6. அடுத்தது வளைந்த கால்கள் .

பிறந்த குழந்தைகளுக்கு கால்கள் வளைந்து இருக்கலாம். கருப்பையின் குறுகாய இடத்தில் குழந்தை இடம் பிடிக்க இது உதவுகிறது. 2- 3 வயதில் குழந்தை வளர வளரச் சரியாகிவிடும்

7. நாக்கு பிடிப்பு
சில குழந்தைகளின் நாக்கின் நுனி, அடிப்பகுதி, வாயின் கீழ்ப்பகுதி ஈறுகளுக்கு இடையே எனப் பிடித்திருக்கும், இதனால் பால் குடிக்க மற்றும் பேச்சு வருவதற்கு சிரம்ம ஏற்படும் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. சில குழந்தைகளுக்கு மிக இறுக்கமாக பால் குடிப்பதற்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் இருந்தால் பால் தரும்போதுமார்க்காம்பில் வலி ஏற்படும். குழந்தைக்கு போதமான பால் கிடைக்காமல் போகலாம் குழந்தையும் தாயும் சரியாகப் பால் கொடுப்பதற்கு உரிய நிலையினை கண்டுபிடித்து அதற்கு தங்களை மாற்றிக் கொண்டு விடுவார்கள்.பெரும்பாலான குழந்தைகளுக்கு இதனால் எந்த பிரச்சினையும் இருக்காது.சிரமம் ஏற்படுகிறது என உறுதி செய்யப்பட்டால் வெட்டிவிட சிறு அறுவைச்சிகிச்சை தேவைப்படும். பேச்சில் தடை இதனால் ஏற்படுகிறது என பேச்சுப்பயிற்சி நிபுணர் உறுதி செய்தால் மருத்துவரைப்பார்க்கவும்

8. பிறந்த ஆண் குழந்தைகளின் பிறப்புறுப்பின் முன் தோல் குறுக்கம் இருக்கலாம்.பச்சிளம் குழந்தைகளில் பெரும்பான்மையோருக்கு இப்பபடித்தான் இருக்கும் .90 சதவீத குழந்தைகளுக்கு முன்தோல் விலக 5 லிருந்து 15 வயது வரை கூட நாட்கள் ஆகும் எனவே பிறந்த குழந்தையின் தோல் மூடியிருக்கிறது என அதனை எடுத்து விட வேண்டாம். சுன்னத்து செய்ய வேண்டும் என்று கவலைப்பட வேண்டாம் குழந்தை வளர வளர பிறப்புறுப்பு வளரும். அப்போது தானே முன் தோல் பின்னாடி போகும். கவலை வேண்டாம்

9. கூம்பு வடிவத்தில் உள்ள தலைக்கு தாயின் வயிற்றில் உள்ளேயிருந்த நிலை தான் காரணமாகும் பிரசவத்தின்போது பிறப்பு வழியாக எளிதாக வருவதற்காக குழந்தை தலை கூம்பு வடிவில் இருக்கலாம் அது நாட்களாக தானே சரியாகிவிடும் இதற்கு எதுவும் செய்யத் தேவையில்லை

10. குழந்தை காதில் இருக்கும் மஞ்சள் நிற குரும்பியைை குளிக்கும்போது எடுக்க வேண்டியதில்லை அது நோய்க்கிருமிகள் உள்ளே செல்லாமல் தடுக்கும். காதிலுள்ள மேல் தோலில் உள்ள திசுக்கள் தானே வெளியே தள்ளிவிடும். எண்ணை ஊற்றுவது காது சுத்த ம் செய்வது தேவையில்லை
