childhealthtoday

childhealthwiki

குழந்தையிடமிருந்து சிறுநீரை சேகரித்தல்

1 min read

குழந்தையிடமிருந்து சிறுநீரை சேகரித்தல்QUICK WEE        (விரைவாக சிறுநீரை சேகரித்தல் முறை)

சிறிய குழந்தையிடமிருந்து சிறுநீரை பிடித்து சிறுநீர் பரிசோதனைக்கு தருவது என்பது சமயங்களில் மணிக்கணக்கில் எடுத்துக்கொள்ளும் என்பது அனைவருக்கும் தெரியும் ஏனென்றால்  குழந்தை சிறுநீர் எப்போதுகழிக்க போகிறது ? அப்போது நாம் தயாராக இருக்க வேண்டும். சிறிது ஏமாந்தாலும் சிறுநீர் சேகரித்தல் இயலாது.மறுபடியும் மூன்று நான்கு மணி நேரம் பொறுமையாக காத்திருக்க வேண்டும் தூக்கத்தில் சிறுநீர் கழிக்கலாம் விழித்தவுடன் உடனே சிறுநீர் கழிக்கலாம்

 

 

சிறுநீர் சேகரித்தலை சுலபமாக்குவதற்கு ஒரு வழி இருக்கிறது

QUICK WEE1

மிகச் சிறிய குழந்தைகளுக்கு விரைவாக சிறுநீரை சேகரித்தல் முறையை பயன்படுத்தலாம் குழந்தையின் எடைஒரு கிலோவுக்கு 25 மில்லி அளவுக்கு திரவ உணவினை தரவும்அல்லது தாய்ப்பாலூட்டும் குழந்தைக்கு  தாய்ப்பால் தரவும்.உதாரணத்திற்காக குழந்தை 10 கிலோ எடை உள்ளதாக இருந்தால் 250 மில்லி திரவ உணவு பால் ,பழச்சாறு, வெறும் தண்ணீர் என எது வேண்டுமானாலும் இருக்கலாம்.

 

25 நிமிடங்கள் கழித்த பின்னர் பிறப்பு உறுப்பு பகுதியில் வெதுவெதுப்பான நீர் மற்றும் சோப்பினால் கழுவி சுத்தமான பஞ்சை கொண்டு துடைக்கவும் சுத்தமான கொள்கலனை தயாராக அருகில் வைத்திருக்கவும் .குழந்தையை அக்குளில் தாங்கியபடி கால்கள் தொங்கும்படி பிடித்துக்கொள்ளவும் சிறுநீர் பையினை தூண்டும் பயிற்சிகளை செய்ய ஆரம்பிக்கவும்

அந்த பயிற்சிகள் என்ன? என்ன?

1.அடிவயிற்றுப் பகுதியில் கைவிரலால் ஒரு நிமிடத்திற்கு 100 முறை என்ற வேகத்தில் 30 நொடிகள் மென்மையாக தட்டவும் .

2.முதுகின் கீழ் பகுதியில் தண்டுவடத்தின் இருபுறமும் மெதுவாக வட்டமாக விரல்களினால் 30 நொடிக்கு தூண்டவேண்டும்

 

 

 

New-stimulation-technique-to-obtain-midstream-urine-in-newborns-A-Tapping-in-the

 

இந்த இரண்டு தூண்டுதல் பயிற்சிகளையும் சிறுநீரை சேகரிக்கும் வரை தொடர்ந்து செய்யவும் .அதாவது முதல் பயிற்சி அடிவயிற்றுப் பகுதியில் விரலினால் ஒரு நிமிடத்திற்கு நூறுமுறை என்ற வேகத்தில் 30 நொடிகள் மென்மையாக தட்டவும் குழந்தையை திருப்பி முதுகின் கீழ் பகுதியில் தண்டுவடத்தின் இருபுறமும் மெதுவாக வட்டமாக விரலினால் 30 நொடிக்கு தூண்டவேண்டும் சிறுநீரை சேகரிக்கும் வரை இந்த இரண்டு தூண்டுதல் பயிற்சிகளையும் தொடர்ந்து செய்யவும்

 

இப்பயிற்சிகள் மூலம் விரைவாக சிறுநீரைச் சேகரிக்கலாம்

 

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading