பெற்றோர்களே குழந்தை வளர்ப்புல நமக்கு நிறைய மூடநம்பிக்கைகள் ,கட்டுக்கதைகள் உண்டு .அதைப்பற்றி பேசலாம்
1.நம்ம ஊர்ல ஒரு நம்பிக்கை. பிறந்தவுடன் குழந்தைக்கு தாத்தா பாட்டி என யாராவது ஒருத்தர் தேன் குடுக்க வேண்டும் . அப்பத்தான் அந்த குழந்தை நல்லா பேசும் வைக்கிறவங்க மாதிரி அந்த குழந்தை நல்லா வளரும் .தாய்ப்பால் கொடுக்கிறதுக்கு முன்னாடி கட்டாயம் கொடுக்கணும்னு நிறைய பேரு தயாரா இருப்பாங்க
தேனையும் வாங்கி வச்சிருப்பாங்க 1தயவு செய்து தராதீங்க !ஏன்னா பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே தரவும். பிறந்த குழந்தைக்கு தேன் சக்கரை தண்ணீர்ர் தருவது கூடாது
2.பிறந்த குழந்தைக்கு குடம் குடமாக தண்ணீர் ஊற்றுவதோ கொதிக்கக் கொதிக்க தண்ணீர் ஊற்றுவதோ கூடாது குழந்தைக்கு பிரச்சனைகளை உண்டு பண்ணும். ஒரு சொம்பு ரெண்டு சொம்பு தண்ணீர் போதும் அதிக தண்ணீர் ஊற்றுவது கூடாது
3.இதுல ஸ்பெஷலிஸ்ட் இருக்காங்க அவங்க குழந்தையை குளிக்க வைப்பதற்கு முன்னாடி தலையை இந்த மாதிரி நீவுவாங்க .அப்படி செய்தால் தலை சரியான அழகான வடிவத்தில் வந்திரும்னு வேற அவங்க கதை சொல்லுவாங்க .நாம புரிஞ்சிக்க வேண்டியது நம்ம தலை எப்படி இருக்கப்போவது அப்படிங்கறது முன்னாடியே தலைவிதியில,நீவறுதலே நிர்ணயிக்கப்படுவதில்லை நம்ம ஜெனிட்டி கோட்ல தான் இது நிர்ணயிக்கப்படுது பாரம்பரிய மரபணுக்கள் மூலமாக. அதனால என்ன நீவுனாலும் தடவுனாலும் என்ன போட்டாலும் தலையினுடைய அமைப்பு மாறாது
4. குளிக்கும் போது மூக்கு எடுத்து விட்டால் எடுப்பா வரும்னு நம்பிக்கை . அப்படி மூக்கு எடுத்து விடுறதுனால எடுப்பா வரதா இருந்தா எல்லாத்துக்கும் ஸ்ரீதேவி மூக்கு வந்துவிடும்
5.கண்மை தீட்டிய குழந்தைகளின் கண்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் ஆனால் கடைகளில் விற்கும் கண் மைகளில் காரீயம் கலந்திருப்பதால் இரத்தத்தில் உறிஞ்சப்பட்டு உடலில் கலந்து பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம் கண் திருஷ்டி வராமல் செய்வது, கண் நன்றாக தெரிவது காட்ராக்ட் வருவதைத் தடுப்பது ஆகியவைகளைக் கண் மை செய்யாது
6.மொட்டை அடித்து காது குத்துவது என்பது சமய சமுதாயம் குடும்பவழக்கம் சார்ந்த விஷயம் .அறிவியல் ரீதியாக இதுவும் நிரூபிக்கப்படவில்லை காது கேட்பதற்கோ மூளை வளர்ச்சிக்கோ அறிவுத்திறன் முன்னேறுவதற்கோ காது குத்துதல் உதவாது ஒரு இது நம்பிக்கை சார்ந்த விஷயம்
7. சில சமூகத்தினர் ஆண்குறியின் முன் தோலினை சுன்னத் செய்வதின்
மூலம் நீக்குவார்கள் இதுவும் மதம் சம்மந்தமான விஷயம் தான் எனவேஅனைவரும் செய்ய வேண்டியது இல்லை. குழந்தையின் ஆண்குறி முன் தோலை பின்னிழுப்பது தேவையில்லாத விஷயம்.இப்படிச்செய்தால் நோய்த்தொற்று அல்லது வீக்கம், வலி ஏற்படலாம் .சிறுநீர் போகும்போது ஆண்குறி முன் தோல் புடைப்பது என்பது பிரச்சனை இல்லை சிறுநீர் வரும் துவாரம் தெரியும் அளவு முன் தோல் விலகி இருந்தால் போதும் குழந்தை வளர வளர தோல் தானே பின்னே போகும்போது இது சரியாகி பிரச்சினை இல்லாமல் முடியும் .
8.பிறந்த குழந்தை, மலம் கழிப்பது ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடும் சில குழந்தைகள் ஒரு நாளைக்கு பத்திலிருந்து பதினைந்து முறை கூட போகலாம் .சிலர் ஆறு ஏழு நாட்களுக்கு ஒரு முறை கூட போகலாம் வெளிவரும் மலம் தேனடை போல இருந்தால் கவலைப்பட வேண்டியது இல்லை ஆறு நாட்கள் வரவில்லை என்று புளியம்விரார் மற்றும் வெற்றிலைக்காம்பு, மருந்துகளை வைப்பது( மருத்துவ ஆலோசனை இன்றி)
தவறு. இதனால் ஆசனவாயில் புண் ஏற்பட்டு பிரச்சனைக்குரிய சம்பவமாக மாறிவிடும்
9.சில குழந்தைகள் முக்கும். முணாகும் கக்கும் கதக்கும் முறுகும் .முனகும் அழுகும் இதில் தவறில்லை அந்தக் குழந்தை நிம்மதியாக இருக்கும் .பால்குடிக்கும் .தூங்கும் . எந்த மருந்தும் இக்குழந்தைகளுக்கு தேவைப்படாது. போதுமான எடை ஏறிக் கொண்டிருக்கும்
அழும் குழந்தைக்கு ஏதாவது மருந்து தேவைப்படுமா ?வசம்பு தரவு கொடுக்கலாமா ?என பெற்றோர்கள் நினைப்பர். இந்த குழந்தைகளுக்கு எதுவும் தர வேண்டாம் தாய்ப்பால் குடிக்கும் சில குழந்தைகளுக்கு இது இயல்பான விஷயம் இதில் எந்த பிரச்சனையும் இல்லை எந்த மருந்தும் தேவையில்லை
10. ஆறு மாதம் ஆன பிறகு குழந்தைக்கு தாய்ப்பாலுடன் இனிப்பு காரம் மசாலா சேர்க்காத வீட்டு உணவினை இணை உணவாகத் தந்தால் போதும் கடைகளில் விற்கும் டப்பா உணவுகளில் நுண் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் தான் இருக்கின்றன. உணவின்
பகுதிகள் கூறுகளாக தான் இருக்கிறது இனிப்பு சேர்த்திருப்பதால் இந்த உணவுகளை சாப்பிடும் குழந்தைகள் அதை மட்டும் விரும்பிச் சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள் சர்க்கரை அதிகமாக இருப்பதால் குழந்தை எடை அதிகமாகும்
11.இதைப் போலத்தான் பருப்பு கொடுத்தால் ஜீரணமாகாது கீரை கொடுத்தால் வயிற்றால் போகும் என்று நம்பிக்கைகள் நிலவுகின்றன. குழந்தையின் வாயில் சுரக்கும் உமிழ்நீரும் இரைப்பையில் குடலில் சுரக்கும் சீரண நீர்கள் உணவினை ஜீரணித்து விடும் எனவே எந்த சீரண மருந்தும் ஓமம் வசம்பும் தரக்கூடாது
12தொப்புள்கொடி விழுந்த பிறகு ஒரு பொட்டு ரத்தம் அந்த இடத்தில் இருக்கும். இதைப் பார்த்து நிறைய பேர் பயப்படுவார்கள் கவலைப்பட வேண்டியது இல்லை தொப்புள்கொடி விழுந்த பிறகு பவுடர் தேங்காய் எண்ணெய் சுருட்டுச் சாம்பல் விபூதி ஆயின்மென்ட் ஆகியவைகளை வைக்கக்கூடாது எதுவும் செய்யாமல் இருந்தால் தொப்புள் கொடி விழுந்ததபிறகு சரியாக காய்ந்துசுருங்கி விடும். இதை எல்லாம் செய்யும்போது நோய்த்தொற்று சரியாகாது.காயாது .நீர் கசியும்.ஆறாது
