வெந்த முட்டை நல்லதா வேகாத முட்டை நல்லதா? என்ற இந்தக் கேள்விக்கு பதில் தேட ரோட்டுக்கடைப்பாட்டியிடம் போக வேண்டியதில்லை!!
நன்கு வெந்த முட்டை கூடவே ஒரு தட்டு பிரியாணி என்பது சிலரின் தாபா க் கனவு. வேறு சிலருக்கு ஆப்பாயில் என்று சொன்ன உடனே வாயில் எச்சில் ஊறும் .வெந்தும் வேகாமலும் ஒழுகிக்கொண்டிருக்கும் முட்டையின் ருசி மேல் அப்படி ஒரு காதல். மாணவ விடுதிகளில் முட்டையை அரைவேக்காடாக தோசை மேல் வார்த்து வாயில் போட்டு ருசிப்பது சிலருக்கு மிக பிடித்தமான விஷயம்!!!
ஆதரவு இருக்கும் அதே நேரம் எதிர்ப்பு அலை யும் எக்கச்சக் கம்!!

முதலில் ஏன் வேகாத முட்டைக்கு இவ்வளவு எதிர்ப்பு? என்பதனைப் பார்க்கலாம்?
கோழியின் உடலில் இருக்கும் கிருமிகள் அது இடும் முட்டைக்குள் செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம். அதிலும் சா ல்ம ணல் லா ,பறவைக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்க்கிருமிகள் பாதிப்பு கோழிகளு க்கு அதிகம். அதற்காகத்தான் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கோழித் தீவனத்தில் உள்ளே சா ல்ம ணல் லாவை ஒழிக்கக் கூடிய ஆண்டி பயா டி க் மருந்துகளை சேர்த்து தருகிறார்கள் ( அதி க மாக ஆண்டி பயா டி க் மருந்துகள் கோழி ப் பண்ணை களி ல் உபயோகமாகவதின் இரக சியம் இது தான்) இந்த மருந்தினை உட்கொண்ட கோழியி ட்ட மு ட்டை அதிகமாக உண்ணும் போது நாளாவட்டத்தில் நமது உடலின் கிருமி எதிர்ப்பு சக்தி குறைத்து விடும் என்பது வேறு விஷயம்

2.முட்டையினைை ப் பச்சையாகவே உடைத்து ,உள்ளே இரு க் கு ம் வெள்ளை கரு மஞ்சள் கரு இரண்டும் சாப்பிட்டால் என்னவாகும்?
மஞ்சள் கருவில் உள்ள பயோடினை B7 எடுத்துக்கொள்வதினைத் தவிர்க்கும் தடுப்பானான அவிடின் பச்சை முட்டையில் (அதாங்க வேகவைக்காத முட்டை) உள்ளது . வேகாத முட்டையின்் வில்லன் அவிடின் காரணமாக (திசுக்களின் வளர்ச்சி,கொழுப்பு அமிலங்கள் அமினோ அமிலங்களி ன் வளர் சி தை மாற்றம், சர்க்கரை அளவு கண்காணிப்பு உதவும்) பயோட்டின் கிடைப்பது தடுக்கப்படுகிறது. மு ட் டை வெள்ளையில் தான் அவிடின் பொருள் உள்ளது.நன்கு வேகவைத்த முட்டையிலும் முப்பதிலிருந்து நாற்பது சதவீதம் மீதி இருக்கிறது. ஒரு பிரச்சினைையும் இல்லாா ம ல்கட்டாயம் முட்டையைச் சாப்பிட தான் ஆகவேண்டும் என்றால் மஞ்சளை மட்டும் சாப்பிடுங்கள்.
3.வேக வைத்த முட்டையில் சத்துக்கள் குறைகிறதா?
அவ்வளவாக குறைவதில்லை. வேக வைத்த முட்டையில் சத்துக்கள் சிறிதளவு தான் குறைகிறது எனவே நன்கு வேக வைத்த முட்டையை சாப்பிடலாம் முட்டையை பொரி த்து அல்லது முட்டை தோசை என போட்டும் சாப்பிடலாம்
4.1.இப்போது நமது கேள்விக்கு வருவோம் ஆப்பாயில் சாப்பிட என்ன செய்யலாம்?

ஆப்பாயில் முட்டையில் கிருமித்தொற்று -சால்மோனெல்லா என எது வேண்டுமானாலும் இருக்கலாம் .அக்கிருமி நோய்த்தொற்றை உருவாக்க கூடிய வாய்ப்பு அதிகம் பறவைக் காய்ச்சல் வந்த போது கூட்டம் கூட்டமாக கோழிப் பண்ணைகளில் கோழிகளை கொன்றார்கள் .அது நமக்கு நன்கு ஞாபகம் இருக்கும். பச்சை முட்டையும்பாதி வேகவைத்த முட்டையும் நமது வீட்டு மக் களை மொட்டை போட வைத்து விடுமா? என்றால் அது இல்லை!!! ஆனால் அவை நமக்கு நோயினை தரக்கூடிய வாய்ப்பு அதிகம்
4.2என் உயிர் பச்சை முட்டையில் தான் . அதுதான் வேண்டும் என அடம் பிடித்தால்?
வெளிநாடுகளில் இந்த முட்டையை நோய்க்கிருமி இல்லாமல் செய்வதற்கான வழிமுறைகள் இருக்கிறது கிருமி நீக்கப்பட்ட முட்டைகளும் கிடைக்கின்றன.இங்கிலாந்தில் சில முட்டைகள் பிரிட்டிஷ் லயன் முத்திரையிடப்பட்டு உள்ளன அதை அப்படியே சாப்பிடலாம் கோழி முட்டைகளுக்கு மட்டும்தான் இது பொருந்தும் வாத்து முட்டை, கா டை முட்டை,வெளிநாடுகளிலிருந்து வரும் முட்டை, அவைக ளு க்கு இது பொருந்தாது
5.முட்டையில் அப்படி என்ன சத்துக்கள் உள்ளன?
சுலபமாக விலைமலிவாக கிடைக்கக்கூடிய நல்ல புரதம் (அதனால் தான் சத் துணவி ல் இடம் )முட்டையில் வைட்டமின் டி சத்து வைட்டமின் ஏ சத்து உள்ளது. வைட்டமின்B2,B12 ,போலேட்,ஐயோடின் கொலஸ்டிரால் ஆகியவை உள்ளன.
முட்டை வறுத்து சாப்பிடும் போது சேர்க்கப்படும் எண்ணெய் காரணமாக கொழுப்பு அளவு 50 சதவீதம் வரை அதிகமாக கூடிய வாய்ப்பு உண்டு நாம் உண்ணும் உணவிலுள்ள பூரிதக் கொழுப்பு அளவினைப் பொறுத்து தான் கொலஸ்ட்ரால் அளவு உடலில் இருக்கும் எனவேஒரு முட்டையின் கொலஸ்ட்ராலை பற்றி கவலைப்பட வேண்டாம்

6.யார் பச்சை முட்டையினைத்் தவிர்க்க வேண்டும்?
குழந்தைகள் ,வளர் இளம் பருவத்தினர் ,கர்ப்பிணிப் பெண்கள் ,வயதானவர்கள் பச்சை யைத் தவிர்க்கவும்,நன்கு வேகவைத்த முட்டையின் வெள்ளைக்கரு, மஞ்சள்கரு எடுத்துக்கொள்ளலாம். உடல் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் அல்லது மருத்துவ காரணங்களுக்காக குறிப்பிட்ட உணவு வகைகளை உட்கொள்பவர்கள் பச்சை முட்டை பாதி வேகவைத்த முட்டைகளை தவிர்க்க வேண்டும்.
7.பச்சை முட்டை சில சேர்க்கப்பட்ட உணவு பொருட்கள் மௌஸி, சிம்பல்ஸ், சாலட் ட்ரெஸ்ஸிங், ஐஸ்கிரீம், ஐசிங் ஆகியவை அவைகளில் சில.

நெருக்கமான காற்றோட்டம் இல்லாத சூழ்நிலையில் வளர்க்கப்படும் கோழிகளின் முட்டை மற்றும் முட்டை ஓட்டில் பாக்டீரியா நுண்ணுயிர் இருக்கலாம் மற்ற உணவுப் பொருள்களோடு அது கலந்தும் போகலாம்.எனவே உணவு தயாரிப்பவர்கள் பாத்திரங்கள் மற்றும் தயாரிக்கும் இடங்களில் கிருமிகள் ஒட்டிக் கொள்ளலாம் முட்டையை உடைத்து சிதறாமல் பார்த்துக் கொள்ளவும் .கைகளை வெந்நீர் மற்றும் சோப்பு போட்டுக் கழுவ வேண்டும் .முட்டையைச் சேர்த்து உணவுப் பொருட்களை தயாரிக்கும் போது மேற்பரப்பு களை சுத்தம் செய்யவேண்டும் .பாத்திரங்கள் மற்றும் பொருட்களை சோப்பு மற்றும் தண்ணீர் மூலம் கழுவ வேண்டும் உடைந்த முட்டைகள் நாட்பட்ட முட்டைகளை உபயோகப்படுத்த வேண்டாம் கோழி முட்டை போட்டு 28 நாட்களுக்குள் ஆகி விட்டால் அந்த முட்டைகள் தவிர்க்கப்பட வேண்டும்



