மனிதர்களின் உதிரத்தில் O, B, A,AB என 4 பெரும் பிரிவுகளும் சில சிறு பிரிவுகளும் இருக்கும். இவை ஒவ்வொன்றிலும் ஆர்எச் பாசிட்டிவ் மற்றும் ஆர்.எச்.நெகடிவ் வகை இருக்கும். இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் ஏறக்குறைய 95 சதவீதம் பேர் ஆர்எச் பாசிட்டிவ் அதாவது (ரீசஸ் குரங்கு ரத்தத்தில் உள்ள போல )இருக்கும்.
கருவுறும் தாயின் உதிரம் ஆர்.எச்.நெகடிவ் ஆகவும் குழந்தை ஆர்எச் பாசிட்டிவ் ஆகவும் இருந்தால் இந்த பிரச்சனை ஏற்படும் இது முதல் பிரசவத்தில் ஏற்படாது.தாயின்உதிரத்தில் உள்ள எதிர்ப்புரதம், குழந்தையின் உதிரச் சிவப்பணுக்களை பாதிக்கிறது பாதிக்கப்பட்ட சிவப்பணுக்கள் குழந்தைகளுடைய மண்ணீரலில் அழிக்கப்பட்டு குழந்தையும் உடலில் மோசமான உதிர சோகை ஏற்படுகிறது .உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன .அதிக உதிர சோகை ஏற்பட்டால் இருதய செயலிழப்பு ஏற்படுகிறது இந்தக் குழந்தை பிறக்கும் போது உடல் முழுவதும் வீங்கி இதயம் நுரையீரல் வயிறு உள்ளிட்ட பகுதிகளில்நீர் கோர்த்து இருக்கும் இது குருதிச்சிவப்பணு சிதைவு நோய் எனப்படும்

.சாதரணமாக பிரசவத்தின்போது ஒன்றிலிருந்து மூன்று மில்லி குழந்தை யின் உதிரம் தாயின் உதிரத்தில் கலந்து விடும். இதற்கு தாயின் உடலில் எதிர்ப் புரதங்கள் உற்பத்தியாகிவிடும். இந்த எதிர்ப்புரதங்கள் கர்ப்ப காலத்திற்கு முன்பு தவறுதலாக ஆர் + இரத்தம் கொடுத்திருந்தாலும்,கருச்சிதைவு ஏற்பட்டாலும்,முந்தைய பிரசவத்தில் ஆர்.எச்.+ குழந்தை பிறந்திருந்தாலும்ஏற்படும். ஆர்எஸ் பாசிட்டிவ் குழந்தைக்கு எதிராக தாயின் உடலில் இவ்வாறு முன்னமேயே எதிர்புரதம் உருவாகி இருக்கும்.கரு உருவாகி குழந்தை ஆனபோது புரத அளவை பொறுத்து பாதிப்புக்கள் ஆறு மாதத்திற்கு முன்பு இருந்தோ அல்லது பிறகோ தொடங்கும்.ஆரம்பத்திலேயே சிவப்பணுக்களுக்கு எதிரான புரதம் மிகந்து இருப்பின் மிக அதிகமாக பாதிப்புகள முன்பு சொன்னது போல இருக்கும். பிரச்சினைகள் ஒவ்வொன்றாக வரும். மிகக்குறைவாக அளவு இருக்கும் போது குழந்தை பிறந்த பின்பு முதல் நாளிலேயே பிலிரூபின் நிறமிஅளவு அதிகமாகி காமாலை தோன்றும் அதிகமாக உற்பத்தியான மஞ்சள்கமாலை நிறமிகள் குழந்தையினுடைய மூளையின் பகுதிகளைப் பாதிக்கும் அபாயம் உண்டு .குழந்தைகளுடைய மன, உடல் வளர்ச்சி தடைப்படும்இந்த குழந்தைகளுக்கு புற ஊதாக்கதிர் விளக்கு வெளிச்ச சிகிச்சை அல்லது தொப்புள் கொடி மூலமாக ரத்த மாற்று சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.

பிறந்த குழந்தைகளில் குருதிச் சிவப்பணு சிதைவு நோய் – தமிழ் விக்கிப்பீடியா
இந்தப் பிரச்சனை ஆர்எச் பாசிட்டிவ் தாய்மார்கள் குழந்தைகளுக்கு வராது . தாயின் ஆர்.எச் வகை நெகட்டிவாக இருந்து கருவில் உள்ள குழந்தை பாசிட்டிவாக இருக்கும் தான் இந்த பிரச்சனை ஏற்படும். குழந்தையின் இரத்த சோகை அதிகமாக இருப்பின் கருவிற்கே இரத்தம் தரவேண்டியிருக்கும்.

ஆர்எச் எதிர்ப்புரதப் பிரச்சனை உடலில் இருக்கிறது என சந்தேகப்படும் போது கடைசி மூன்று மாதங்களில் குறிப்பிட்ட இடைவெளியில் ஆ ர் .எச். இம்முனோகுளோபுலின் தாய்க்கு செலுத்தினால் குழந்தையை ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கலாம் இவை ஒன்று அல்லது இரண்டு தவணைகளில் போடப்படுகின்றன
நம்ம ஊரில் சோதிடத்தில் இப்படியும் சொல்கிறார்கள்'(இதுபற்றிய எந்த ஒரு அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் இதுவரை பதிவாகவில்லை)
😒😒😒😒😢😢😢
‘நம் உடலில் உள்ள ரத்தம், செவ்வாயைக் குறிக்கும்.
திருமணப் பொருத்தத்தின் போது செவ்வாய் தோஷம் ஏன் பார்க்கப்படுகிறது தெரியுமா. அறிவியல் ரீதியாக ஒவ்வொருவரின் ரத்தமும் வேறுபட்ட வகையில் ( Blood group) இருக்கும்.
இந்த வகை ரத்தம், இந்த வகைக்கு மட்டுமே சேரும் என்பது பொது விதி.உதாரணமாக:— ஆணுக்கு A குரூப் என்றால், பெண்ணுக்கு A அல்லது AB யாக இருக்க வேண்டும்ஆணுக்கு B குருப் என்றால், பெண்ணுக்கு B அல்லது AB வகை ரத்தம் இருக்க வேண்டும்.மாறாக, ஆணுக்கு A வகை என்றால், பெண்ணுக்கு O – B யாக இருக்கக்கூடாது,
ஆணுக்கு B வகை என்றால், பெண்ணுக்கு O- A ஆக இருக்கக்கூடும் கூடாது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கபட்டுள்ளது,அதாவது இணைய வேண்டிய ரத்தங்கள் இணையும் போது பிறக்கும் குழந்தை முழு ஆரோக்கியத்தோடு பிறக்கும்; வளரும்.மாறாக இணையக்கூடாத ரத்தங்கள் இணையும்போது, குழந்தை பாக்கியம் இல்லாமல் போகவும் அல்லது பாதிப்புள்ள குழந்தை பிறக்கவும் வாய்ப்புள்ளது.எனவே, ஜோதிட நம்பிக்கை இல்லாதவர்கள் உங்களுக்கு வர இருக்கும் ரத்த வகை அறிந்து மணம் முடித்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான, மன நிறைவான வாழ்க்கையை அதன் மூலம் அமைத்துக்கொள்ளுங்கள்..😜
ஜோதிடம் அறிவோம்! 5: இதுதான்…இப்படித்தான்..! செவ்வாய் தோஷமும் சின்னச்சின்ன பரிகாரங்களும்!
இருக்கிற பொறுத்தங்களோடு இரத்த வகையையும்பார்த்தால் திருமணம் அடுத்த பிறவியில் நடந்தாலும் நடக்கலாம்
