கரோனா பற்றி குழந்தைகளிடம் என்ன பேசுவது?
பெரியவர்களாகிய நமக்கே கரோனா வைரஸ் பற்றிய செய்திகள் அச்சத்தையும் பயத்தையும், பீதியையும் கிளப்புகின்றன .ஏதேதோ சிந்தனைகள் உள்மனதில்.!!மிகப்பெரிய பயம் வாழ்க்கை பற்றியது. எதிர்காலத்தைப் பற்றிய நம்சிந்தனைகள் தடம்புரண்டு இருக்கின்றன. நம் தொழில், வேலை, மற்றும் நம்முடைய வருங்கால திட்டங்கள் தலைகீழாக மாறி இருக்கின்றன .இந்த சூழ்நிலையில் குழந்தைகளுக்கு கரோனா பற்றி என்ன சொல்லித் தருவது ?எவ்வாறு அவர்களுடைய பயத்தை போக்குவது?எப்படி தன்னம்பிக்கையை ஊட்டுவது? என்பது பற்றிய கட்டுரை
மற்றவர்களிடமிருந்து கேள்விப்படும் செய்திகள், தொலைக்காட்சி மற்றும் இணையதளத்தில் பார்க்கும் படிக்கும் நிகழ்வுகள் இவைகளையெல்லாம் புரிந்து கொள்வதற்கு அவர்களுக்கு சிரமமாக இருக்கலாம் .கவலை, மன அழுத்தம் ,துயரம் அவர்கள் உள்மனதில் இருக்கலாம் வெளிப்படையான ஆதரவு தரும் கலந்துரையாடல் நம் குழந்தைகளுக்கு நோயினை பற்றி புரிந்துகொள்ளஉதவும். புரிந்தபின் அதற்கு ஏற்ப நடக்கவும் மற்றவர்களுக்கு நேர்மறையான செயல்களை செய்வதற்கும் ஊக்குவிக்கும்
- குழந்தையின் வயதுக்கு ஏற்ப கேள்விகளைக் கேளுங்கள். பதில்களை காது கொடுத்து கேளுங்கள்.
அவர்களுக்கு எவ்வளவு இதுவரை தெரிந்திருக்கிறது? என்பதனை அவர்களைப் பேசவிட்டு புரிந்துகொள்ளுங்கள் . மிகச்சிறிய குழந்தைகளாக இருப்பின் இதை பற்றி அவர்களுக்கு தெரியாமல் இருந்தால் அதிகமாக இந்த விஷயத்தை சொல்லித்தர வேண்டாம். நல்ல சுகாதார பழக்க வழக்கங்கள் பற்றி எடுத்துச் சொல்லவும் கரோனா பற்றிய செய்திகளைச் சொல்லி அவர்களுடைய பயத்தை அதிகரிக்க வேண்டாம் நீங்கள் இருக்கும் சுற்றுப்புறத்தினைப் பாதுகாப்பானதாக மாற்றிக் கொள்ளவும் .குழந்தை கவலையின்றி பேச அனுமதிக்கவும். படம் வரைதல் ,கதை சொல்லுதல் ,பாடல்கள் ஆகியவை உரையாடலை ஆரம்பிக்க உதவி செய்யலாம். அவர்களுக்கும் கவலை தரும் விஷயங்களை கண்டுகொள்ளாமல் விட வேண்டாம். தவிர்க்கவும் வேண்டாம். அவர்களுடைய கவலையை ஒத்துக் கொள்ளுங்கள் இந்த மாதிரி சூழ்நிலையில் பயப்படுவது என்பது இயல்பானதுதான் என்பதைச் சொல்லுங்கள் .உங்களுடைய முழு கவனத்தைச் செலுத்தி காது கொடுத்து கேளுங்கள்! எப்போது வேண்டுமானாலும் எதைப்பற்றி வேண்டுமானாலும் அவர்கள் உங்களிடம் பேசலாம்? என்பதனைப் புரிய வையுங்கள்
- உண்மையைச் சொல்லுங்கள்! விளக்குங்கள்!
உலக விஷயங்களைப் பற்றிய உண்மையை தெரிந்து கொள்ள குழந்தைகளுக்கும் உரிமை உண்டு குழந்தைகள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்படாமல் பார்ப்பது பெரியவர்களாகிய நமது கடமையாகும் வயதுக்கு ஏற்ப பொருத்தமான வார்த்தைகளை உபயோகப்படுத்தி கரோனா வைரஸ் பற்றிய உண்மைகளை சொல்லுங்கள். அவர்களுடைய எதிர்வினையை கவனியுங்கள். எவ்வளவு அளவு கவலைப்படுகிறார்கள் எனப்பார்த்து அதனைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களால் பதில் சொல்ல முடியவில்லை என்றால் கதை விட வேண்டாம் குழந்தையோடு அமர்ந்து இணையத்தில் சரியான பதிலை தேடுங்கள் உலக சுகாதார நிறுவனம் யூனிசெஃப் ஆகியவைகளில் கரோனா பற்றிய சரியான செய்திகள் உள்ளன இணையதளத்தில் உள்ள பல செய்திகள் உண்மைகளாக இல்லை எனவே நம்பத்தகுந்த இணையதளத்தை பார்ப்பதுதான் சரி என்பதை விளக்குங்கள்
- அவர்களையும் அவர்கள் நண்பர்களையும் எப்படி பாதுகாத்துக் கொள்வது ?என்பதனை காண்பியுங்கள
குழந்தைகளை கரோனா பாதிக்காமல் தடுப்பதற்கு அடிக்கடி கை கழுவுதல், முக்கியம். விளையாட்டு போல பாடல்கள் பாடியும் நடனமாடியும் கை கழுவுதல் சொல்லித் தரலாம் இருமல் தும்மல் வரும் போது முழங்கைமேல் முகம் வைத்து எவ்வாறு மற்றவர்கள் மேல் நீர்த்திவலைகள் படாமல் பார்ப்பது என்பதை சொல்லித் தரவும் சளி காய்ச்சல் உள்ளவர்கள் அருகில் செல்ல வேண்டாம் அவர்களுக்கு சளி காய்ச்சல் இருமல் மூச்சு திணறல் இருப்பின் உடனே சொல்லச் சொல்லவும்
- நம்பிக்கை ஊட்டுங்கள்
செய்தி ஊடகங்களில் மனதை பாதிக்கக்கூடிய செய்திப்படங்களை தொடர்ந்து பார்ப்பது நம்மைச் சுற்றி, உலகமே நெருக்கடியில் உள்ளது என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும் .குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை குறைக்க அவர்களோடு சேர்ந்து விளையாடுங்கள் கதைகளைச் சொல்லுங்கள் தினசரி வேலைகளை ஒரு குறிப்பிட்ட வழக்கமான முறையில் தொடர்ந்து செய்யுங்கள் அல்லது சூழலுக்கு ஏற்ப புதிய அட்டவணையைத் தயாரித்துக் கொள்ளுங்கள். உங்கள் பகுதியில் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால் அவர்களுக்கு நோய் வருவதற்கான வாய்ப்பு மிகக்குறைவு என்பதனையும் வெளியே செல்லாமல் வீட்டுக்குள் இருந்தால் நோய் பரவுவதை தடுக்கலாம் என்பதனையும் நினைவூட்டுங்கள். நோய் பாதித்த அனைவரும் மிக மோசமாக பாதிக்கப்படுவதில்லை நிறைய மருத்துவ பணியாளர்கள் மருத்துவர்கள் உங்கள் குடும்பத்தை பாதுகாப்பாக வைத்திருக்க வேலை செய்து வருகிறார்கள் என்பதனைச் சொல்லுங்கள் உங்கள் குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இருப்பின் வீட்டிலேயே இருக்கலாம் அல்லது மருத்துவமனைக்கு போக வேண்டும் என்பதனை உடல் நிலைக்கு ஏற்ப முடிவு செய்து சொல்லுங்கள் இது அவர்களுக்கு பயமூட்டுலதாக இருந்தாலும் தொடர்ந்து கடைபிடிக்கும் போது மற்றவர்களுக்கும் பரவாது அனைவரையும் பாதுகாத்து வைத்திருக்கும் என்பதனை எடுத்து சொல்லுங்கள்.
5 . கரோனா பற்றிய வசைகளை அனுபவிக்கிறார்களா? இழுக்குகளைப் பரப்புகிறார்களா?
கரோனா நோய்த்தொற்று ஏற்பட்ட பின்பு சாதி மதம் இனம் தொடர்ந்த தவறான செய்திகள் உலகம் முழுவதும் பரப்பப்பட்டு வருகின்றன எனவே இந்த செய்திகளை பரப்புகிறார்களா? அல்லது இந்த வசைகளை அனுபவிக்கிறார்களா? என்பதைப் பாருங்கள். ஒரு குறிப்பிட்ட இடத்தை சேர்ந்தவர்களாகவும் குறிப்பிட்ட மொழி இடத்தைச் சேர்ந்தவர்களால் பரவாது என்பதனைச் சொல்லுங்கள் இது சம்பந்தமான வசைகள் அவர்கள் மேல் வீசப்பட்டால் குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் சொல்லுமளவிற்கு நம்பிக்கை தாருங்கள். ஒருவரை ஒருவர் விரட்டுவது,அடாவடியாக வசைபாடுவது மோசம் .தவறானது. அன்பு பாசம் ஆகிவற்றை மற்றவர்கள் மேல் செலுத்தி ஆதரவு தரவேண்டும் என்பதை புரிய வையுங்கள்
- மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனிதர் கதைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்
தன்னார்வலர்களின் இரக்க செயல்களையும் பெருந்தன்மையான உதவிகளையும் குழந்தைகள் தெரிந்து கொள்வது மிக முக்கியம்.. மருத்துவ பணியாளர்கள் ,விஞ்ஞானிகள்மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட தன்னார்வலர்கள் நோய்களை தடுப்பதற்கும் உங்கள் சமூகத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும் எவ்வாறு இடைவிடாது உழைக்கிறார்கள் என்ற கதைகளை பகிர்ந்து கொள்ளுங்கள் அன்பு இரக்கம் உள்ளவர்கள் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்கிறார்கள் என்ற செய்தி குழந்தைகளுக்கு ஆறுதலாக இருக்கும்
- உங்கள் மன நிலையை சீராக வைத்திருங்கள்
உங்கள் குழந்தைக்கு உதவி செய்வதற்கு முன் நீங்கள் உங்கள் மன நிலையை சீராக வைத்திருத்தல் அவசியம்.ஒரு செய்திக்கு நீங்கள் எவ்வாறு எதிர்வினை ஆற்றுகிறீர்கள் என்பதை சுலபமாக குழந்தைகள் கண்டுபிடித்து விடுவார்கள் எனவே நீங்கள் அமைதியாகவும் கட்டுப்பாட்டுடன் இருப்பது மிக முக்கியம் உங்களுக்கு கவலை.பயம் இருப்பின் உங்களுக்காக நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள் மற்ற நண்பர்களிடம் பேசுங்கள் நீங்கள் நம்பக்கூடிய உறவினர்களிடம் உரையாடுங்கள் உங்கள் மனசு லேசாகும் படி என்ன வேலைகள் செய்வீர்களோ? அதனை செய்து மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்புங்கள்
- பேச்சை பரிவோடு முடியுங்கள்
நமது குழந்தைகளைப் பாதுகாப்பற்ற அமைதியற்ற சூழலில் விடப்போவதில்லை என்பதனைப் புரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் உரையாடல் முடியும்போது குழந்தைகளுடைய பதற்றம் எவ்வளவு உள்ளது?. என்பதனை அவருடைய உடல் மொழியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். வழக்கம்போல பேசுகிறார்களா? எவ்வாறு மூச்சு விடுகிறார்கள் ?என்பதைக் கவனியுங்கள் மீண்டும் எப்போது வேண்டும் என்றாலும் இது பற்றி பேசலாம் என்பதனைத் திருப்பி சொல்லுங்கள் அவர்களைப் பற்றி நீங்கள் கவலைப் படுகிறீர்கள்! அவர்களுக்கு உதவி செய்வீர்கள்! அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்பீர்கள் !எப்போதெல்லாம் அவர்களுக்கு நீங்கள் தேவையோ அப்போதெல்லாம் கவலையைப் போக்க உதவுவீர்கள்!என்பதனை நினைவு கூறுங்கள்
நன்றி; Information compiled by Jacob Hunt, UNICEF communications specialist
