childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

உங்கள் குழந்தை வளர்ச்சியில் கவனிக்க வேண்டிய அறிகுறிகள்

1 min read

உங்கள் குழந்தை வளர்ச்சியில் கவனிக்க வேண்டிய அறிகுறிகள்
2 மாதம்
உரத்த ஒலிகளைக் கண்டு கொள்ளாதது.
நகரும் பொருட்களைக் கவனிக்காதது.
நம்மைப் பார்த்து சிரிக்காதது.
கைகளை வாய்ப்பக்கம் கொண்டு வராதது.

4 மாதம்
நகரும் பொருட்களை கவனிக்காதது.
நம்மைப் பார்த்து சிரிக்காதது.
தலை சாயாமல் நேரே நிற்காதது.
ஆ, ஊ எனச் சப்தம் எழுப்பாதது.
வாய்ப்பக்கம் பொருட்களை கொண்டு வராதது.
பாதங்களைக் கடினமான தரைமேல் வைத்தால் காலால் தள்ளாதது.
ஒரு கண் / இரு கண்களையும் சுழற்றிப் பார்ப்பதில் பிரச்சினை.

6 month knows6 month play with parents6 months mirror looking

6 மாதம்
கைக்கெட்டும் தூரத்தில் உள்ள பொருட்களை எடுக்க முயற்சிக்காதது.
தன்னைப் பராமரிப்பவர்களின் மேல் பாசம் காட்டாதது.
தன்னைச் சுற்றி ஏற்படும் ஒலிகளைக் கண்டு கொள்ளாது.
உயிரெழுத்து ஒலிகளை (ஆ,ஈ,ஓ) உச்சரிக்காதது.
முன்னே / பின்னே உருண்டு போகாதது.
சிரிப்பது / கீச்சொலிகளை எழுப்பாதது.
வாய்க்குப் பொருட்களைக் கொண்டு செல்ல சிரமப்படுவது.
இறுக்கமான தசைகளுடன் விறைப்பாக இருப்பது.
கொளகொளவென தளர்வாக இருப்பது.
9 மாதம்
உதவியுடன் எழுந்து நிற்காதது./உதவியுடன் உட்காராதது.
மா மா, தா தா, பா பா என மழலை மொழி பேசாதது.
முன்னே பின்னே செல்லும் விளையாட்டு விளையாடாதது.
பேரைக் கூப்பிட்டாலும் கண்டு கொள்ளாதது.
அறிமுகமானவர்களைக் அடையாளம் காணாதது.
நீங்கள் சுட்டிக்காட்டும் இடத்தை நோக்காதது.
பொம்மையை ஒரு கையிலிருந்து மற்ற கைக்கு மாற்றாதது.

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading