1. உடல்வளர்ச்சி நல்வாழ்வின் அறிகுறி. உங்கள் குழந்தையின் எடையினைத் தொடர்ந்து கண்காணிப்பதுவே ஆரோக்கியத்திற்கான வழி 2. குழந்தையின் பிறப்பு எடை ஐந்தாவது மாதத்தில் இரு மடங்காகவும், ஒரு வயதில் மூன்று மடங்காகவும், இரண்டு வயதில் நான்கு மடங்காகவும்அதிகரிக்கும். 3. குழந்தையின் வளர்ச்சிக்கான பாதையில் எடை, உயரம் மற்றும் தலைச் சுற்றளவு இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும் 4.ஐந்து வயதிற்கு கீழே உள்ள குழந்தையின் கைச் சுற்றளவு 14 சென்டி மீட்டருக்கு கீழே இருந்தால் ஊட்டச்சத்து குறைவு என்பது நிச்சயம் 5.முதல் வருடத்தில் இரு மாதங்களுக்கு தொடர்ந்து ஒரே எடை இருப்பின் குழந்தைக்கு ஏதோ ஒரு பிரச்சனை என்பது உண்மை. 6.. நோயுற்ற போது இழந்த எடையினை மீண்டும் அடைந்தால் தான் நோய் குணமாகிவிட்டது எனச் சொல்ல முடியும்.வழக்கமான உணவுடன் மேலும் ஒரு முறை உணவு தரவும். இதுஇழந்த இடையினை திரும்பப் பெற உதவும் 7. சிறுகச் சிறுக அடிக்கடி உணவு தருவது உடல்நலமில்லாமல் பசி குறைந்திருக்கும்போது சாப்பிட வைக்கஉதவும். 8. குழந்தையின் உடல் ,மனம் மற்றும் உணர்வுபூர்வமான வளர்ச்சிக்கு அடிக்கடி பேசவும். விளையாடவும் .தொடர்ந்து அன்பு காட்டவும். 9.. எடைக்குறைவு அண்மைக்கால சத்து குறைவினையும் உயரக்குறைவுநீண்ட கால சத்துக் குறைவடையும் காட்டும் 10. நாய்க்கடி பட்ட இடத்தை தண்ணீர், சோப்பு கொண்டு கழுவவும்.மேலே எதுவும் போடக்கூடாது.வெறி நாய்க்கடி உடனடி எதிர்ப்பு/தடுப்பு மருந்து தரவேண்டும் 11. விலங்குகள் செல்லப்பிராணிகளின் கழிவுகளிலும் கிருமிகள் உண்டு குழந்தையை பாதிக்கலாம் 12. .கழிவறைகளை உபயோகப்படுத்தவும். உணவு மற்றும் நீரின் சுத்தம் அவசியம் . உண்ணும் உணவினைத் தொடும் முன்னும் கை கழுவவும். ஈக்களை கட்டுப்படுத்தவும் 13. தேள் கடித்த குழந்தைக்கு வலி அதிகமாக இருந்தாலோ,உடல் குளிர்ச்சி அடைந்தாலோ, மயக்கமடைந்தாலோ வேர்த்தாலோ உடனடியாக மருத்துவமனைக்கு கூட்டிச்செல்லவும் 14. .கஞ்சி கூழ் ஆகியவற்றிற்கு எண்ணெய் நெய் சேர்ப்பது வெப்ப சக்தி அதிகரிக்கும் 15. பழக்கப்படுத்தாத உணவினை குழந்தை சாப்பிடாது 16..சரியாக படிக்காத குழந்தைக்கு கண்பார்வை திறன் அல்லது கற்றல் குறைபாடு உள்ளதா என பரிசோதிக்கவும் 17.மூக்கை சிந்துவது உறிஞ்சுவது தொண்டை கமறுவது காதில் நோய்த்தொற்று தந்துவிடும். மூக்கினை துடைத்து விடவும் 18. மருந்து பெட்டியினுள் கோடிட்ட அளவு வரை தண்ணீர் ஊற்றினால் மட்டும் போதும் முழு பாட்டில் நிரப்ப வேண்டாம் 19. சளி காய்ச்சல் காற்றின் மூலமும் சளிப் பிடித்தவர்கள் உபயோகப்படுத்திய பொருட்கள் மூலமும் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவும் 20.காது குடைவது காதுக்குள் எண்ணெய் விடுவது பின்னூசி ஹேர் பின் போடுவது பஞ்சை வைத்து சுத்தம் செய்வது வேண்டாம் 21. வைன் தருவதால் பசி வராது. டாஸ்மாக் போதை மேல் ஆசை தான் வரும் 22. கசகசா, வசம்பு ஆகியவை குடல் இயக்கத்தை பாதிக்கும் எனவே தர வேண்டாம் 23. குடலேற்றம், குடலிறக்கம் இரண்டும் ஹெர்னியா எனப்படும். இது ஆபரேஷன் மூலம் தான் சரியாகும் 24. கழுத்தை நெட்டை எடுப்பதோ குழந்தையை வேட்டியில் போட்டு உறம் எடுப்பதோ கூடாது 25. டானிக் தருவதால் எடை ஏறாது. சத்துக் குறைபாடு வேண்டுமானால் சரியாகலாம் உணவு உண்டால் மட்டுமே எடை ஏறும் 26. தலையினை நீவுவது தொட்டிலில் போடுவது ஆகியவைகளினால் தலையின் அமைப்பு மாறாது 27.டப்பாவில் அடைத்து விற்கப்படும் உணவுகள் எல்லாம் மருந்து சேர்க்கப்பட்டு இரண்டு வருடம் கெடாமல் இருக்கப் பதனம் செய்யப்பட்டவை. சோறு .கோதுமை சோறு .உப்புமா இவையுடன் பருப்பு, காய் ,பழங்கள் சேர்ந்தவைதான் 28 வகையான உணவுகளாக விற்கப்படுகின்றன 28. நோயின்றி இருக்க எடை மட்டும் ஏறினால் போதாது எல்லா சத்துக்களும் வேண்டும் 29. தடுப்பூசியின் வலியினை குறைக்க தடுப்பூசி போடும் முன்னரும் பிறகும் தாய்ப்பாலைத் தரச்செய்யவும். வலி குறையும் .மறத்துப் போகும். குழந்தையும் உறங்கும் 30. குழந்தை நன்றாக இருக்கிறது என மருந்து தருவதை நிறுத்தாமல் மருத்துவர் குறிப்பிட்ட நாள் வரை தரவும் 31. குழந்தைக்கு மூன்று நான்கு வயதிற்குள் கண் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. பார்வை குறைபாடு இருந்தால் கண்ணாடி போட்டு சரி செய்ய முடியும் 32. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல முன்னுதாரணமாக இருக்கவும். மின்னணு சாதனங்களை குறைவாக உபயோகிக்கவும் சமூகவலைத்தளங்களில் நண்பனாக உலவவும் 33. இணையதளங்களில் பாதுகாக்கப்பட்ட அந்தரங்க தகவல்கள் என ஏதுமில்லை. பதிவேற்றும் படங்கள், கருத்துக்கள், நம் நடத்தை, உடனடியாக மின்னணு தடமாக என்றும் நிலைத்திருக்கும் என்பதனை சொல்லித் தரவும் 34. தினமும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் குழந்தையை வீட்டிற்கு வெளியே போய் வெளிச்சத்தில் விளையாட சொல்லவும் .பல்வேறு வகையான விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தவும். விளையாடுவதற்கான சூழ்நிலையை உருவாக்கவும் .கண்காணிப்போடு சாகச சவால்களை எதிர்கொள்ள உதவவும் 35.போதுமான தண்ணீர் குடிக்கத் தரவும் மாசற்ற காற்றை சுவாசிக்கவும் ஓய்வெடுக்கவும் பழக்கவும் .பழங்கள் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும். முழு தானிய உணவு வெள்ளை மாமிசம் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம். சரியான நேரத்தில் தூங்க உதவவும் 36. கழிப்பறையை உபயோகித்தபின் குழந்தை சோப்பு போட்டு கைகழுவ சொல்லித் தரவும் 37. மூன்று வயது வரை புளோரைடு இல்லாத பற்பசையையும் 5 வயது வரை குழந்தைகளுக்கான பற்பசையையும் ஆறு வயது முதல் புளோரைடு சேர்த்த பற்பசையையும் பயன்படுத்தலாம் 38.குழந்தையின் வளர்ச்சிக்கு நல்ல தூக்கமும் ஓய்வும் அவசியம். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் படுத்து தூங்கி காலை எழுவதினைப் பழக்கமாக்கவும் 39. மருந்துகளை குளிர்ந்த வெளிச்சம் படாத ஈரப்பதம் இல்லாத இடத்தில் வைக்கவும்.அசுத்தமான,ஒழுகிய மீதமுள்ள மருந்துகளை உபயோகிக்க வேண்டாம்
