childhealthtoday

childhealthwiki

இப்போதைய மக்களுக்கு காலரா நோய் என்றால் என்ன அது அவ்வளவு மோசமான தானதா? அதன் விளைவுகள் எப்படி இருக்கும் ?ஏன் அதைக் கண்டு அந்த காலத்தில் மக்கள் மிகவும் பயந்தார்கள் ?என்பது தெரியாது .அதை தெரிந்து கொள்வதற்கு உதவ காலரா பற்றிய ஒரு முன்னோட்டத்தை இப்போது தருகிறேன்

காலரா நோயை உருவாக்கும் விப்ரியோ காலரா என்பது உடலை பாதிக்கும் ஒருவகையான நுண்ணுயிர்த் தொற்று ஆகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை
அனைத்து வயதினரையும் பாதிக்ககூடும்.பெரும்பாலான சமயங்களில் மிதமான வயிற்றுப்போக்கு மட்டுமே ஏற்படுகிறது அல்லது அறிகுறிகள் இல்லாத நோயாகப் பாதிக்கிறது ஆனால் நூறில் ஐந்து அல்லது பத்து பேர்களுக்கு அதிகப் பாதிப்பினை ஏற்படுத்துகிறது நோய்க்கிருமி தாக்கிய 6 மணிநேரம் முதல் 5 நாட்களுக்கு இப்பாதிப்பு இருக்கலாம். அதிக திரவ இழப்பு ,அதனுடன் ரத்தத்தில் உள்ள உப்புச் சத்து இழப்பு ,நீரிழப்பு இவைகளின் மூலம் உயிருக்கே உலைவைக்கும் வைக்கப்பார்க்கும்.
சரியான நேரத்தில் போதுமான உப்புச் சத்து கரைசல் அல்லது ரத்த நாளம் மூலம் குளுக்கோஸ் தராவிட்டால் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்


காலரா வயிற்றுப்போக்கு அறிகுறிகள்:
1.  மிகக்குறுகிய நேரத்தில் அதிக அளவு வயிற்றுப்போக்கினை திடீரென்று ஏற்படும்
2. மலமானது  அரிசிக்கஞ்சி போல தோற்றமளிக்கும்.. மீன் இறைச்சி நாற்றம் அடிக்கும்
3.நீர்இழப்பின் காரணமாக தோல் உலர்ந்து இருக்கும் .நாக்கு, வாயின் உள்பகுதி வறண்டுஇருக்கலாம் அதிகத் தாகம் எடுக்கும் உங்கள் தோல் உலர்ந்தும் கண்கள் உயிரற்ற போலவும் தோன்றும். அதிக களைப்பு தூக்கம் அடி வயிறு வலி குமட்டல் வாந்தி எடுப்பது இருக்கும்
4. நோய்க்கிருமி கலந்த குடிநீரை குடிப்பதாலும் உணவை உண்பதாலும் ஒருவருக்கு நோய் ஒட்டிக் கொள்ளலாம். பச்சையான, சமைக்கப்படாத உணவுகள், பழங்கள், திரவங்கள் மற்றும் காய்கறிகள் மூலமாகப் சுலபமாகப் பரவும். உணவு தயாரிப்பு அல்லது சேமித்து வைக்கும் போதும் நோய்க்கிருமிகள் ஒட்டிக் கொள்ளலாம்


காலரா நோய் தொற்றுக்கு உள்ளாகிய ஒருவருடைய மலத்தின் மூலம் தான் கிருமிகள் மற்றவர்களுக்கு பரவும் விப்ரியோ காலரே சாக்கடை நீர் குடிநீர் குழாய்கள் கலக்கும் போதும் பரவும்.கடலோர பகுதிகளில் உள்ள நீர், ஆற்றுநீர் நிலைகளில் இக்கிருமி இருக்கலாம்
அதிகக் கூட்டம், சுகாதாரமற்ற இடங்கள், உணவு மற்றும் குடிநீர் பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் பகுதிகள், நெரிசலான இடங்கள், கழிவு நீரும் குடிநீரும் கலக்கும் பகுதிகள் ஆகிய இடங்களில் இன்னும் வெகு தீவிரமாகப் பரவும். அதிக ஜனத்தொகை உள்ள இடங்கள், அகதி முகாம்கள் இயற்கைச் சீற்றங்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ள பகுதிகள் ,புனிதப் பயணமுகாம்கள் ஆகிய அதிக மக்கள் தொகை கூடும் இடங்களில் இந்நோயின் பாதிப்பு  அதிகம்


உணவு தயாரிப்பதற்கு முன்பும் ,சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் கைகளை முறையாக கழுவ வேண்டும். சுத்தமாக உணவை தயாரிக்க வேண்டும். குடிக்கும் நீர் கொதிக்க வைக்கப்பட்டு அல்லது சுத்தகரிக்கப்பட்டிருக்க வேண்டும். கழிவறைக்கு போய்வந்த பின்னர் கைகளைச்சுத்தம் செய்ய வேண்டும்.

காலராவை தடுப்பதற்கு தடுப்பு மருந்துகள் உள்ளன. காலரா தடுப்பு மருந்து ஊசி ஆகவும் வாய்வழி மருந்தாகவும் கிடைக்கிறது ஒரு வயதுக்கு மேலே உள்ள அனைவருக்கும் இந்தத் தடுப்பு மருந்துகளை தரலாம். அதிகம் காலரா நோய் தொற்று ஏற்படும் பகுதியில் உள்ளவர்களுக்கு மட்டும் இந்த தடுப்பு மருந்து பரிந்துரைக்கப்படுகிறது


காலரா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன வகையான மருத்துவ சிகிச்சை தேவை?

காலரா நோய் ஏற்பட்டவர்களுக்கு அதிக நீரிழப்பு, உப்புசத்து இழப்பும் ஏற்படுகிறது. எனவே ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டுவது தான் மருத்துவ சிகிச்சையின் முக்கிய குறிக்கோளாகும். அதற்காக உப்பு சர்க்கரை கரைசல் அல்லது ரத்த நாளங்கள் வழியே குளுக்கோஸ் ஏற்றுதல் மூலம் இழந்த நீர்ச்சத்து, உப்பு சத்துக்களை உடலுக்கு திருப்பி செலுத்தலாம். காலரா நோய் கிருமிகளை ஒழி
க்கும் நுண்ணுயிர்க்கொல்லி பாதுகாப்பானது.

நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் தடுப்பு மருந்துகள் சிலருக்கு காய்ச்சல், அடி வயிற்று வலி ,வாந்தி, குமட்டல் ,இருமல் மற்றும் வாய் உலர்ந்து போவது என இது தடுப்பு ஊசி எடுத்துக் கொண்டதற்குசில பிரச்சனைகளை ஏற்படலாம். ஆனால் தடுப்பு ஊசி, எந்த ஆபத்தான பக்க விளைவையும் ஏற்படுத்தாது

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading