மாலை சுற்றிப் பிறந்தால் மாமனுக்கு ஆகாது !என்பது கிராமப்புறங்களில் நிலவிவரும் ஒரு பேச்சு!
மாலை சுற்றி பிறப்பது என்று சொன்னால் குழந்தை பிறக்கும் போது குழந்தையின் கழுத்தை சுற்றி தொப்புள்கொடி இருபபது.அப்படி இருந்தா தாய்மாமனுக்கு ஆகாது!! எனபது நம்பிக்கை.
அதனால் என்ன செய்வாங்க தெரியுமா? அப்படி பிறந்த குழந்தையை தாயமாமன்காரன், தண்ணீரில் குழந்தையின் முகத்தை பார்த்துவிட்டு அதுக்கப்புறம்தான் நேரடியாகபபாரப்பார.
சாதாரணமாக கழுத்தை ஒன்று அல்லது இரண்டு முறை தொப்புள் கொடி சுற்றிஇருப்பதை பார்த்திருக்கிறோம் தொப்புள்கொடி முடிச்சுகளோடு சமயங்களில் இருக்கும். குழந்தை வயிற்றுக்குள் அங்குமிங்கும் நகர்ந்து கொண்டிருக்கும் போது சில நேரங்களில் நீளமாக உள்ள தொப்புள் கொடி கழுத்தைச் சுற்றி இப்படி ஆகிறது .
பிரசவம் ஆகும் போது குழந்தையின் தலை வெளியே வரும் .அப்போது கழுத்தைச் சுற்றி உள்ள தொப்புள்கொடி கழுத்தை இறுக்குவதற்கு வாய்ப்பிருக்கிறது.
2-3 சுற்றுகள் இருந்தால்அதை விடுவிப்பதற்கு நேரம் ஆகலாம்.
அப்போது ,குழந்தையின் மூச்சுக் குழாய் இறுக்கப்பட்டு தடைப்படும். பிறந்தவுடன் முதல் மூச்சு எடுப்பதற்கு வழி இருக்காது மூளைக்கு வேண்டிய ஆக்ஸிஜன் செல்லாது.
பண்டைக்கால கிராமங்களில் தாய் மாமன்தான் முறை மாப்பிள்ளை . இன்னும் கூட சில சமுதாயங்களில் இந்த நிலைமை நிகழ்கிறது சொந்தம் விட்டுப் போகக் கூடாது சொத்து பிரியக் கூடாது என பல நேரங்களில் தாய் மாமன் ,திருமணம் செய்து கொள்கிறார். ஆண் குழந்தையாக இருப்பின் மாமன் முறை மாமன் சீர் என்று இறப்பு வரை இந்தப் பந்தம் தொடரும்
கழுத்தை சுற்றி தொப்புள்கொடி இறுக்கி மூச்சுவிட சிரமத்தோடு தொடர்ந்து தப்பிப் பிழைத்த குழந்தைகள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பதற்கு வாய்ப்பு அதிகம்.சகோதரியின் குழந்தையை பார்த்துக் கொள்வதில் அவனுக்கு ஏற்படும் சிரமத்தை சமுதாயம் உணர்ந்திருந்தது.
கழுத்தைச் சுற்றி மாலை யோடு பிறந்த குழந்தைகள் சில நேரங்களில் நன்றாக இருக்கும். அதற்கு கடைப்பிடிக்கப்பட்ட சம்பிரதாயங்கள் (தண்ணீரில் முகத்தினைப்பார்த்தல் போன்ற )என நம்பப்பட்டதற்கு வாய்ப்பு உண்டு
சில இடங்களில் மாமன் தங்கச்சங்கிலி போட்டு பிறகு தான் குழந்தையை பார்க்க வேண்டும் என்று கூட சொல்லுவார்கள். இது பழமொழி கூட சேர்ந்த வசூலுக்கான புதுமொழியாக கூட இருக்கலாம்
மாலை சுற்றி பிறந்தால் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதை தான் இந்த பழமொழி விளக்குகிறது சகோதரியின் குழந்தையை தன்னுடைய கடமைகளில் ஒன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதும் இப்பழமொழியில் மூலமாக வெளிப்படுகிறது
