குழந்தைகளின் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படலாம் .பெரியவர்களைப் போல அதிகமான பேருக்கு கற்கள் ஏற்படுவது இல்லை. ஏனெனில் இயற்கையாகவே குழந்தைகளுக்கு சிறுநீரில் அதிகமாக உள்ள சிட்ரேட் மற்றும் மெக்னீசியம் கற்கள் உருவாவதை தடுத்து விடும். குழந்தையின் சிறுநீரக மண்டலத்தில் பிரச்சனை ஏதாவது இருந்தாலும் குழந்தையின் மெட்டபாலிக் பிரச்சினை ஏற்பட்டிருந்தாலும் நோய்த் தொற்று அடிக்கடி ஏற்பட்டாலும் பாதிப்பு வரும் வாய்ப்பு உண்டு. சாதாரணமாக கற்கள் ஆக்சலேட் மற்றும் பாஸ்பேட் வகைகளாகும்.குழந்தைகளுக்கு வயிறு அல்லது விலா ப் பகுதியில் வலி சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், நோய் தொற்று ஏற்பட்டு இருந்தால் அதிக காய்ச்சல் இரத்தமாக சிறுநீர் கழிதல் ஆகியவை இருக்கலாம். கற்களின் அளவைப் பொறுத்து சிகிச்சை மாறும். மிகச் சிறிய கற்கள் தானாகவே வெளியேறிவிடும் அதிக நீரினை குழந்தைகள் அருந்த வேண்டும் கற்களை ஏற்படுத்தக்கூடிய ஆக்சலேட் மற்றும் யூரிக் அமிலம் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை தவிர்த்தால் போதும். வழக்கமான உணவுகளில் மாற்றம் தேவையில்லை. அதிகப் புரதம் அதிகக் கொழுப்பு மற்றும் மிக அதிகஅசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. கீரை வகை உணவுகளையும் அதிகப் பால் பொருட்களயும் தவிர்க்கலாம் சிறுநீர் நோய்த் தொற்று சரி செய்யப்பட வேண்டும். வலி அதிகமாக இருந்தால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வலி நிவாரணிகள் தரப்பட வேண்டும். ஆறு மணி நேரத்திற்கு மேல் சிறுநீர் கழிக்கவில்லை என்றாலோ அதிகக் காய்ச்சலோடு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தாலோ தொடர்ந்த வாந்தி, வயிற்று வலி மற்றும் நீர் இழப்பு இருந்தாலோ உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும். பெரிய கற்களுக்கு லித்தோடிரிப்ஸி யின் மூலம் உடைக்கலாம் அல்லது பிசி என்.எல் மூலம் கற்களை வெளியே எடுக்க இயலும். யூரிட்டிராஸ்கோப் வழியாக நீர்த் தாரை வழியேஉள்ளே செலுத்தி கற்களை வெளியே எடுக்க முடியும்
