
குழந்தையின் கவலை
எனது தாய் முனகினாள்: என் தந்தையோ அழுதார்.
மேகத்தில் மறைந்திருந்த நண்பனைப் போல் இருந்த நான் அபாயகரமான உலகிற்குள் தாவிக் குதித்தேன்: தனியனாய். நிர்வாணமாய் ,கதறிக்கொண்டே..
தந்தையின் கைகளில் திணறி, போடப்பட்ட துணிகளின் அழுத்தம் மீற,பிணைக்கப்பட்டு ஓய்ந்த நான், தாயின் மார்பகத்தில் பால் ஊட்டுவது தான் மிகச் சிறந்தது என உணர்ந்தேன்.
வில்லியம் பிளேக்.
Infant sorrow
தாயின் உலகு
தாயின் உலகு
2. என் அம்மா என்னை அவளுடைய உலகம் என்கிறாள்.
மிகப்பெரிய பரந்த உலகு!!!
இது உங்களுக்கு சிரிப்பை தருகின்றது அல்லவா ?ஏனெனில் இவ்வுலகில் நான் ஒருவன் மட்டுமே.
வடக்கில் முடிக்கற்றைகளாலும்(நானும் அதை வெறுக்கிறேன்)
தெற்கில் அழுக்கான காலுறைகளாலும், கிழக்கிலும் மேற்கிலும் என்னால் எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் வரையிலும் என் உலகு விரிந்துள்ளது
இது மற்றவர்களுக்கு சொல்லித்தர நகைப்புக்குரிய விஷயமாகவல்லவா இருக்கிறது?
ஒவ்வொரு தாயின் அளவுகோலின்படி என் அம்மா நான்தான் அவள் உலகம் என்கிறாள்.
இருந்தபோதிலும்,பள்ளிக்கு நான் செல்ல ஆரம்பிக்கும்போது வேறுவிதமாக உலகைப் பற்றி கற்றுக் கொள்வேன்
Anna bird stewart Geography
