
ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை உலகெங்கும் மனைவியைப் பாராட்டும் நாள் என தற்போது கடைபிடிக்கப்படுகிறது. யாராலும் அதிகம் பாராட்டப்படாத எழுதப் படிக்கத் தெரியாத கிராமத்துப் பெண்ணான கஸ்தூரிபா காந்தி, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியுடன் 60 ஆண்டுகள் இணைந்து ஈடுகொடுத்து வாழ்ந்தது என்பது சாதாரண காரியம் அல்ல. மாபெரும் சாதனை அந்த சாதனையை சாதித்தவர் பா என்று அனைவராலும் அன்னையாக அன்போடு அழைக்கப்பட்ட கஸ்தூரிபா.

1944ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் நாள் பூனாவில் ஆகாகான் மாளிகையில் ஆங்கில அரசால் சிறை வைக்கப்பட்டிருந்த கஸ்தூரிபாய் தன்னோடு சிறையிலிருந்த தன் அன்பு கணவரின் மடியில் தலை வைத்து தனது இன்னுயிர் நீத்தார். அன்னை விரும்பியவாறு அவரது மரணம் அண்ணலின் அரவணைப்பில் நிகழ்ந்தது. காந்திஜி உயர் கல்வி கற்றுத் தேர்ந்த பேரறிஞர் .உலகத் தலைவர். லட்சியவாதி. புரட்சிக்காரன். கண்டிப்பானவர் அஞ்சாநெஞ்சன் .சத்திய உபாசகர். நிமிடக் கணக்கில் நேரத்தை பகிர்ந்து அதன் படி வாழ்ந்தவர். ஒரு இந்திய பெண்ணுக் கே உரிய தியாகம் ,அன்பு ,சகிப்புத்தன்மை பொறுமை, கணவன் வழியே தன் வழி என ஏற்ற குணம் என பல விடயங்கள் அண்ணலின் மனதை ஆக்கிரமித்தன.சகிப்புத் தன்மை ,அன்பு, தியாகம், சேவை இவையெல்லாம்

ஒரு சாதாரண மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை மகாத்மாவாக்க பெரிதும் உதவின .மகாத்மா தேசத் தலைவர். பாரத விடுதலைப் போரின் தளபதி .ஆசிரமங்கள் அமைத்து விடுதலைப் போராட்டத்திற்கு மக்களைப் பயிற்றுவித்தவர். அவரது ஆசிரமங்கள் இந்திய விடுதலைப் போருக்கான ஆராய்ச்சிக் களமாகவும் பயிற்சிக் களமாகவும் நிகழ்ந்தன. தேசத் தலைவர்கள் பலர் அங்கே தங்கியிருந்தனர். எண்ணற்றோர் வந்து சென்றனர்.

கஸ்தூரிபா அனைவருக்கும் அன்னையாக , இரவு பகல் பாராது இன்முகத்துடன் பணி செய்தார். நடுஇரவில் வந்தவர்களுக்கும் ,கனிவுடன் உணவு சமைத்து ,அன்புடன் வழங்கி உபசரித்தார் .தென் ஆப்பிரிக்காவிலும் ,இந்தியாவிலும் ,நடந்த பல போராட்டங்களில் பங்கேற்றார். அதுமட்டுமின்றி தலைமையும் தாங்கினார். பலமுறை சிறைப்பட்டார். மேடைகளில், மக்கள் கூட்டங்களில் வீர முழக்கம் செய்தார். அவரின் மன உறுதியும், கணவரின் கடமைகளில் தானும் பங்கேற்க வேண்டுமென்ற உள்ளுணர்வும் அவருக்கு இந்த ஆற்றலை அளித்தன. பெண்ணாகப் பிறந்தவர்களுக்கு இருக்கும் ஆசைகளான நகை, நல்ல உடை ஆகியவைகளிலிருந்து தன்னை அன்னிய படுத்திக் கொண்டார். வெள்ளை முரட்டுக் கதர் ஆடையை உடுத்திக் கொண்டார் .பலமுறை சிறைவாசம் மற்றும் உபவாசம் இருந்த கணவனின் உயிரை காக்க பிரார்த்தனை ,ஓயாத ஆசிரமப் பணி ,தேசப்பணி இடையிடையே மூத்த மகன் ஹரிலால் பற்றிய கவலை என கஸ்தூரிபாய் தன்னைக் கரைத்துக்கொண்டார்.

ஒரு சாதாரண வக்கீலாக தன் வாழ்வைத்துவங்கிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை, மகாத்மாவாக உயர்த்திக்கொள்ள உதவினார். கஸ்தூரிபாய் பற்றி அதிகம் யாரும் அறியவில்லை என்பதும் அவரைப் பற்றி அதிகம் எழுதப்படவில்லை என்பது வருத்தப்பட வேண்டிய ஒரு விஷயம் ம.காத்மா மக்கள் பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டதால் சொந்த பிள்ளைகளுக்கு தகப்பன் நிலையில் இருந்து செய்ய வேண்டிய கடமைகளை மறந்தவர் என்ற குற்றச்சாட்டும் உண்டு. இதையும் சகித்துக் கொண்டு கணவரோடு அவருடைய அடிச்சுவட்டில் நடந்தவர் .கஸ்தூரிபா காந்திஜி தனது 36வது வயதில் 1906இல் பிரம்மச்சரிய விரதம் மேற்கொள்ள முடிவு செய்தார் .கஸ்தூரிபா சிறிய மனக்கசப்பின்றி இன்முகத்தோடு காந்திஜியின் கருத்தை மிகச்சாதாரணமாக ஏற்றுக்கொண்டார்.

பெண்ணின் அழகு கொழுநன் நேரடி தொழுதல் கண்ணழகும் கழிப்பார் அழகும் அன்று
என்ற திருக்குறளின் அடியொற்றி வாழ்ந்தவர் கஸ்தூரிபா. இன்றைய பெண்களுக்கு இன்றைய சூழலில் திருக்குறள் பொருத்தமாக இல்லாவிடினும் சுதந்திர போராட்டத்தில் அன்றைய சூழலில் காந்தி மாறுவதற்கு கஸ்தூரிபா அன்பும் அரவணைப்பும் ஒத்துழைப்பும் அடிபணியும் தான் உதவி செய்தன என்பதை எள்ளளவும் மறுக்க இயலாது.
நன்றி மகாத்மா காந்தி ஆசிரமம் ஆனைமலை வெளியீடு
