childhealthtoday

childhealthwiki

குழந்தையிடம் கேட்க 100 கேள்விகள்-2

1 min read

poster 5

  1. குழந்தைகளுக்கும் அம்மாவுக்கும் இடையே எவ்வளவு தூரம் கட்டிப்பிடிப்பது முத்தம் கொடுப்பது இருக்க வேண்டும்? அப்பாவோடு குழந்தைகள் எவ்வளவு நெருக்கமாக பழக வேண்டும்?
  2. கடைசி மூன்று வருடங்களில் நம் குடும்பம் மிகவும் மகிழ்ச்சியோடு செய்த விஷயம் எது?
  3. 12 வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கு கூட காதல் வருமா? வராது என்று நினைத்தால் எந்த வயதில் வரும்?
  4. நட்சத்திரக் கூட்டங்களுக்கு பின்னே என்ன இருக்கிறது என்று நினைக்கிறாய்?
  5. உனக்காக உன்னுடைய நண்பன் செய்த அருமையான விஷயம் எது?
  6. உனக்கேன் அடிதடி படம் பிடிக்கிறது ?அல்லது பிடிக்கவில்லை?
  7. வாரக்கடைசியில் குடும்பமாக நாம் செய்யக்கூடிய இரண்டு விஷயங்களைச் சொல்லு?
  8. பெற்றோரின் பிரிவினால் குழந்தைகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள்?
  9. நீ வருத்தத்தோடு இருக்கும்போது நான் அடையாளம் கண்டு கொள்கிறேனா?எந்த அறிகுறிகளை வைத்து அறிய வேண்டும்?
  10. இதுவரை விளையாடாத எந்த விளையாட்டில் நீ சிறப்பாக இருப்பாய் என்று நினைக்கிறாய்?ஏன்?
  11. உனக்குத் தெரிந்தவர்களில் துச்சக் குழந்தை யார்? ஏன்?
  12. சொர்க்கம் இருக்கிறது என்ற நம்பிக்கை உனக்கு இருக்கிறதா? இல்லையெனில் ஏன் ?இருப்பின் அது எப்படி இருக்கும் என்று நினைக்கிறாய்?
  13. அசாதாரணமான, வழக்கத்துக்கு மாறான செல்லப்பிராணி நீ வளர்க்க இருந்தால் அது என்னவாக இருக்கும்? எதற்காக வளர்க்க விரும்புகிறாய்?
  14. எவரைப் போல வேண்டுமானாலும் தோற்றம் இருக்க முடியும் என்றால் யாராக இருக்க விரும்புகிறாய்?ஏன்?
  15. உண்மையாக இருப்பது தான் மிகச்சிறந்த குணம் என்று நினைக்கிறாயா? எதனால்? இல்லையெனில் எதனால்?
  16. பள்ளிக்கூடம் அல்லது விளையாட்டு அல்லது வேறு எங்காவது நீ செய்த பெருமைப்படும் விஷயம் உண்டா?
  17. பெண்கள் அழகாக தோன்றுவது ஒப்பனையுடனா? அல்லது இல்லாமலா ?ஏன்?
  18. திரைப்படம் பார்க்கும் போது ஆண்பிள்ளைகள் அழுவது மோசமா? பரவாயில்லையா ?நல்லதா ?ஏன்?
  19. உன் நண்பர்களின் எவரைப் பற்றி நீ மிகப் பெருமைப்படுகிறாய்?ஏன்?
  20. எப்போதாவது பயப்படும் படியான கனவு கண்டிருக்கிறாயா? எதைப்பற்றியது?
  21. நீ பார்த்த இடங்களில் எது மிக அழகான இடம் ?அதைப்பற்றி விரிவாகச்சொல்ல முடியுமா?
  22. டிவியில் சினிமாவில் நீ பார்க்கும் விஷயங்களில் எது உன்னை சிரிக்க வைக்கிறது?
  23. உனக்கு மிகப் பிடித்த இரண்டு திரைப்படங்களை பற்றி சொல்லவும். ஏன் அவை பிடித்தது?
  24. என்னைப்பற்றி உன் நண்பர்களிடம் எப்படி விவரிப்பாய்?
  25. உன் நண்பனை விட நீ புத்திசாலியாக இருப்பதாக நினைக்கிறாயா ?ஏன் ?ஏன் இல்லை?
  26. நீ பார்த்ததிலேயே உன்னை பயப்படுத்திய படம் எது ?ஏன்?
  1. எப்போதாவது வழி மாறிப் போய் இருக்கிறாயா? அதைப்பற்றி சொல்லு? அப்போது என்ன நினைத்தாய்?
  2. ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் குழந்தைகள் டிவி பார்க்கலாம் என நினைக்கிறாய்?
  3.  எந்த நிகழ்ச்சியை வேண்டுமானாலும் எந்த விஷயத்தைப் பற்றி இருந்தாலும் எந்த வயதில் பார்க்கலாம் என நீ நினைக்கிறாய்?
  4. ஒரு நல்ல அண்டை அயலார்கள் உள்ள இடத்தில் வசிப்பதாக நீ நினைக்கிறாயா? ஆம் எனில் ஏன்? இல்லை என்றாலும் ஏன்?
  5. நம்முடைய மதத்தை தவிர்த்து எந்த மதம் உனது ஆர்வத்தை தூண்டுகிறது? ஏன்?
  6. புதியபிண்ணனி இசையில் எது நல்லது? எது மோசம் ?என நீ நினைக்கிறாய்?
  7. மற்றவர்களை அடிக்கும் அளவிற்கு உன்னுடைய கோபம் எப்போதாவது இருந்ததாக உணர்கிறாயா ?எதனால் ?
  8. அடாவடித்தனமான காரியம் ஏதாவது நினை க்க முடியுமா?
  9. யாராவது பெரியவர்கள் அடித்ததைப் பற்றி எனக்கு சொல்லாமல் இருந்து இருக்கிறாயா?
  10. நீ படித்த சரித்திர நாயகர்களில் எவரைப் போல் இருக்க விரும்புகிறாய்?
  11. திருமணத்துக்கு ஏற்ற வயது எது? ஏன்?
  12. உன்னுடைய மழலையர் பள்ளி பற்றி உனக்கு ஞாபகமுள்ள 3 விஷயங்களை பற்றி சொல்லு?
  13. உன் வகுப்பில் எந்தக் குழந்தைகள் பிரபலமாக உள்ளார்கள்? ஒரு வகுப்பில்பிரபலமாக எந்த விஷயங்கள் வேண்டும் என்று நினைக்கிறாய?

84.மோசமான பொருள்  ஒன்றினை உனக்கு விற்க யாராவது        முயற்சித்திருக்கிறார்களா? அப்படியெனில் அவர்களிடத்தில் என்ன சொன்னாய்?

  1. உன் நண்பன் எதையாவது திருடி இருக்கிறான் !என்பது தெரிந்தால் அதற்கு  உன் எதிர் வினை என்ன?
  2. தாத்தா பாட்டி ,அத்தை, மாமாவிடம் நெருக்கமாக இருப்பதாக உணர்கிறாயா? யாரிடம் மிக நெருக்கமாக உள்ளாய்?

87.நீ எழுதிய எந்த அறிவியல் கட்டுரையை பற்றி பெருமைப்படுகிறாய்!      அதைப் பற்றி சொல்லு?

  1. உன்னுடைய வாழ்க்கையை வேறொருவரிடம் மாற்றிக்கொள்ள முடியுமெனில் யாருடன் மாற்றுவாய்?

89.. வேறு உலகத்தில் இருந்து வந்த ஒருவரிடம் முதலில் பேச வாய்ப்பு கிடைத்தால் என்ன பேசுவாய்?

  1. ஒருநாள்மற்றவர்கள் கண்ணுக்கு தெரியாமல் இருக்க உனக்கு ஒரு வரம் கிடைத்தால் என்ன செய்வாய்?
  2. மிகச் சிறிய வயதில் நடந்த எந்த விஷயம் உனக்கு இன்னும் ஞாபகத்தில் உள்ளது?
  3. நம்முடைய பக்கத்து வீட்டுக்காரர்கள் பயமூட்டும் விதத்தில் இருக்கிறார்களா?
  4. உன்னுடைய ஆசிரியர்களில் ஒருவர் தன்பாலின உறவு கொள்பவர் என்பதை உனக்கு தெரிந்தால் என்ன செய்வாய்?
  5. உனக்கு புரிந்தது போல் நீ நடிக்கும் ஏதாவது விஷயம் உண்டா ?அது என்ன?

95.. நம் வீட்டில் உள்ளவர்களில் யாரைப் போல் நீ இருக்கிறாய் என்று       நினைக்கிறாய் ?ஏன்?

   96.ஆணும் பெண்ணும் ஒரே மாதிரி ஸ்மார்ட் என நம்புகிறாயா? ஏன்? அல்லது ஏன் இல்லை?

  1. உனக்கு அடிக்கடி வரும் கனவு ஏதாவது உண்டா? இருந்தால் அது என்ன?
  2. சிலருக்கு விலங்குகளைப் பிடிக்காது என ஏன் நினைக்கிறாய்?
  3. நம் நாட்டின் தலைவர் எந்த மாதிரியாக இருக்க வேண்டும்?

100.. குழந்தைகளுக்கு ஏன் விளையாட்டு மிக முக்கியமானது?

பி.கு. பல கேள்விகள் நமது ஊரில் நாம் கேட்டது கிடையாது.

 

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading