குழந்தைகளுக்குப் பற்காறை என்பது சாதாரணமாக வரும். கத்தரிக்காய் சாப்பிட்டால் பற்காறை வரும் என்பது எல்லாரும் சொல்வது.பற்காறைகள் எந்த காரணங்களால் உருவாகின்றன? அதை எப்படி சரி செய்வது? அதனால் என்ன பிரச்சனைகள் ஏற்படலாம்? என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்

வாய்,பல், ஈறு ஆகியவைகளைச் சுத்தமாக வைத்திருக்க தினமும் பல் துலக்கு கிறோம் .சிலர் பல்பொடி, பலர் பற்பசை, வேறு சிலர் வேப்பங்குச்சிகளையும் பயன்படுத்துகிறார்கள். இன்னும் பலர் ,வேதிப் பொருள்கள் நிறைந்த கொப்புளிக்கும் திரவம் ,துணுக்களை நீக்குதல், சுத்தம் செய்த,ல் பல் மருத்துவரிடம் சென்று பல்லுக்கு வெள்ளை அடித்தல் என பலவற்றை செய்கிறார்கள் .இருந்தபோதிலும் பற்காறை சாதாரணமாக ஏற்படுகிறது
என்னதான் நீங்கள் முயற்சி எடுத்தாலும் இயற்கையாகவே நமது வாயினுள் லட்சக்கணக்கான நுண்ணுயிர்கள் உயிரோடுஉள்ளன. நாம் உண்ணும் உணவில் உள்ள புரதம் மற்றும் துணை உணவு ப்பொருட்களோடு ,இவை சேர்ந்து மெல்லிய படலத்தை உருவாகிறது இதனை மேல் படலம் என்பார்கள் பல் அடித்தளம் நிரப்பப்பட்டுள்ள பல்குழி அல்லது பல்லில் செய்யப்பட்டுள்ள பல்வேறு ஒட்டுப்பொருட்களின் மேல் இது அப்பிக் கொள்கிறது. இந்த படலம் பாக்டீரியா நுண்ணுயிர்களை சுமந்து இருக்கும். இது பல்லின் எனாமல் ஐ சேதப்படுத்துகிறது பிறகு அது பற்குழி ஆக மாறுகிறது. எனவே இந்த பல்லின் மேல் படலத்தை நீக்கிவிட்டால் பற்குழி ஏற்படுவதற்கும் வாய்ப்பு குறைவு இரு நோய்களும் ஏற்பட வாய்ப்பு குறைவு..சில நேரங்களில் இது பல்லிலேயே நிரந்தரமாக தங்கி விடுகிறது. கெட்டியாகி காறையாக மாறிவிடுகிறது இந்த காறையை கால்குலஸ் எனக் கூறுவதுண்டு ஈறுக்கு மேலேயும் கீழேயும் இது உருவாகலாம் .இது கரடு முரடாகவும்இருக்கும் ஈறு பின்வாங்கும்.ஈறு நோய்கள் இதனால் வரும்.

பல் மருத்துவர் சிறப்பு கருவிகளின் மூலம் இதனை அகற்றி விடுவார்
கடினமாக உள்ள மேல் படலத்தை நம்மால் சுத்தம் செய்ய முடியாது. ஈறுக் கோட்டிற்கு மேலே உள்ள படலம்,அதிலுள்ள பாக்டீரியா மூலம் ஈறுகளைப் பாதித்து ஈறு நோய்களை உருவாக்குகிறது இது வராமல் தடுப்பதற்கு ஒழுங்காக பல் துலக்குதல் ,இடுக்குகளில் உள்ள அழுக்குகளை நீக்குதல் ,நுண்ணுயிர்க் கொல்லி கொப்பளிப்பான் உபயோகப்படுத்துதல் மற்றும் பல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுதல் ஆகியவை உதவும் .
சில உணவு பொருட்களில் பலவித நிறமிகள் இருக்கின்றன .அவை தான் பற்காரைகளுக்கு முக்கிய காரணம் .அவை பல், ஈரு , எனாமல் உள்ளிட்ட பகுதிகளைப் பாதிக்கும் . சொல்லப் போனால் ஏதாவது உணவுப்பொருள் ,உங்கள் துணியை நாக்கை நிறமாற்றம் செய்கிறது என்றால் அது பல்லையும் நிற மாற்றம் செய்யும்என எடுத்துக்கொள்ளலாம்
1.டீ மற்றும் காபி உள்ள டேனின் பற்களை மங்கச் செய்யும்
2. கொக்கோகோலா உள்ளிட்ட மென்பானங்கள் அதில் உள்ள அமிலத்தன்மையுடள் சேர்ந்து புள்ளியினை உருவாக்கும்.எனவே கோலா பானங்களை குறைக்கவும்
3. பழச்சாறு. திராட்சை மற்றும் கொடிவகை ரசங்கள் பல்லில் நிற நிற மாற்றத்தை ஏற்படுத்தும்

4. தக்காளி சாஸ், தக்காளியில் உள்ள சிகப்பு நிற நிறமி, பல்லையும் பதம் பார்க்கும்
5. மசாலா சேர்த்த உணவு, பொன்னிற வண்ணத்தில் உள்ள மசாலா பாதிக்கும
6. பீட்ரூட்டின் சிகப்பு நிறம் பல்லையும் சமயங்களில் சிறுநீரையும் சிகப்பு நிறத்தில் வண்ணமடிக்கும்
7.கத்தரிக்காய் நிறமாற்றத்தினை தரலாம்.(அந்த கால சீன அழகிகள் பல்லினைப் கத்தரிப்பூ நிறத்தில் பளிச்சிட கத்தரிக்காயினை தேய்த்த வரலாறு இருக்கிறது!!)
பற்காறை ஏற்படுவதைத்தடுக்க என்ன செய்யலாம் ?
அளவை குறைக்கவும் .சாப்பிட்டவுடன் வாய் கொப்பளிக்கவும் பற்பசைஉதவலாம் .உமிழ்நீரை அதிகப்படுத்தும் மெல்லும் பசைகள் சாப்பிடலாம். ஒரு நாளைக்கு இரு முறை பல் விளக்கவும்
இதற்கு மேலும் உங்களுக்கு பிரச்சினை இருந்தால் உங்கள் பல் மருத்துவரை பார்க்கவும்.
