கங்காருத்தாய்த் திட்டம்( கே எம் சி) குழந்தையின் உரிமை தாயின் மகிழ்ச்சி
எடை குறைந்த குறை மாதக் குழந்தைகளின் பராமரிப்பில் முக்கிய இடம் வகிப்பது கங்காருத்தாய்த் திட்டமாகும் குழந்தையின் உடல் நலனை மேம்படுத்தவும் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உயிரைக் காப்பாற்றவும் மருத்துவமனை மற்றும் வீட்டிலும் தொடரக்கூடிய எளிதான சிகிச்சை கங்காருத் தாய்த்திட்டம்

80 சதவீத பச்சிளம் குழந்தைகள் மரணம் குறைவான எடையுள்ள,குறைமாதக்குழந்தைகளுக்கு தான் ஏற்படுகிறது குழந்தையின் தேவைகளான பாதுகாப்பு, கதகதப்பு,தாய்ப்பாலின் சத்துக்கள், நோய்த்தொற்றில் இருந்து பாதுகாப்பு,உணர்வுத் தூண்டுதல்கள் மற்றும் தாயின் அன்பு ஆகியவை கிடைக்க இது நல்ல வழி, குறை மாதத்தில் பிறந்த மற்றும் சரியாக வளர்ச்சி அடைய குழந்தைகளுக்கு உடல் வெப்பநிலை குறைதல் ,தாழ்நிலைச்சர்க்கரை மூச்சு விடச் சிரமம், அதன் பாதிப்பு, மூச்சு விடுதல் நிற்றல், குறைவான எடை அதிகரிப்பு, நோய்த்தொற்று, தாய் சேய்ப்பாசப்பிணைப்பு குறைதல் மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் அதிக நாட்கள் தங்க வேண்டியவை அனைத்தும் பச்சிளம் குழந்தை மரணவிகிதத்தை அதிகரிக்கின்றன.அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வுதரும் அமிர்தமாக சர்வரோக நிவாரணியாக கே எம் சி பலன் அளிக்கிறது.
தென் அமெரிக்காவின் கொலம்பியா நாட்டின் பகோடா நகரின் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் தங்காருத்தாய்த்திட்டம் முதலில் இன்குபேட்டர்களின் தேவையை குறைக்க முதலில் பயன்படுத்தப்பட்டது இம்முறையில் கிடைக்கும் மருத்துவப்பலன்கள் அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்டன. குறைந்த நடுத்தரவருவாய் நாடுகளில் மட்டுமல்ல அதிகவரிவாய் நாடுகளிலும் பச்சிளம் குழந்தைச்சிகிச்சைதுறையில் ஒரு முக்கிய அங்கமாக அங்கீகாரம் பெற்று விட்டது . மிகச் சிறப்பான நோய்த்தொற்றுத் தராத சுகாதாரமான இன்குபேட்டர் கே எம் சி
உடலியக்கங்களைச் சீரான சமநிலையில் வைத்திருக்கும். போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்க வழி செய்யும் .மூச்சு நிறுத்துதல் மற்றும் தாழ்சர்க்கரை அளவு ஏற்படும் வாய்ப்பு குறைகிறது . தாயே குழந்தையைப் பராமரிப்பதால் மருத்துவமனை மற்றும் மருத்துவமனை ஊழியர்களிடமிருந்த அரிய தீவிர நோய்த்தொற்று ஏற்படுவது தடுக்கப்படுகிறது.மேலும் தாயின் நல்ல நுண்ணுயிர்கள் குழந்தையின் குடலில் நிலைகொள்கின்றன.தாய்ப்பால் தருதல் எளிதாகிறது எனவே மருத்துவமனையில் இருக்கும் காலம் குறைந்து வெகு விரைவாக வீட்டிற்குச் செல்ல முடிகிறது
தாயின் உடலில் தயாரிக்கப்பட்டு தாய்ப்பாலின் வழியாகக் குழந்தையின் நோய்க்கிருமிக்கு எதிரான எதிர்ப்புரதங்கள் கிடைக்கின்றன 32 வாரக் குழந்தைக்குச் சாதாரணமாகக் கிடைக்காத இந்தஎதிர்ப்புரதச்சத்து கே எம் சி மூலமாக குழந்தையின் தாயும் இணைந்து இருக்கும் போது எளிதில் கிடைக்கிறது மிகச் சரியான வளர்ச்சியை ஊக்குவிக்கும் முறையாக இருக்கிறது.தாயின் உடல் வலியைக் குறைக்கிறது குழந்தையின் சுறுசுறுப்பை அதிகமாக்குகின்றது அமைதியாக உறங்க வைக்கிறது பலவித உணர்வுத் தூண்டுதல்களைக் குழந்தைகளுக்குத் தொடர்ந்து தருகிறது இவை எடை மற்றும் தலைசுற்றளவை அதிகரிக்கின்றன. குழந்தையின் வளர்ச்சி மற்றும் நரம்பு திசுமுன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது. காக்ரேன் கூட்டமைப்பு (Cochrane review) 21 ஆராய்ச்சிகளை ஆராய்ந்தது. குழந்தையின் வளர்ச்சி தலைச் சுற்றளவு ,மூளை வளர்ச்சி, 40 விழுக்காடு குறைந்த இறப்பு, தொற்றுக்குறைவு, உடல் வெப்பம் மற்றும் உடல் சக்கரை அளவில் இயல்பு நிலை ஆகியவை உறுதி செய்யப்பட்டன. முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டும் தரும் தாய்மார்கள் எண்ணிக்கை அதிகரிக்கிக்கிறது. குழந்தையின் எடை உயரம் மற்றும் தலை சுற்றளவு போதுமான அளவுஉயர உதவுகிறது,கேஎம்சி அளிக்கும் இந்த நன்மைகள் ஒரு வயது வரை தொடரும் .மருத்துவமனையில் உள்நோயாளிநாகச் சேர்தல் தவிர்க்கப்படுகிறது ஒவ்வொரு வருடமும் இரண்டு லட்சம் எடை குறைந்த குழந்தைகளின் மரணத்தை தடுக்கும் மிகச்சிறந்த முறை இது
தொடு உணர்வு ,வாசனை, கேட்டல் பார்த்தல் சுவைத்தல் மற்றும் சமநிலை உணர்வுகளை கே எம் சி மிகச் சிறப்பாகத் தூண்டுகிறது .20 வருடம் கழித்துக்கூட தங்காருத்தாய்த்திட்டத்தின் பலன்கள் குழந்தையின் நரம்பு வளர்ச்சி மற்றும் இயக்க செயல்பாடுகளில் தெரிவது நிரூபிக்கப்பட்டுள்ளது.நோயின்றிப் பள்ளிக்கூடம் செல்லும் நாட்கள் அதிகமாகின்றது.அதிக வருவாய் மற்றும் குறைந்த நரம்பு பிரச்சனைகள் என அதிக நன்மைகளைத் தருகிறது .தாயின் தன்னம்பிக்கையை ஊக்குவிக்கிறது தாய்க்கும் சேய்க்குமுடனான பாசப்பு அதிகமாகிறது. பொருளாதாரச் செலவு குறைகிறது போதுமான திருப்தி, விரைவில் வீட்டுக்கு செல்வது ,தந்தை வேலைக்கு திரும்புதல் சாத்தியமாகிறது. குழந்தைவளர்ச்சியின் தொடர்கண்காணிப்பு நன்கு நடக்கிறது குழந்தை மீதான வன்முறை மற்றும் கைவிடுதல் குறைகிறது குழந்தையை ஆரோக்கியமாகவும் நலமாகவும் ஆக்குகிறது கே எம் சி
எடை குறைந்த குழந்தைக்கான மிகச் சிறந்த, செலவு குறைந்த சிகிச்சை தான் கே.எம் சி
3 பிரிவுகளைக் கொண்டது
ஒன்று -கங்காருத்தாய் நிலை
இரண்டு தாய்ப்பால் மட்டும் தொடர்ந்து தருதல்
மூன்று விரைவில் வீட்டுக்கு அனுப்புதல் மற்றும் வளர்ச்சித்தொடர்கண்காணிப்பு

குழந்தைக்கு தலையில் ஒரு தொப்பி ,டயாபர் அல்லது துணிக் கோவணம் அணிவிக்க வேண்டும் தாயின் மார்பு மேலே கிடத்த வேண்டும் முன் திறக்கும் சட்டையைப் போட்டுக் கொள்ளலாம் அல்லது கட்டுவதற்கு வைத்திருக்கும் துணி ஒன்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம் தாயின் மார்பகங்களுக்கு இடையே குழந்தை கிடத்தப்பட வேண்டும் குழந்தையின் பிட்டம் தாங்கப்பட வேண்டும் ஒரு பக்கம் தலை திரும்பி இருக்க வேண்டும் அப்போது தலை சிறிது பின் தள்ளி இருக்கும் அதனால் மூச்சு விடுவது எளிதாக இருக்கும் தவளை போல் விரிந்த நிலையில் குழந்தையின் கால்களும் கைகளும் இருக்க வேண்டும்.தாயின் மார் மேலே இருக்கக்கூடாது தன் தலையை கீழே குனிந்து குழந்தையை முத்தமிடும் அளவு உயரத்தில் கிடத்தினால் போதும். தாய் தூங்கும் போது அல்லது பால் தரும் போதும் 45 டிகிரி கோணத்தில் (தலையணை) சாய்ந்திருக்க வேண்டும். பிரச்சனை இல்லாத குழந்தை,ஆக்சிஜன் மற்றும் குளுக்கோஸ் பெரும் குழந்தைகளுக்கும் கே எம் சிஐத் தொடரலாம் சீபாப் அல்லதுசெயற்கைச் சுவாசம் பெறும் குழந்தைகளுக்கும் கேஎம்சி தரலாம் இணைந்த தாய் சேய், தீவிரச்சிகிச்சைப்பிரிவில மணி நேரமும் கே எம்சி 24 தரலாம்
ஒவ்வொறு முறையும் குறைந்தது 1 மணி நேரம்எனத்தொடங்கித் தினமும் 4-12 மணி நேரம்வரை தரலாம் தானே வெளியே திமிறி வரும்வரையும் அல்லதுநிறைமாதம் அல்லது 2.5 கிலோவாக எடைகூடும்வரை தரலாம்.

கே எம் சி தருவதற்குத் தாய் சிறந்த நபர் ஆனால் தாய்க்கு வேலை இருந்தால் குடும்பத்தின் மற்றொரு உறுப்பினர்கள் கே எம்சி ஐ த் தரலாம் .தந்தை. தாத்தா. மாமா. அத்தை மற்றும் பாட்டி என எந்த உறவுகளும் வீட்டில் தொடரலாம்

அடுத்து தாய்ப்பால் மட்டும் தருதல் . குழந்தை பிறந்த பிறகு விரைவில் தாய்ப்பாலைக் கறந்து எடுப்பது மிகவும் முக்கியம் இதனால் மார்பிலுள்ள சுரந்த பால் வெளியேறுகிறது. பால் உற்பத்தி பெருகி முதல் ஆறு மாதங்களுக்கு முழுமையாக தாய்ப்பால் ஊட்டுவதற்கு கேஎம்சிஉதவும் குறைந்த பட்சம் எட்டு முறையாவது தாயிடமிருந்து பால் கறக்கவும் முப்பத்தி நான்கு வாரத்திற்கு பிறகு நேரடியாக மார்பிலிருந்து பால் சப்ப விடலாம். அதில் முழுமையாக வெற்றியடையும்வரை அடிக்கடி கறந்து எடுப்பது மிக நல்லது
மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த பின் தொடர்மருத்துவக் கண்காணிப்பும் மிகமுக்கியம்.அபாயஅறிகுறிகள் பற்றிய பயிற்சியும் தேவைப்படும் போது அவசரச் சிகிச்சை கிடைப்பதையும் உறுதி செய்யவும்
—————————————————————————
