குழந்தைக்கு கன்னத்தில் குழி விழுந்தால் செல்வந்தராகும் என்ற நம்பிக்கை வெகு காலமாகவே நம்மிடையே இருந்து வருகிறது.கைகளில் ஆறு விரல், மாறு கண் போலவே இது அதிர்ஷ்டம் தர உடல்ல் சார்ந்த பட்டியலில் சேர்ந்து கொண்டது.

உண்மையிலே கன்னத்தில் குழி விழுவதற்கு என்ன காரணம்? குழி விழுந்தால் செல்வந்தர் ஆகிவிடலாமா ?இதனுடைய அடிப்படை என்ன? கன்னத்தில் குழியினை எப்படியாவது ஏற்படுத்திக் கொள்ள முடியுமா? என பல விஷயங்களை இன்று பார்ப்போம்
கன்னத்தில் ஒருவருக்கு குழி ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கம் விழுந்தால் பார்ப்பதற்கு அவர்கள் அழகாகவும் மகிழ்ச்சியாகவும் தோன்றுவார்கள் கன்னக்குழிக்கு மதிப்பும் மரியாதையும் நீண்ட நெடுங்காலமாகவே இருந்து வருகிறது. இது பெண் குழந்தைகளுக்கு இருந்தால் இன்னும் அதிகமாகும் .இந்த நம்பிக்கைகள் ஆண்டாண்டுகாண்டுமாக இருந்து வருகிறது
18ஆம் நூற்றாண்டில் கன்னத்தில் குழிகளை உருவாக்குவதற்கான ஒரு கிடுக்கி போன்ற அமைப்பினை செய்து பயன்படுத்தியிருக்கிறார்கள் அதற்குப் பிறகு கன்னத்தில் குழி உருவாவதற்கு காரணங்கள் என்னவென்று தெரிந்து கொண்டு அவைகளை சரி செய்ய ஆரம்பித்தார்கள். நாட்கள் செல்ல செல்ல அறுவை சிகிச்சை முறைகளும் உடனடி கன்னத்தில் குழி ஏற்படுத்தும் பிளாஸ்டிக்க் அறுவை சிகிச்சைகளும் அதிகமாகிவிட்டன இன்றைய தேதியில் கூட கன்னத்தில் குழி விழுவதற்கு ஆசைப்பட்டு இந்தியாவிலும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு இதனால் வரக்கூடிய நோயாளிகளும் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது .

ஆண் பெண் இருபாலரிடமும் வித்தியாசம் ஏதும் இல்லாமல் கன்னத்தில் குழி வருவது ஏற்படுகிறது இவை பரம்பரை ஜீன்கள் மூலமாக வருகிறதா? என்று ஆராய்ந்து பார்த்ததில் ஒரு உண்மை புலப்பட்டுள்ளது குரோமோசோம் ஐந்து மற்றும் 16 இல் சில மாற்றங்களினால் இது ஏற்படுகிறது பெற்றோருக்கு ஒருவருக்கு இருந்தால் 25லிருந்து 50% மும் இரு பெற்றோர்களுக்கும் கன்னத்தில் குழி விழுந்தால் 50 லிருந்து 100 சதவீதமாக குழந்தைகளிடம் ஏற்படுவதை கண்டறிந்தார்கள்
சில நேரங்களில் புஷ்டியாக இருப்பவர்களின் கன்னத்தில் தசை இழப்பு ஏற்படும் போது கன்னத்தில் குழி ஏற்பட்டது. இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்த போது ஜைகோமேட்டிக்கஸ் மேஜர் என்ற முகத்தசையில் ஏற்படும் குறைபாட்டினால் அதனுடைய நீளம் சுருங்கி அது இழுத்து பிடிக்கப்பட்டு கன்னத்தின் பகுதியில் குழி ஏற்படுகிறது என்பதை கண்டறிந்தார்கள்

ஜைகோமேட்டிக்கஸ் மேஜர் தசையில் அறுவை சிகிச்சை மூலம் கன்னக்குழிகளை நிரந்தரமாக ஏற்படுத்துவது தான் இன்றைய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் செய்வது .கன்னத்தில் குழி விழுபவர்களுக்கும் வேறு உடல் பிரச்சினைகளுக்கும்,இரத்த வகைகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று நிறைய ஆராய்ச்சிகள் நடந்தன எதுவும் உறுதி செய்யப்படவில்லை
குழி கன்னத்தில் மட்டுமல்ல தாடை தொடை கை கால்கள் முதுகு எலும்பு பகுதி தண்டுவடப் பகுதி மற்றும் ஆசனவாயில் மேல்புற பகுதி என பல இடங்களில் ஏற்படலாம் இவைகள் டிம்பிள் எனப்படும் முதுகெலும்புக்கு மேலே சேக்கரல் டிம்பிள் எனப்படுவது இருந்தால் சில நேரங்களில் முதுகெலும்பு தண்டின் கடைசி எலும்புகள் பிரிந்து சேராமல் இருக்கலாம் எனவே சேக்கரல் டிம்பிள் இருக்கும் போது சேக்ரல் எலும்பு நன்றாக உள்ளதா? என்பதை அறிய வேண்டியது மிக முக்கியம்
ஆனால் கன்னக்குழிகளுக்கு வேறு எந்த பிரச்சினைகளும் இல்லை தசையின் அளவில் நீளத்தில் குறைவு ஏற்படும் போதுதான் இதுஏற்படுகிறது .உங்களுக்கு வேண்டுமென்றால் இரண்டு கன்னங்களிலும் குழி ஏற்படுத்திக் கொள்ளலாம் ஆனால் செல்வந்தர் ஆவதற்கு வாய்ப்பு எதுவும் இல்லை
