childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

டிபி காசநோய்க்கான அறிவுரைகள்

1 min read

images (3)
மனித குலத்தின் வரலாற்றில் ஒரு பெரிய இடத்தை பழங்காலத்திலிருந்து பிடித்து வந்திருக்கும் நோய் காசநோய் .
காசநோய் இருமினான் பாதிக்கப்பட்ட நபரின் உடல் திசுக்களை நுண்ணுயிர்கள் தாக்குகின்றன டிபி நோய் உடலின் எந்த பகுதியையும் பார்க்கலாம் ஆனால் பொதுவாக நுரையீரல் நிணநீர் கட்டிகள் வயிற்றுப் பகுதி மூளை ஆகியவை பாதிக்கப்படுகின்றனர் இதில் மிக அதிகம் பாதிக்கப்படுவது நுரையீரல்தான்
காச நோய் பாதித்த புகழ்பெற்ற மனிதர்கள் எண்ணிக்கை எக்கச்சக்கம் நோய்க்கான முக்கிய மருந்தான ஸ்ரெப்டோமைசின் மற்றும் அதன் கூட்டு மருந்துகள் கண்டுபிடிக்கப்படும் வரை சுத்தமான காற்று, நல்ல உணவு ,அமைதியான சூழல் இயற்கையான வாழ்வு என்பது தான் இதற்குரிய மருத்துவமாக பரிந்துரைக்கப்பட்டது எனவே இந் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மலைப்பிரதேசங்களில் உள்ள மருத்துவ விடுதிகளுக்கு சென்று ஓய்வு எடுத்துக்கொண்டு இயற்கை வாழ்வு முறைகளை அதிகபட்சம் பின்பற்றி தன்னுடைய நிலையை எதிர்ப்புச்சக்தியினால் நோய்க்கிருமி குறைகிறதா ? என்பதைப் பொறுத்து உயிர் வாழ்ந்தார்கள்

காச நோயினால் பாதிக்கப்பட்ட நபர் இருமுவதால் தூங்குவதால் சிரிப்பதால் நீர்த்திவலைகள் அவர் வாயிலிருந்து வெளியேறுகின்றன இந்த நீர்த்துளிகளில் உள்ள நுண்ணுயிர்கள் காற்றில் வெளிப்படுகின்றன அவர்களுடன் வீட்டில் இருப்பவர்கள், பணிபுரிபவர்கள் நுண்ணுயிர் கலந்த காற்றை சுவாசிக்கும் போது அவை நுரையீரல்களுக்கு சென்றடைகின்றது இங்கு இவை பல்கிப் பெருகி நோய் தாக்குதல் இப்படித்தான் ஆரம்பமாகிறது நோய் பாதித்த நபரிடம் இருந்து தான் மற்றவர்களுக்கு இந்நோய் பரவுகிறது

images (4)
காச நோய்க்கான அறிகுறிகள் எவை என்பதை பார்ப்போம்
காச நோய்க்கான பொதுவான அறிகுறிகள் தொடர்ந்து இரு வாரங்களுக்கு மேல் நீடிக்கும் இருமல் இதனுடன் காரி துப்பும் போது சளியுடன் ரத்தம் கலந்து வருதல் மூச்சுவிடுவதில் சிரமம் மார்பு கூட்டில் வலி மற்றும் பொதுவான அறிகுறிகளான களைப்பு பசியின்மை எடை இழப்பு தீராத லேசான காய்ச்சல் மற்றும் இரவில் வியர்த்தல் ஆகியவைகளை சொல்லலாம்
டிபி நோய் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
உலகில் காசநோயினால் மரணமடைவர் களில் ஐந்தில் ஒரு பங்கு இந்தியர்கள்.காசநோயைக் ஒழிப்பதன் மூலம் இந்திய மக்களின் வாழ்க்கைச் சூழ்நிலையை மாற்ற முடியும் அவர்களால் குடும்பத்திற்கு தேவையான பொருளை ஈட்டமுடியும் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் மற்றவர்களுக்கும் நோய் பரவுதலை தடுக்க முடியும்
images (5)

எனவே இந்திய அரசு அனைத்து காசநோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கும் மருந்துகளை இலவசமாக முழு சிகிச்சை காலத்துக்கும் வழங்குகிறது உங்களுக்கு காச நோய் இருக்கிறது என்று உங்கள் மருத்துவர் உங்களிடம் சொன்னால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அல்லது காசநோய் பணியாளருக்கு உங்கள் முகவரி தொலைபேசி எண் ஆகியவைகளை அவர் அனுப்பி விடுவார் சம்பந்தப்பட்ட காசநோய் பணியாளர் உங்களை தொடர்பு கொண்டு நீங்கள் இருக்கும் இடத்திற்கு அல்லது உங்கள் வீட்டிற்கும் முதல் தவணை மருந்துகளை தருவார்.தொடர்ந்து மருந்துகளை எங்கு பெற்றுக் கொள்வது ?எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை மருத்துவமனை வர வேண்டும் ?மற்ற முக்கிய பரிசோதனைகள் எவை ?மருந்துகள் எது எது உங்கள் நோய் கிருமிகளுக்கு சிறந்தவை? எந்த அளவு பாதிப்பு இருக்கிறது ?ஊடுகதிர்நெஞ்சு படம் என தேவையானவற்றைப் பற்றி எடுத்துச் சொல்வார்
நீங்கள் செய்ய வேண்டியது அவர் குறிப்பிட்ட நாட்களுக்கு உங்கள் மருந்தினை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும் உங்கள் வீட்டில் முதலியவற்றை கண்ட இடத்தில் துப்பக்கூடாது நோய் தொற்று அதிகமாக முதல் இரண்டு வாரங்களில் போர்க் கவசம் அணிய வேண்டும் உங்களுடைய உணவினை போதுமான அளவு உட்கொள்ள வேண்டும் புகைப்பழக்கம் குடிப்பழக்கம் மற்றும் போதைப் பழக்கங்கள் இருப்பின் அதிலிருந்து வெளிவர காண முயற்சிகளை மருத்துவ உதவிகளை மேற்கொள்ள வேண்டும் இவ்வாறு செய்யும்போது அனைத்துவிதமான தீவிர டிபி காச நோய்களில் இருந்தும் உங்களை காப்பாற்ற இயலும் நோய்க்கான சிகிச்சை தாமதித்தாலும் சரியாக சொன்ன நாட்களுக்கு தொடர்ந்து மருந்துகளை உட்கொள்ளாமல் இருந்தாலும் குணமாவது தாமதமாகும் சில நேரங்களில் நோய்க்கிருமிகள் வீரியம் அடைந்து மருந்து பாடல் இல்லாமலும் போகலாம்
எனவே மருத்துவர் குறிப்பிட்ட நாட்களுக்கு தொடர்ந்து மருந்துகளை சாப்பிட வேண்டும் மறு பரிசோதனைக்கு வரச்சொல்லும் தினங்களில் நேரடியாக மருத்துவமனைக்குச் சென்று அறிவுரைக்கு ஏற்ப பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும் தொடர்ந்து மருந்துகளும் நல்ல உணவையும் ஓய்வு எடுத்துக்கொண்டால் காசநோய் பெறுவது கடினம் அல்ல அனைவராலும் இயலக்கூடிய ஒரு காரியமே குழந்தைகளுக்கு பெரியவர்கள் போல நுரையீரல் பாதிப்பு குறைவாக தான் இருக்கும் ஆனால் நீர்கட்டிகள் மூளை டிபி மற்றும் நுரையீரல் கட்டி ஆகியவை மிகக் குறைவாகவே பெரிய பள்ளத்தில் இருந்து பரவும் ஒரு குழந்தையிடம் இருந்து மற்ற குழந்தைக்கு காச நோய் வருவதற்கான வாய்ப்பு மிக குறைவுimages (6)

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading