childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

கிருஷ்ணரின் கதையும் குழந்தை வளர்ப்பும்

1 min read

KRISHNA 2

மஹாராஷ்டிரா மாநிலத்தில் திருமணமாகி செல்லும் பெண்ணின் கையில் ஒரு கிருஷ்ணரின் சிலையை கொடுப்பர்.. ஏனெனில் அந்த பெண்ணும் கிருஷ்ணரை போல் குழந்தையை ஈன்றெடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலே கிருஷ்ணரின் கதையை அனைத்துக் குழந்தைகளும் விரும்பி கேட்பர். கிருஷ்ணர் பிறப்பதற்கு முன்பு 7 பெண் குழந்தைகள் பிறந்தனர். அவர்களை ,மாமா கம்சன் கொலை செய்தான். 8வது குழந்தையான கிருஷ்ணரே பிழைத்தது. இது நமக்கு பலவிதமான பாடங்களை கற்பிக்கிறது.

1. ஒரு குழந்தை பிறந்த பிறகு இறப்பின் பெற்றோர்கள் அனைத்துக் குழந்தையுமே இறக்குமோ என அச்சமுறுகின்றனர்.. அவர்களுக்கு இந்த கதையை கூறி நம்பிக்கை ஊட்டலாம்.

2. கிருஷ்ணர் ஏன் இறக்கவில்லையென்றால் அவர் பிறக்கும்போது அவரின் தந்தை தாயுடனேயே இருந்தார். எனவே ஒவ்வொரு தாயும் பிரசவிக்கும்போது தந்தை உடனிருக்க வேண்டும். ஏனெனில் அவசரமாகவும், அவசியமாகவும் தாயிற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமாயின் தந்தையின் ஒப்புதல் அவசியம் தேவை.

3. கிருஷ்ணர்நடு இரவில் அவதரித்தார். இரவில் சில சமயங்களில் செவிலியர் மருத்துவர் பணி சிறப்பாக அமைவதில்லை. எனவே இந்த நிலையை மாற்றி இரவிலும் போதுமானி பணியாளார்கள் இருத்தல் வேண்டும்.

4. பிரசவத்தின் சில சமயங்களில் 50 சதவீதம் குழந்தையின் உயிருக்கே ஆபத்துக்கள் அதிகமாக உள்ளது. 1000 பேரில் 5 தாய்மார்களும் சில சமயங்களில் அவதிக்குள்ளாகின்றனர். 5. எனவே பிரசவத்தின் பொழுது இருக்கும் அனைவருக்கும் சிறந்த முறையில் பிரசவம் பாரக்கும் பயிற்சி அளிக்க வேண்டும்.

KRISHNA 3

6. ஒரு குழந்தை பிறந்தபின் அதனை இடம் மாற்றி எடுத்துச் செல்ல வேண்டுமெனில் குழந்தையை குளிரிலிருந்தும், வறண்ட நிலைகளிலிருந்தும், வேறு நோய் தாக்காமலும் கவனித்து கொண்டே செல்ல வேண்டும். ஆம்பூலன்ஸில் ஆக்ஜிஸன் போன்ற அத்தியாவசிய தேவைகளையும் எடுத்துச் செல்ல வேண்டும்.

7. கிருஷ்னரின் தாய்தேவகி சிறையில் இருந்தாள். ஆனால் அவனோ தேவகியின் பாலை உண்டே வளர்ந்தான். இக்கதையின் மூலம் குழந்தை பாலை மற்ற தாயிடமும் உண்ணலாம் என்பதை வலியுறுத்தலாம்

. 8. குழந்தைகளையும். தாயையும் உறவினா;களிடமிருந்து 45 நாட்கள் தள்ளி வைக்க வேண்டும். ஏனெனில் சில சமயம் உறவினர்கள் குழந்தையை காண வருவராயின் அவர்களுக்கு சளி. இருமல், காய்ச்சல் இருப்பின் அது குழந்தையை தாக்கக்கூடும். எனவே குழந்தைகளை பிறர் தூக்கிக் கொஞ்சுவதை அனுமதிக்ககூடாது. 9. குழந்தைகளின் கையில் நுரலினை கட்டி அவர்களின் எடை கூடியதைக் கணிக்க முடியும். நூல் இறுகுமானால் அவர்கள் எடை கூடியுள்ளதை காட்டும், நூல்ல் தளர்ச்சி அடைந்தால் குழந்தை எடை குறைவானதை குறிக்கும். எனவே அக்குழந்தைகக்கு ஆரோக்கியமான உணவை அளிக்க வேண்டும். இடுப்பில் அரைநாண் கயிறு இருப்பின் அது இறுகுமானால் குழந்தையின் உணவு அளவைக் குறைக்க வேண்டும்.

KRISHNA 1

10. குழந்தைக்கு 6 மாதம் ஆகும்போது நன்கு மசித்த உணவு, அரிசி, நெய், மசித்த பழங்கள், காய்கறிகளை தர வேண்டும். அவர்களுக்கு தாய்ப்பாலுடன் அதனை கலந்து தரலாம். இதனால் நாளடைவில் தாய்ப்பால் குடிக்கும் அளவு குறைந்து உணவு மிகுதியாக உண்ணத் தொடங்கும்.

11. குழந்தை வளர, வளர அதன் கால் சட்டைப் பையில் பொறி, வறுத்தக் கடலை, வறுத்த வேர்க்கடலை போன்றவற்றை கொண்டு நிரப்ப வேண்டும். அது இல்லையெனில் அரிசியை வறுத்து வெல்லம் சேர்த்துக் கொடுக்க வேண்டும். இதைக் குழந்தை விரும்பும் போதெல்லாம் உண்ணலாம். குழந்தை எப்போது வேண்டுமானாலும் உண்ணலாம். தண்ணீர் அருந்தவும் வழிச் செய்து தர வேண்டும். இதை நாம் உயரே வைத்திருப்பதால் குழந்தை பிறரை எதிர்ப்பார்த்து இருக்கிறது. எனவே குழந்தை அதை எடுத்து உண்ண சுலபமாக எடுக்கும் விதத்தில் வைத்திருக்க வேண்டும். குழந்தைக்கு உணவு கிடைக்கவில்லையெனில் குழந்தை பசியால் வாடி பின் நலிவடையும்.

 

5
12. குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுமாயின் அது நிறைய நீரீனை அருந்த உதவும் வகையில் தண்ணீரை  அருகேயே வைக்க வேண்டும். ஏனெனில் வெயில் காலத்தில் மிகவும் உஷ்ணத்தினால் வெப்ப நோய், வயிற்றுப்போக்கு ஏற்படும். இதை தடுக்க அவர்களுக்கு நீரினை குடிக்கும் வகையில் வைத்திருக்க வேண்டும்.

13. குழந்தையில்லாத பெண்ணும், ஆணும் குழந்தையினை தத்தெடுத்து வளர்த்து வரலாம். இதன் அவசியத்தையும் கிருஷ்ணணை யசோதை எடுத்து வளாத்ததின் கதை மூலமாக உணர்த்தலாம்.

14. கிருஷ்ணரின் கதை மூலமாக குழந்தையின் வளர்ச்சி, குழந்தை பராமரிப்பு, தாய்ப்பாலின் அவசியம், தண்ணீர், உணவின் முக்கியத்துவம், உடற்பயிற்சியின் நன்மை, நடனம், வீரம், தோழமை, நல்ல சிறந்த பண்புகள் முதலியவற்றை குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் கற்றுத் தந்து நாட்டின் சிறந்த குடிமகன்களாக உருவாக்கலாம்.

 

நன்றி- இனிமையான ஆனந்தமான குழந்தை வளர்ப்பு

டாக்டர்.ஹேமந்த் ஜோசி மும்பை

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading