childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

நல்வாழ்வுப்பாக்கள்

1 min read

1.சக்கை உணவே நோயாகும் :வேண்டும்

ஆக்கை உயிர் பெற நல்லுணவு

2. சர்க்கரையும் உப்பும் கொழுப்பும் நம்மை

நிற்கதி யாக்கும் என்றே சொல்

3. தொடுதிரையும் விடாக் காட்சியுடிணைந்து

தருமே பல பிணி

 4. தூங்குக தூங்கற்பாலன. அஃதின்றில்

நீங்குமே உடல் நலம்

5. தாய்ப்பால் ஊட்டல், வீட்டு உணவு ,வளர்ச்சி நோக்கல் ,

தடுப்புமருந்து தருமே குழந்தை நலம்

6. உண்ணுக சத்துணவு அஃதின்றில் பிணிவருமே

உண்ணும் பிறர்க்கு

7. நல்லுறக்கம் நார்ச்சத்து நீர் உடற்பயிற்சி

மலச்சிக்கல் தீர்க்கும் இவை நான்கும்

8. உப்பும் கொழுப்பும் இனிப்பும்

தப்பே என்று சொல் உரத்து

9. சர்க்கரையும் கொழுப்பும் உப்பும் நம்மை

நிற்கதியாக்கும் என்றே நவில்

10. கைச்சுத்தம், முகத்துணி, தடுப்பூசி, தனிமனித

இடைவெளி தவிர்க்கும் சளி

11. எல்லாப் பாலும் பாலல்ல:தாயின்

பாலே சேய்க்குகந்த பால்

12. விரையும் மூச்சும் விடாத காய்ச்சலும்

குறையும் வளியும்    தீவிரமூச்சுத்திணறல்.

13.நீரிழப்பும் தாது உப்பு பிறழ்வும்தான்

      வருமே வயிற்றுப்போக்கால்

14. காய்ச்சல் வரினும் கலங்கற்க

கையில்      பாராசிடாமல் இருப்பின்

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading