childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

குழந்தைகள் விரல் சூப்புவது ஏன்?

1 min read

குழந்தைகள் கை சூப்புவதற்கான காரணத்தை அறிவது பற்றியும் அதற்கு சிகிச்சை செய்ய வேண்டுமா ?எந்த வித சிகிச்சை நல்லது ?எப்போது செய்வது ?என்பதைப் பற்றி நிறைய சந்தேகங்களும் மாற்றுக் கருத்துகளும் நிலவுகின்றன

முதலில் குழந்தை கை சப்புவது என்பது ஒரு பிரச்சனையான விஷயம் அல்ல என்பதைப் புரிந்துகொள்வோம். தாயின் கர்ப்பப்பையில் இருக்கும் போது 29 வாரத்திலிருந்து குழந்தை கை விரல் சப்ப ஆரம்பிக்கிறது.சில குழந்தைகள் பிறக்கும் போது விரல் சப்பியதால் ஏற்பட்ட நீர்க்கட்டியோடு பிறக்கின்றன.பசியெடுக்கும்போதுமுதல் மாதத்தில் பச்சிளம் குழந்தை அதிகமாக விரல் சப்புகிறான்

கை விரல் சப்புவது மனிதனுடைய சொந்தக்காரர்கள் குரங்குகளிலும் கூட இருக்கிறது பல்லாண்டு காலமாக இருந்த சாதாரணமான பழக்கம் பாரம்பரிய இத்தாலிய ஓவியங்களிலும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.குழந்தைகள். பெருவிரல். மற்ற விரல்கள் .முன்கை ,மணிக்கட்டு எனவும் கிருஷ்ணன் உள்ளிட்ட குழந்தைகள் காலைக்கூட சப்பிவிடுகின்றனர். தொடர்ந்து குழந்தை விரல் சப்பும் போது அந்த இடம் புண்ணாகிறது. சிலவேளைகளில் காப்பு காய்த்தும் போய்விடுகிறது. கூடவே முடியை இழுத்தல், காதைப் பிடித்து இழுத்தல் ,முடியை திருகுதல், பிறப்பு உறுப்புப் பகுதியை தேய்த்தல் ,மூக்கைத் தேய்த்தல் என பல வேலைகளையும் செய்கிறது

ஐந்து மாதத்திற்கு பிறகு கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் வாய்க்குக் கொண்டு வருகிறது இது குழந்தையின் வளர்ச்சியில் ஒரு நிலை. வாய் மூலம் அனைத்து பொருட்களையும் கடித்துப் பார்த்து தெரிந்து கொள்ளும் நிலை இது. எதனால் வருகிறது என்பதைப் பற்றி நிறைய மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன இது வளர்ச்சியின் ஒரு அங்கமாக கருதப்படுகிறது. சாதாரணமாக பசி, வெட்கம் ,பல் முளைத்தல், சோர்வு அல்லது தூக்கம் இருந்தால் குழந்தைகள் விரலை சப்பும். அடுத்து பல் முளைக்கும் போது மறுபடியும் சப்ப ஆரம்பிக்கலாம். பல் முளைத்த ஈறுகளில் விரலை வைத்து தேய்க்கும் பிறகு விரல் சப்பும் அதிகபட்சமாக 1.6 வயதிலிருந்து இரண்டு வயதுக்குள் விரல் சூப்பும். தூங்குவதற்கு முன் வாயில் விரலை வைத்து உடனடியாக தூங்கும் . பிறகு சூப்பாது.

தாய்ப்பால் ஊட்டுவதற்கு எந்த விதத்திலும் பிரச்சினையையும் உண்டு பண்ணாது சாதாரணமாக 10 லிருந்து 30% வரை குழந்தைகள் விரல் சூப்பும்‌. இது பிரச்சனை இல்லாத ஒரு பழக்கம்தொடர்ந்த கவலை அளிக்கக்கூடிய விஷயம் இல்லை ஆனால் வருடக்கணக்கில் தொடர்ந்து விரல் சப்பும் குழந்தைகளுக்கு நகச்சுற்று ,வைரஸ் தொற்று, விரலில் காப்பு காய்த்தல் என பல தொல்லைகள் ஏற்படலாம் நான்கு வயதிற்குள் இந்த பிரச்சனை முடிந்து விட்டால் சிரமங்கள் ஏதம் இராது

பால் பற்கள் மற்றும் நிலையானபற்களில் ஏற்படும் மாறுதல் எவ்வளவு நாள் குழந்தை விரலை ச் சூப்பியது என்பதினைப்பொருத்தது. விரல் சப்புதல் தொடர்ந்தால் ஒரு பழக்கமாக மாறி விடும் சிறிது வயது அதிகமான குழந்தை பாதுகாப்பின்மை சலிப்பு மற்றும் தூக்கத்துக்காக விரல் சப்புபும்.பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி வரைக்கும் இதைப்பற்றி மக்கள் கவலைப்படவில்லை. பிறகு முதுகு வளைதல் டான்சில் வீக்கம், அஜீரணம், வயிற்றுவலி ,சொத்தைப்பல்* ஜீரணக் கோளாறுகள் என பல பிரச்சினைகளுக்கு இதுதான் காரணமாக இருந்தது என குற்றம்சாட்டப்பட்டது.மிக குறைந்த பேர்நான்கு வயதிற்குமல் விரல் சப்பும் போது பற் பிரச்சினை கள் ஏற்படுகிறது சில காலம் முன்பு வரை நிறைய சிகிச்சை கள் இருந்தன.அவைகளால் ஒரு பயனுமில்லை.அறிவுறுத்தப் படுவது இல்லை .

இந்த சிகிச்சை முறைகள் மனதளவில் பாதிப்புகள் ஏற்படுத்தும்.கைவிரல் நகங்களில் கசப்பு மருந்தை தடவுவதும் பிளாஸ்திரி ஒட்டி வைப்பதோ கூடாது 3–4 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகள் அடிக்கடி விரல் சப்பினால்/ ,இரண்டு வேளையும் / சில நாட்கள் நிறத்தி மறுபடியும் ஆரம்பித்தாலும் என்ன காரணம் என்பதைக்காணவேண்டும். குழந்தைக்கு சலிப்புதான் காரணமாக இருந்தால் விளையாடுங்கள். குழந்தைக்கு பாதுகாப்பின்மை அல்லது அடக்குமுறை அல்லது பொறாமை இருப்பின் எதனால் என்பதனை கண்டு அதனை சரி செய்யுங்கள் பயமுறுத்துவத தண்டனை தருவது கூடாது அடிக்கடி இதைப் பற்றி கவலைப் படுவது போல் அவன் முன் காண்பித்துக் கொண்டு இருந்தாவ் வேண்டுமென்றே செய்ய ஆரம்பிப்பான் மூன்று வயது தாண்டியும் குழந்தைக்கு நேரடியாகவே சொல்லலாம் இது சின்ன குழந்தை வேலை நீ பெரியவன் ஆகி விட்டாய் எனவே இதை விட்டு விடு எனச் சொல்ல வேண்டும. குழந்தையை கேலி செய்வது மிரட்டுவது வெட்கப்பட வைப்பது பயமுறுத்துவது உள்ளிட்டவை எதுவும் செய்யக்கூடாது ஐந்து அல்லது ஆறு வயது தாண்டும் போது அதிகபட்சமாக அனைத்து குழந்தைகளும் விட்டுவிடுவார்கள் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டும் என்ன பிரச்சனை என்பதை பார்க்க வேண்டும் .எப்படி அதை குறைப்பது என்பதனையும் தெரிந்து கொள்ள வேண்டும்

குழந்தை சூப்புவதுஇல்லையென்றால் அப்போது பாராட்டுவது குழந்தைக்கு நேர்மறையான தூண்டுதலை தரும் குழந்தையைப் பாராட்டலாம் உணவு தவிர வேறு ஏதாவது பரிசு தரலாம் .நாள்காட்டியில் எத்தனை நாட்கள் விரல் சப்பவில்லை என்பதை குறித்து வைத்துக் கொள்ளலாம். உடனடியாக விரல் சப்ப வேண்டும் என்று நினைக்கும் போது ஏதாவது எடுத்து கவனத்தைத் திசைதிருப்பலாம் . எதுவும் முடியலை என்றால் மேல் அண்ணத்தில் பதியும் தகடு தட்டு என உபயோகப்படுத்திக் கொள்ளலாம் மூன்று மாதங்கள் சாதாரணமாக இருந்தாலே முழு குணம்

பெற்றோர்களும்குழந்தை மருத்துவர்களும் முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டியது நான்கு வயதில் இது தானே சரியாகி விடும் என்பதுதான்.சில கு ழந்தைகளுக்கு மனோரீதியான மருத்துவ சிகிச்சைகளம் தேவை. எனவே இனிமேல் விரல் சூப்பினால் கவலைப்பட வேண்டாம். 4-5 வயதுக்கு மேல் இருந்தால் என்ன காரணத்தினால் குழந்தை விரல்சூப்புகிறது என்பதை கவனமாக பாருங்கள்..பிறகு சரி செய்து விடலாம்

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading