின்பற்றுவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.

 அறிவு வளர்ச்சியினைப் பாதிக்குமா?

 புலனறிவுகளின் மூலம் பெறும் சுற்றுப்புற தூண்டுதல்கள் மூளையின் திசுக்களின் இணைப்பு மற்றும் அதன் மூலம் மூளை வளர்;ச்சியை தீர்மானிக்கின்றன என்பதினை நரம்பியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். ஒரே மாதிரியான டி.வி. தூண்டுதலின் மூலம் ஒரே விதமான இணைப்பு மட்டும் உண்டாகலாம், மற்ற புலனறிவுத் தூண்டுதல் இல்லாமையினால் சரியான வளர்;ச்சி இல்லாமல் போகலாம். தன்னை கவனித்துக் கொள்ளும் உறவினரின் நெருக்கமான தொடர்பு, பேச்சு உருவாக இசைந்த சூழ்நிலை விளையாட்டின் மூலம் பெறும் உணர்வு வயதிற்கேற்ற கல்வியறிவினைத் தூண்டும் செய்திகள் இவைகள் மூளை திசுக்களின் இணைப்பினைப் பெற நல்ல உதவிகரமாக இருக்கும்இதனை விடுத்து சோம்பேறியாக இருந்து சின்னத்திரையினை மட்டும் உற்றுப் பார்த்துக்கொண்டே இருப்பது, பொருந்தாத நடத்தை (அவசரம்/ வன்முறை), கூட இருக்கும் உறவினைப் பெறாமலிருத்தல், பாவனை விளையாட்டு என பெறவேண்டிய வாய்ப்புகள் கிடைப்பதில்லை. எந்தவொரு செயலினையும் திட்டமிடுதல், ஒழுங்கமைத்தல் மற்றும் தன்னடக்கம், கவனம் மற்றும் நடுநிலை ஆகியவைகளை சரிசெய்யும் முறை பின் பிராண்டல் கார்டெக்ஸ் பகுதியில் மழலையிலிருந்து விடலைப்பருவம் வரை வளர்ச்சியடைகிறதுஅந்த நேரத்தில் அதிக டெலிவிஷன், இதன் வளர்ச்சியினை தடுத்து பாதிப்பதற்கு வாய்ப்புக்கள் அதிகம்.

        கண் பார்வையில் தூரத்துப்பார்வை மிக முக்கியமானது. குறுகிய தொலைவிலுள்ள சின்னத்திரையினையே உற்றுப்பார்த்துக் கொண்டேயிருப்பதால் சரியான தூரப்பார்வை தூண்டல் இல்லாமல் சரியான பார்வை மலராமளிருக்கலாம்.

 உடல் ரீதியாக ஏதாகிலும் பாதிப்பு உண்டா?

 ஆம். இருவகையாகப் பிரிக்கலாம்டி.வி. முன் 3 -4 மணிநேரம் அமர்ந்து தின்பண்டங்களின் அளவினைக் கணக்கில் கொள்ளாமல் கொறித்துக் கொண்டேயிருப்பதால் உடற்பருமன் நோய் மற்றும் அதன் தொந்திரவுகளும் வரும்எடை குறைந்த ஒரு மாதிரிகளைப் (models) பார்த்து அவர்களைப் போல் இளைத்து எலும்பும் தோலுமான மாறி அழகியாக வரவேண்டி பட்டினி கிடந்து உடலைக் கெடுத்துக் கொள்வதும் உண்டு கலந்து பழகும் தன்மை இல்லாதவர்களின் ஆயுட்காலமும் குறையும்.

 சரி சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் என்ன?

 

  1. டி.வி. முன் சராசரியாக ஒவ்வொரு குழந்தையும் தினசரி 3 மணி நேரமும் செலவளிக்கிறது. மூளைத் தூண்டல் வேலைகள், உடற்பயிற்சி மற்றும் கலந்து விளையாடுதல் முதலியவைகளுக்காக நேரம் இதன்மூலம் களவாடப்படுகிறது. இன்டர்நெட், வீடியோ கேம்ஸ் இவைகளைக் கணக்கிட்டால் இது 6½  மணி நேரம் ஆகிறதுசொல்லப்போனால் பள்ளிக் கூடத்தில் செலவழிக்கும் நேரம் அளவிற்கு கேளிக்கைகளில் செலவாகிறது.

 

  1. 1000க்கும் மேற்பட்டு ஆராய்ச்சிக் கட்டுரைகள் மற்றும் ஆய்வுரைகள், தரும் முடிவு என்னவெனில், அதிகப்படியான திரை வன்முறைகளை பார்ப்பதுஅடாவடி மனநிலைக்கு தள்ளிவிடலாம். வன்முறைகளைப்பார்த்து பார்த்து மனது மரத்துப் போய்விடும். தங்களுடைய உலகம் வன்முறைகள், பயம் தரும் மற்றும் கேவலமான உலகம் எனக் குழந்தைகளை நம்ப வைக்கும் இவை சினிமா வீடியோ விளையாட்டு, டெலிவிஷசன் செய்தி, என பலரூபங்களில் தரப்படலாம்.

 மெல்லிய மனம் படைத்த குழந்தைகள் குண்டுவீச்சு பேரழிவுகள், கொலை மற்றும் வன்முறைக்காட்சிகளைப் பார்க்க நேரிட்டால் மனதளவில் காயம் பட்டு விடுகிறார்கள்; என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

 வாழ்க்கை பற்றிய தவறான கனவுச் செய்திகள் 

 ஒரு ஆண்டிற்கு சராசரியாக 14,000/-க்கும் மேற்கண்ட செக்ஸ் குறிப்புகளை பார்க்க நேரிடுகிறதுஅதில் விரல்விட்டு எண்ணக்கூடியவை மட்டுமே சரியான வாழ்க்கை முறை, விடலைப்பருவ நடத்தை, குடும்பக் கட்டுப்பாட்டு முறைகள், திருமணத்திற்கு முன் உடலுறவினைத் தவிர்த்தல் மற்றும் பாதுகாப்பற்ற உடலுறவின் மூலம் பரவக்கூடிய பால்வினை நோய்களைப் பற்றி தெரிவிக்கின்றது

 

  1. செய்தி ஊடகங்களில் வரும் செய்திகளும் நிகழ்வுகளும் புகையிலை ஆல்கஹால் மற்றும் போதை மருந்துப் பழக்கம் இவைகளை தவறான செய்கையாக காண்பிப்பதில்லை. வெற்றிப் படங்களின் கதாநாயகர்கள் புகைப்பது, மது அருந்துவது கும்மாளமிட்டு இருப்பது எனத்தான் உள்ளார்கள்.
  1. தொலைக்காட்சியில் வரும் குழந்தைகள், பேசும் வார்த்தைகள், வயதிற்கும், பருவத்திற்கும் ஏற்றதாக இல்லாமல் பெரியவர்கள் பேச்சாக இருக்கிறது.

 

  1. அதிக நேரத்தினை டி.வியின் மூலம் செலவழிக்கும் போது படிப்பில் கவனம் குறைந்து பள்ளிக்கூடத்தில் மதிப்பெண் எடுப்பது குறைகிறது என ஆய்வு தெரிவிக்கிறது. 
  1. சாப்பிட்டுக் கொண்டே டி.வி. பார்ப்பது, உடற்பயிற்சியின்றி ஒரே இடத்திலேயே இருப்பது கொழுப்புச்சத்து, மாவுச்சத்து நிறைந்;த தின்பண்டங்கள், பலகாரங்கள் குறைந்த உடற்பயிற்சி இதனால் உடற்பருமன் நோய் உண்டாகிறது. 3 மணி நேரம் டிவி பார்ப்பதன் மூலம் இருதய நோய், சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு ஏற்பட 30 சதவிகிதம்அதிக வாய்ப்பு. 
  1. ஊடக தாக்கத்தினைப் பற்றி கல்வியறிவு 

இதன் மூலம் நிகழ்ச்சிகளைப் பகுத்தறிந்து அதன் தாக்கத்தினை குறைக்கலாம். பொய்மைத்தன்மையினை புரிந்து கொள்ளலாம்வன்முறைக் காட்சிகளை தவிர்க்கலாம். கனடா, இங்கிலாந்து முதலிய நாடுகள் ஊடகங்களின் தாகத்தினை பற்றிய செய்திகளைப் பள்ளிபாடத் திட்டத்தில் சேர்த்துள்ளனர். 

வன்முறை டி.வி. (violenceவன்முறை மனப்பாங்கு

 வன்முறைக் காட்சிகளை தொடர்ந்து பார்ப்பது வாழ்க்கையில் சண்டைக் கோழி மனப்பாங்குவன்முறை எண்ணங்களை தூண்டி விடுகிறது. 

  • மூன்றில் இரண்டு பங்கு நிகழ்ச்சிகளில் வன்முறை உள்ளது. 
  • குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் அதிக வன்முறைகார்ட்டூன் Tom & Jerry-  கொண்டவைகளாயுள்ளன. 
  • வன்செயல்கள் வீரச் செயல்களாக சித்தரிக்கப்படுகின்றன. 
  • வன்முறையாளர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவதில்லை. 
  • மியுஸிக் டி.வி. வீடியோக்களில் நான்கில் 1 பங்கு, வன்முறை மற்றும் ஆயுதபாணியாக இருப்பதினைச் சித்தரிக்கின்றன. 
  • வன்செயல்களை உள்ளடக்கிய செய்திகள் கூட குழந்தைகளின் மனத்தினை புண்படுத்தலாம். தூக்கத்தில் கெட்ட கனவாக தொந்திரவு செய்யலாம்இது ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

புகைபிடித்தலும் டி.வி/ சினிமாக்களில் வரும் நேரடி தூண்டுதல்களும்

        புகையிலைச் சார்ந்த தொழில் நிறுவனங்கள் தங்களுடைய பிராண்ட் சிகரெட் உபயோகிப்பதில் மூலம் இனக்கவர்ச்சி, செல்வம், எதிர்மறை எண்ணங்கள்மற்றும் துடிதுடிப்பு  தரும் எனச் செய்திகளைத் தருகிறார்கள்நிகழ்வுகளில் புகைப்பவர்கள் வெற்றிகரமானவர்களாக, துடிப்பான சாதிப்பவர்களாக காட்டப்படுகிறார்கள். தங்களுடைய ஹீரோவின் புகைப்பழக்கத்தினை ஒட்டி புகைப்பதினை பற்றிய கண்ணோட்டம் விடலைகளுக்கு ஏற்படுகிறது.  2001 ஆண்டு வந்த ஆராய்ச்சிக் கட்டுரை நமக்குச் சொல்லும் செய்தி என்னவெனில் திரைக் காட்சிகளில் புகைப்பதினை அடிக்கடி பார்க்கும் விடலைகள் புகைப்பழக்கத்தினை ஆரம்பிக்கின்றனர்ஒரு தடவை படமாக்கப்பட்ட திரைக்காட்சியினை விட வருடக் கணக்கில் அடிக்கடி பார்க்கப்படும்போது விளம்பரம் மனதில் பதியும்.

        புகைப்பதினை திரைக் காட்சிகளில் அடிக்கடி பார்ப்பது புகைப்பழக்கத்தினை ஆரம்பிக்க அடித்தளமாக இருக்கும்.

  • அனைத்து தொலைக்காட்சி சானல்களில் வரும் நிகழ்ச்சிகளில் சிகரெட், மது அருந்துதல் மற்றும் போதை மருந்து பழக்கம் பற்றிய குறிப்புகள் வருகின்றன. நாலில் ஒரு பங்கு  திரைப்படம்/வீடியோக்களில் ஆல்கஹால்/ புகைப்பிடிப்பது வருகிறதுசமீபத்திய ஆராய்ச்சியின்படி டெலிவிஷன்/ மியுஸிக்கைப் பார்க்கும் நேரத்தினைப் பொறுத்து ஆல்கஹால் உபயோகம் அதிகமாவதாக கண்டறியப்பட்டுள்ளது. 

ஆல்கஹால் உபயோகம் அதிகமாகுமா? 

        வெப்ப நாடான இந்தியாவில் மது அருந்துவது தேவையற்ற தீங்கான உடலை அழிக்கும் செயல்துரதிஷ்டவசமாக அதிகமான வீடுகளில் எலெக்ட்ரானிக் தாதியாக மாறி வரும் சின்னத்திரை இளமையான துடிப்பான வெற்றிகரமானவர்கள் மதுவருந்தி சந்தோஷமாக இருப்பதாகக் காட்டுகிறது. இது மதுவின் தீமைகள் குடிநோயின் தன்மை உடல் பொருளாதார மன மற்றும் உடல் பாதிப்புகளை எடுத்துக் காட்டுவதில்லை. 

        நம் குழந்தைகளுக்கு இம்மாதிரி விளம்பரங்களின் நோக்கம் அதன் பொய்மை, தீய விளைவுகள் பற்றி எடுத்துக் கூறி மது அருந்துதலின் தீமைகளைப் பற்றி கூற வேண்டும்.

 விளம்பரங்கள் 

        கி.மு. 1750 – ஹாமுராமியின் சட்டப்படி குழந்தைக்கு நேரடியாக பொருட்களை விற்பது கடும்குற்றமாக கருதப்பட்டு, மரண தண்டனை அளிக்கப்பட்டது.

 

  • உடனடி உணவு/ பொம்மைகள் பற்றிய விளம்பரங்கள், நேரடி தாக்கினை உண்டாக்கும்.
  • 10 நிமிடம் விளம்பரம் 1 மணி நேர நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படுகிறது.
  • 8 வயது வரை உண்மைக்கும் விளம்பரத்திற்கும் வித்தியாசம் தெரியாது. எனவே விளம்பரத்தினைப் பார்த்து அடிக்கடி பார்க்கும் பொருட்களினை கேட்டு சாப்பிட்டு பழக வாய்ப்பு அதிகம்.

 குழந்தைகளுக்காக டி.வி. பற்றி ஏதாவது சட்டம் உள்ளதா?

         இந்தியாவில் இல்லை. அமெரிக்காவில்குழந்தைகள் டி.வி. சட்டம் உள்ளதுநிகழ்ச்சிகளின் தரம், தன்மையினைப் பொறுத்துப் பிரிக்கலாம்.

                விசிப் மூலமாக (V Chip) குடும்ப உறுப்பினர்கள் பார்க்கத்தகாத நிகழ்ச்சிகளை தடுக்கலாம்.  1998 முதற்கொண்டு அனைத்து டெலிவிஷன் செட்களிலும் இந்த வி.சிப் அமெரிக்காவில் பொருத்தியே விற்கப்படுகிறது.

 இந்த மாதிரியான முயற்சிகளுக்கு வரவேற்பு இருக்கிறதா?

         நன்றாக உள்ளதுவெள்ளை மாளிகையில் உள்ள போதை ஒழிப்பு கட்டமைப்பும், போதை மருந்து தடுப்பு மையமும் சேர்ந்து ஊடகம் பற்றி இந்த திட்டத்திற்கு 3,00,000/- அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளார். இந்நிதி    போதை அடிமைத்தனத்தில் செய்தி ஊடகங்களில் தாக்கம் பற்றிய ஆராய்விற்கும், மது, போதை மற்றும் புகை உபயோகத்தினை தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

 உலக அளவில் டெலிவிஷன் பற்றிய விழிப்புணர்வு வாரம் ஏதாவது உண்டா?

         ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் கடைசி வாரம் (T.V.Turn off Week)எனக் கொண்டாடப்படுகிறது. டி.வி.யை நிறுத்திவிட்டு வாழ்வோம் என்ற கருத்தில்நிறுத்துவோம் டி.வியினை, வாழ்வோம் வாழ்க்கையினைஎன்ற முழக்கத்துடன் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் கொண்டாடப்படுகிறது.

       பள்ளிக்கூட வன்முறைகள், துப்பாக்கிச் சண்டைகள், பாலுணர்வு செய்திகள், தெருவோர கலவரங்கள், எய்ட்ஸ் அநாதைகள் இவைகளுக்கும் சின்னத்திரை நிகழ்ச்சிகள், வன்முறைகளுக்கும் தொடர்பு உள்ளதால் இவ்வாறான காலத்தின் பார்வை ஊடகங்களைப்பற்றிய விழிப்புணர்வு பெற்றோர் பொதுமக்கள், அரசியலர், சின்னத்திரை நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் மற்றும் சமுதாயத்திற்கு ஏற்படுத்துதல் அவசியம்.

        குழந்தைகளுக்காக நிகழ்ச்சிகள்  தனிக் குறியீட்டினைக் கொண்டு காண்பிக்கப்பட வேண்டும்.அதைப் போலவே –கேளிக்கை, செய்தி என தனித்தனி குறியீடுகள் தரப்படவேண்டும்.

        நம் நாட்டின் தனியார் தொலைக்காட்சிகளும் இதனைப் பின்பற்றி நிகழ்ச்சிகளைத் தயாரிக்க வேண்டும்இம்மாதிரியான நிகழ்ச்சிகள்

        குறைந்தபட்சமாக 30 மணித்துளிகள் இருக்கலாம்இடையிடையே விளம்பரங்கள் தடை செய்யலாம்நல்ல நிகழ்;ச்சிகளை பற்றி செய்தி ஊடகங்களில் பாராட்டலாம்.

        நிகழ்ச்சி தயாரிப்பில் குழந்தை மருத்துவர்கள் உதவலாம். 

  • முடிவுரை :

         டெலிவிஷன் அறிமுகம் ஆனதிலிருந்து விளம்பரம் முதல் வியாபாரம் வரை அனைத்தினையும் வெகுவேகமாக அனுபவித்துவரும் நாடு வல்லரசான அமெரிக்காதான்அந்நாட்டின் 55,000 குழந்தை நல மருத்துவர்களைக் கொண்ட அமெரிக்கன் அகாடமி ஆப் பீடியாட்ரிக்கல் தன்னுடைய கருத்துக்களைச் சொல்லியுள்ளவை.

 

  1. இரண்டு வயதிற்கும் கீழான குழந்தைகள் டி.வி. பார்க்கக்கூடாது.

 

  1. மூத்த குழந்தைகளைத் தன்னிச்சைப்படி டி.வி. இண்டர்நெட் தன் அறையில் வைத்துக்கொள்ள விடக்கூடாது.

       

  1. டெலிவிஷனின் ஆழ்ந்த ஆதிக்கத்தைப் பெற்றோர்களுக்கு சொல்ல வேண்டும். பெற்றோர்கள் நல்லதரமான வயதுக்கேற்ற குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளை கண்டறிந்து தன் குழந்தை பார்க்க உதவ வேண்டும்.

 

  1. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 1 மணி நேரம் மட்டும் வுஏ பார்க்க அனுமதிக்கவும். குறைந்த நேரத்தினை மட்டும் டெலிவிஷன் முன் செலவழிப்பது, மற்றும் அதனின் வாழ்க்கைத் தாக்கம் பற்றி அவர்களிடம் பேசவும் செய்யனும்.

 

  1. டிவியினைத் தவிர்த்த கற்பனை, விளையாட்டுக்கள், படித்தல், உடற்பயிற்சி விளையாட்டு, நண்பர்களோடு நேரம் செலவழித்தல் மற்றும் உபயோகமான பொழுதுபோக்குகளில் குழந்தைகள் ஈடுபட ஊக்கமளிக்கலாம்.

 

  1. குழந்தைகள் பார்க்கத் தகுந்த நிகழ்ச்சிகளை பொறுக்கி எடுக்கவும். சிறார் மற்றும் விடலைகள் நிகழ்ச்சிகளை பார்க்கும்போது கூட இருந்து அந்த நிகழ்ச்சியினைப் புரிந்துகொள்ள உதவ வேண்டும். சர்ச்சைக்குரிய விஷயங்கள் மனதில் தாக்கத்தினை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை சேர்ந்து பார்க்கும்போது கூட விவாதித்து விளக்கமளிக்கலாம்குழந்தைகளுக்கான தரமான வீடியோ கேசட் மற்றும் சி.டி.-களை பார்க்க அனுமதிக்கவும்.

 

  1. ஆபாசமின்றி சரியான முறையில் வாழ்க்கைக்கு வாழ்க்கைக்கல்வி அளிக்கப்பட வேண்டும்.

 

  1. பீர், மதுபானங்களின் விளம்பரத்தினை தடை செய்ய வேண்டும். இவைகளின் தீமைகளைப் பற்றி, எதிர் விளம்பரம் செய்ய வேண்டும்.

 

  1. டெலிவிஷனில் காண்பிக்கப்படும் வன்முறைக் காட்சிகள் குழந்தைகளின் மனதில் ஏற்படுத்தும் தீய எண்ணங்களை பற்றி அனைவரிடமும் எடுத்துச் சொல்ல வேண்டும். டி.வி. வன்;முறைக்காட்சிகளை குறைக்க நாடளாவிய விவாதம் நடத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

 

  1. தங்களுடைய மருத்துவமனைகளில் வயதிற்கேற்ற பொம்மைகள், புத்தகங்கள் வைத்தல், கல்;வி அறிவு வளர்ச்சிக்கான வீடியோ கேசட் மற்றும் டி.வி.யினை தவிர்ப்பதன் மூலம் தகுந்த முன் உதாரணமாக குழந்தைகள் நலமருத்துவர்கள் இருக்கவும்.

 

  1. நாட்டின் வருங்காலச் செல்வங்களான குழந்தைகளின் வளர்ச்சியினை பாதிக்காத அறிவுவளர்ச்சிக்கு உதவும் நிகழ்ச்சிகளை உருவாக்கவும், டி.வி. நிகழ்ச்சிகளின் தரத்தினை கண்காணித்தும், மற்ற தன்னார்வர்களுடன் இணைந்து இயங்க வேண்டும்.

 

About Post Author

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Copyright © All rights reserved.

Discover more from childhealthtoday-குழந்தைநலம்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading