குடல் புழுக்கள் குழந்தைகளுக்கு அதிகமாக பாதிப்பை உண்டுபண்ணும் பெரியவர்களைநும் பாதிக்கக்கூடிய தன்மைஉண்டு .குடல் புழுக்கள் என்று ஒரு வார்த்தையில் சொன்னாலும் அதில் மனிதனை பாதிக்கக்கூடிய குடல் புழுக்கள்நிறைய இருக்கின்றன.அவைகளில் முக்கியமான சிலவற்றை இப்போது பார்ப்போம்
சாதாரணமாக குழந்தைகளுக்கு முகத்தோல் வெள்ளையாக இருந்தால் அனைவரும் சொல்லக்கூடிய ஒரே மருந்து குடல் புழு மருந்து. இது திரவ மருந்தாகவும் மாத்திரையாகவும் கிடைக்கிறது .கிராம சுகாதார செவிலியர் முதல் குழந்தை நல மருத்துவர் வரை அனைவரும் தருகிறார்கள். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் மருந்து கடைகளிலும் சுலபமாக கிடைக்கக்கூடிய மருந்து அல்பெண்டசோல் என்ற குடல்புழு மருந்து.
பழைய மருந்தான மெபெண்டசோலிலிருந்து வேறுபட்டு ஒருவேளை உட்கொண்டாலே மரங்களிலேயே குடல் புழுக்கிருமிகளை அழிக்கக்கூடிய தன்மை உடையது . எனவே பூச்சி மருந்து என்று பேசிவது அல்பெண்டசோல் க்கு மட்டும் பொருந்தும் மற்ற குடற்புழு மருந்துகளைப்(mebendazole, piprazine citrate , pyrante pamoate, Praziquintal and ivermectin) பற்றி நான் பேசப்போவதில்லை ஏனென்றால் ஒவ்வொரு மருந்தின் அளவும் எவ்வளவு நாள் தரப்பட வேண்டும்? எப்படி தரப்பட வேண்டும் ?என்பதும் வேறுபடும்,
அல்பெண்டசோல் மருந்தாகவும் மாத்திரையாகவும் கிடைக்கிறது இரண்டு வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு மாத்திரையில் பாதி அல்லது மருந்தாக இருந்தால் ஐந்து மில்லி தரப்படும் .இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரு முழு மாத்திரை இதனுடைய அளவு ஆகும் உணவிற்கு முன்பே அல்லது பின்போ எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம் மென்று சாப்பிட முடிந்தால் நல்லது
பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டாவது தடவை 15 நாட்கள் கழித்து மறுபடியும் தரப்பட வேண்டும் வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒரே நேரத்தில் தர வேண்டும் இல்லை என்றால் மற்றவர்களிடமிருந்து குழந்தைகளுக்கு மறுபடியும் குடல்புழுத் தொல்லை வந்துவிடும் குடல் புழுக்கள் முட்டை மற்றும் வளர்ந்த லார்வாக்கள் மூலம் தோலைத் துளைத்துக்கொண்டு உள்நுழைந்து குடலுக்கு வந்து சேரும்
