childhealthtoday

childhealthwiki

காக்காய் வலிப்பு அப்படின்னா என்ன?

1 min read
fits

jnnp-2005-June-76-suppl 2-ii2-F1.largeமூளையின் மின்அதிர்வுகள் அதிகரிப்பால் வருவதுதான்வலிப்பு. ,நிறைய நேரங்களில் 2-3 நிமிடங்களில் தானே நின்று விடும்

காக்காய் வலிப்பு ?பற்றி நம்மிடம் நிலவி வரும் நம்பிக்கைகள் என்ன?அவைகளில் எவை சரி?எதுதவறு? காக்காய்வலிப்பு வந்தால் என்ன செய்யணும்? என்ன செய்யக்கூடாது என்பதினைப் பற்றி இப்போ பார்ப்போம்.

ஏன் காக்காய் வலிப்பு அப்படினு சொல்லராங்க?
யோசனை செஞ்சு பார்க்கும் போதுதான் நமக்கு ஒன்று புரியும்.!காக்காய்க்கும் வலிப்பிற்கும் எந்த தொடர்புமில்லை! கால்கைவலிப்பு என்பது நாள்பட மருவி காக்காய்வலிப்பு ஆனது என்ற உண்மை! இதுதெரியாம காக்காயைச்சுட்டு சாப்பிட்டா சரியாப்போயிரும் அப்படிங்கிற நம்பிக்கை கூட இருக்குதுனா பார்த்துக்கங்களேன்.

சூடு வைப்பது ஏன்?
வலிப்பினை நிறுத்திறேன்!!!! சொல்லிட்டு சூடு வைப்பாங்க பாருங்க!அது கொடுமை!தலைல,நெற்றியில,வயித்திலேன்னு! சூட்டுக் காயத்தைப்பார்த்தா ஈரக்கொல கூட நடுங்கும்.சாதாரணமா நாம பார்க்கிற வலிப்புபெரும்பான்மையான நேரங்களில் 2-3 நிமிசத்திலே தானேநின்று விடும்,
சூடு வைப்பது தவறு தயவு செய்து ஒன்றும் செய்யாம இருந்தா போதும்.தானே நின்றுவிடும்.

,
வலிப்பு நிற்க இரும்பு அல்லது வேறு எந்த உலோகம் தரமா?

fits belief

வலிப்பு இரும்பு அல்லது வேறு எந்த உலோகத்திற்கும் இம்மி அளவும் தொடர்பில்லை. சிலர் ஓடிப்போய் சாவி,இரும்புத்துண்டு, பித்தளை, உலோகம்?னு எடுத்து வந்து கையில் திணிப்பாங்க,அவைகளினால் காயம் ஏற்படுவதைத் தவிர வேறு எதுவும் நடக்காது.வலிப்பில் கால்கை வலிப்பு ஒரு வகை மட்டுமே. .நாம பாரக்கிற வலிப்பினைத்தவிர, பல வகையிலே வரும் ஒரு பக்கம் மட்டும் இழுக்குறது,திடீரென்று திருதிருன்னு முழிக்கிறது,என்ன செய்கிறாங்கங்கன்னு தெரியாம அப்படியே எழுந்து ஓடுவது? என பலவகை உண்டு

பழங்காலத்தில் எப்படி மருத்துவம் பார்த்தாங்க?

கிரேக்கநாட்டில்,.வலிப்பு வந்தவங்க மேல சாமி அருள் வந்திருச்சு!ன்னு நினைச்சு அவங்களைக் கடவுளுக்கு சமமாக்கூட மதிச்சாங்க.!!!அவங்க சொல்வதைக் அருள் வாக்கா கேட்டாங்க.!!!நம்ம ஊரில் பேய் பிடிச்சிருச்சுன்னு நினைச்சு பேய்ஓட்ட கூட்டிட்டு போய்டுவாங்க!.மந்திரிக்கிறது,தாயத்து,காப்பு கட்டுவது,கைல கால்ல பித்தளை இரும்பு வளையம் போடறதுன்னு செய்வாங்க.

முதல் உதவிஎன்ன செய்வது?
முதல் உதவி செய்யும் நாம் பதட்டப்படாமல் இருக்க வேண்டும்.கட்டில் மெத்தை மேல் படுத்திருந்தால் கீழே இறக்கி படுக்க வைக்கவும். ஒருக்களித்துப் பக்க வாட்டில் படுக்க வைக்க வேண்டும்,இது வாயிலிருந்து எச்சில்,நுரை வெளியேற உதவிகரமாக இருக்கும் மூக்கு கண்ணாடி போட்டிருந்தால் கழட்டி விட வேண்டும்,ஆடைகளைத்தளர்த்தி விடவும்.,முட்டி மோதி அடிபடாம ல்தடுக்க சுற்றியுள்ள பொருட்களை அப்புறப்படுத்தி வைக்கவும்.சின்ன தலையணை,துணி மடிப்பினை தலையின் அடியில வைக்கலாம்

சுய நினைவு வர்றத்து முன்னமே முகத்தில் தண்ணீர் தெளிப்பது,குடிப்பதற்கு தண்ணீர் தருவது,வலிப்பு வரும்போது வாயினுள் துணி,மரக்கட்டை ,விரல்வைப்பது,கை கால்களை வலிப்பினால்?இழுக்காமல் தடுக்க அழுத்திப் பிடித்துக்கொள்வது,இது எல்லாம் தவறு,இவைகளைச்செய்யும் போது புரையேறலாம்.நாக்கு,விரல் காயமாகலாம்
, அடிபட்டிருந்தாலோ,5 நிமிடத்திற்கு மேல் வலிப்பு நீடித்தாலோ,அல்லது நிற்காமல் திரும்பத்திரும்ப வந்தாலோ,வலிப்பு நின்றதிற்குப் பிறகும் மூச்சுவிட சிரமப்பட்டாலோ மருத்துவரையோ அல்லது 108 ஆம்புலன்ஸையோ மருத்துவ உதவிக்கு அழைக்கவும்,
மீண்டும் ஒருமுறை என்ன செய்ய வேண்டும்? எது கூடாது என்பதினைப்பற்றிப் பார்ப்போம்

FITS FIRST AID

வலிப்பு வந்தவரைச்சுற்றி கூட்டமாக நிற்கக் கூடாது, காற்றோட்டமானசூழ்நிலை அப்போது தேவைப்படும், பற்களுக்கிடையில் கரண்டி,கட்டை,,துணி,விரல் வைக்கக்கூடாது,கம்பி,சாவி போன்ற உலோகங்களைத்தரக்கூடாது ,ஏனெனில் வெட்டி இழுக்கும்போது கைகள்,கண்,உடல் உறுப்புகளுக்கு காயம் ஏற்பட வாய்ப்பு உண்டு,இரும்பு போன்ற உலோகங்கள் எந்தப்பயனையும் தராது,வெட்டி இழுக்கும்போது அழுத்திப்பிடிக்கக்கூடாது,சுயநினைவு திரும்பும்வரை சாப்பிட,,குடிக்க எதுவும் தரக்கூடாது,
fits bracelet

,வலிப்புஉள்ளவர்களின் சட்டைப்பையில் இவருக்கு ஜன்னி வரும் என்ற அட்டையினை வைத்துவிட்டால் முதலுதவி செய்ய உதவியாக இருக்கும்

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.